கல்கி (எழுத்தாளர்)
இயற்பெயர் | இரா. கிருஷ்ணமூர்த்தி R. Krishnamoorthy |
---|---|
புனைபெயர் | கல்கி |
பணி | செய்தியாளர், விமரிசகர், எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | உயர் வகுப்பு |
காலம் | 1921-1954 |
வகை | வரலாற்றுப் புதினம், சமூகப் புதினம், கட்டுரைகள் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (அலை ஓசை) |
பிள்ளைகள் | கி. ராஜேந்திரன் ஆனந்தி இராமச்சந்திரன் |
கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
கல்கி 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி பழைய சென்னை மாகாணத்தில் ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை அருகே அமைந்த பட்டமங்களம் எனும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-இல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1922-இல் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-இல் அவர் நவசக்தி என்னும் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-இல் வெளியானது.
‘கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டமையால், அவருடைய பல படைப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன.
தமிழிசை வளர்ச்சிக்குப் பங்கு
சமசுகிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலகட்டத்தில் தமிழிசைக்காகக் கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகளைத் "தரம் குறையுமா" எனும் புத்தக வடிவில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
படைப்புகள்
புதினங்கள்
- கள்வனின் காதலி (1937)
- தியாகபூமி (1938-1939)
- மகுடபதி (1942)
- அபலையின் கண்ணீர் (1947)
- சோலைமலை இளவரசி (1947)
- அலை ஓசை (1948)
- தேவகியின் கணவன் (1950)
- மோகினித்தீவு (1950)
- பொய்மான் கரடு (1951)
- புன்னைவனத்துப் புலி (1952)
- அமரதாரா (1954)
வரலாற்று புதினங்கள்
- சிவகாமியின் சபதம் (1944 – 1946)[1]
- பார்த்திபன் கனவு (1941 - 1943)
- பொன்னியின் செல்வன் (1951 – 1954)[2]
சிறுகதைகள்
- சுபத்திரையின் சகோதரன்
- ஒற்றை ரோஜா
- தீப்பிடித்த குடிசைகள்
- புது ஓவர்சியர்
- வஸ்தாது வேணு
- அமர வாழ்வு
- சுண்டுவின் சந்நியாசம்
- திருடன் மகன் திருடன்
- இமயமலை எங்கள் மலை
- பொங்குமாங்கடல்
- மாஸ்டர் மெதுவடை
- புஷ்பப் பல்லக்கு
- பிரபல நட்சத்திரம்
- பித்தளை ஒட்டியாணம்
- அருணாசலத்தின் அலுவல்
- பரிசல் துறை
- ஸுசீலா எம். ஏ.
- கமலாவின் கல்யாணம்
- தற்கொலை
- எஸ். எஸ். மேனகா
- சாரதையின் தந்திரம்
- கவர்னர் விஜயம்
- நம்பர்
- ஒன்பது குழி நிலம்
- புன்னைவனத்துப் புலி
- திருவழுந்தூர் சிவக்கொழுந்து
- ஜமீன்தார் மகன்
- மயிலைக் காளை
- ரங்கதுர்க்கம் ராஜா
- இடிந்த கோட்டை
- மயில்விழி மான்
- நாடகக்காரி
- "தப்பிலி கப்"
- கணையாழியின் கனவு
- கேதாரியின் தாயார்
- காந்திமதியின் காதலன்
- சிரஞ்சீவிக் கதை
- ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
- பாழடைந்த பங்களா
- சந்திரமதி
- போலீஸ் விருந்து
- கைதியின் பிரார்த்தனை
- காரிருளில் ஒரு மின்னல்
- தந்தையும் மகனும்
- பவானி, பி. ஏ, பி. எல்
- கடிதமும் கண்ணீரும்
- வைர மோதிரம்
- வீணை பவானி
- தூக்குத் தண்டனை
- என் தெய்வம்
- எஜமான விசுவாசம்
- இது என்ன சொர்க்கம்
- கைலாசமய்யர் காபரா
- லஞ்சம் வாங்காதவன்
- ஸினிமாக் கதை
- எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
- ரங்கூன் மாப்பிள்ளை
- தேவகியின் கணவன்
- பால ஜோசியர்
- மாடத்தேவன் சுனை
- காதறாக் கள்ளன்
- மாலதியின் தந்தை
- வீடு தேடும் படலம்
- நீண்ட முகவுரை
- பாங்கர் விநாயகராவ்
- தெய்வயானை
- கோவிந்தனும் வீரப்பனும்
- சின்னத்தம்பியும் திருடர்களும்
- விதூஷகன் சின்னுமுதலி
- அரசூர் பஞ்சாயத்து
- கவர்னர் வண்டி
- தண்டனை யாருக்கு?
- சுயநலம்
- புலி ராஜா
- விஷ மந்திரம்
விருதுகள்
- சாகித்திய அகாதமி விருது, 1956 - அலை ஓசை[3]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1953, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (ஆளுனர் ஸ்ரீ பிரகாசா தலைமை)
மேற்கோள்கள்
- ↑ "‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு". 2015-03-21 இம் மூலத்தில் இருந்து 2015-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150321073533/http://mdmk.org.in/article/mar09/sivagamiyin-sabatham.
- ↑ "பொன்னியின் செல்வன் புகழ்விழா தில்லி 21.12.2007". 2016-03-05 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305151827/http://mdmk.org.in/article/mar09/ponniyin-selvan-delhi.
- ↑ சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்