ஈரோடு தமிழன்பன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஈரோடு தமிழன்பன் |
---|---|
பிறந்ததிகதி | 28 செப்டம்பர் 1933 |
பிறந்தஇடம் | சென்னிமலை, ஈரோடு, தமிழ்நாடு |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2004) |
பெற்றோர் | செ.இரா.நடராசன் வள்ளியம்மாள் |
ஈரோடு தமிழன்பன் (Erode Tamilanban) ஒரு தமிழகக் கவிஞர் ஆவார். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.[1][2] தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும்,[3] தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் [4] பணியாற்றி உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற ஊரில் வாழ்ந்த செ.இரா.நடராசன்- வள்ளியம்மாள் இணையரின் மகனாக 1933 செப்டம்பர் 28 அன்று பிறந்தார்.[5] இவரது இயற்பெயர் ந.செகதீசன்.
விருதுகள்
வணக்கம் வள்ளுவ என்னும் கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருதை 2004 ஆம் ஆண்டில் பெற்றார்.[6]
- தமிழக அரசின் கலைமாமணி விருது
வெளியாகியுள்ள நூல்கள்
வெளியான ஆண்டு | நூலின் பெயர் | வகை | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
தமிழன்பன் கவிதைகள் | கவிதை | மரபுக்கவிதைத்தொகுதி | ||
நெஞ்சின் நிழல் | புதினம் | |||
1970 | சிலிர்ப்புகள் | கவிதை | பாரி நிலையம் | மரபுக்கவிதைத்தொகுதி |
தீவுகள் கரையேறுகின்றன | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | ||
தோணிகள் வருகின்றன | கவிதை | |||
1982 | அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | |
காலத்திற்கு ஒரு நாள் முந்தி | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | ||
1985 | Tamil thahu | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | |
ஊமை வெயில் | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | ||
குடை ராட்டினம் | பாடல் | குழந்தைப்பாடல்கள் | ||
சூரியப் பிறைகள் | கவிதை | ஹைக்கூ கவிதைகள் | ||
1990 | என்னைக்கவர்ந்த பெருமானார் (ஸல்) | சொற்பொழிவு | இசுலாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை | 22.10.89ஆம் நாள் ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் அமைப்பின் வேலூர் கிளையில் ஆற்றிய மிலாடிநபி உரை |
1990 | கண்ணுக்கு வெளியே சில கனாக்கள் | கவிதை | நர்மதா பதிப்பகம் | |
1995 | என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி | கவிதை | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
1998 | நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | |
1999 | அணைக்கவா என்ற அமெரிக்கா | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | |
1999 | உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்.... வால்ட் விட்மன் | கவிதை | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
2000 | பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் | கட்டுரைகள் | விழிகள் பதிப்பகம் | |
2000 | வணக்கம் வள்ளுவ! | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | சாகித்ய அகாதமி விருது |
2001 | கலையா! கைவினையா! | கட்டுரைகள் | மருதா பதிப்பகம் | |
2002 | சென்னிமலைக் கிளிளோப்பாத்ராக்கள் | கவிதை | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
2002 | வார்த்தைகள் கேட்ட வரம் | கவிதை | விழிகள் பதிப்பகம் | |
2002 | மதிப்பீடுகள் | திறனாய்வு | மருதா | |
2003 | இவர்களோடும் இவற்றோடும் | கவிதை | விழிகள் பதிப்பகம் | |
2004 | கனாக்காணும் வினாக்கள் | கவிதை | விழிகள் பதிப்பகம் | |
2004 | மின்னல் உறங்கும் போது | கவிதை | ஸ்ரீ துர்க்கா பதிப்பகம் | |
2005 | கதவைத் தட்டிய பழைய காதலி | கவிதை | விழிகள் பதிப்பகம் | |
2005 | விடியல் விழுதுகள் | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | |
2005 | கவின் குறு நூறு | கவிதை | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
2007 | பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா | கட்டுரை | பாப்லோ நெருதா ஸ்பானிய-லத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவனம் | |
2008 | இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம் | ரஹ்மத் அறக்கட்டளை | ||
2008 | ஓலைச்சுவடியும் குறுந்தகடும் | கவிதை | விடிவெள்ளி வெளியீடு | |
2008 | சொல்ல வந்தது.... | கவிதை | முத்தமிழ்ப் பதிப்பகம் | |
2008 | சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள் |
மேற்கோள்கள்
- ↑ "தூரங்கள் என்பன... தமிழன்பன் சிறப்புப் பேட்டி" (in Tamil). Oneindia. 2006 இம் மூலத்தில் இருந்து 24 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110724024037/http://thatstamil.oneindia.in/art-culture/essays/2006/tamilanban.html. பார்த்த நாள்: 27 July 2010.
- ↑ Tamil Sahitya Akademi Awards 1955–2007 சாகித்திய அகாதமி Official website.
- ↑ "Tamil Nadu Iyal Isai Nataka Mandram". தமிழ்நாடு அரசு. http://docs.google.com/viewer?a=v&q=cache:jR1cKVhsxM0J:www.tn.gov.in/rti/proactive/inftour/handbook_IyalIsaiNatakaManram.pdf+erode+tamilanban&hl=en&gl=in&pid=bl&srcid=ADGEESgbjuH-7o7HUG4Ammdjl1DaqOgDlevwlMm3s6cb-Y-irLtmxDPLxHuL3pSow9dGHY6Oa2yPnha4V3CzwxX2xeojUDL-6tnBIKfgm3KzMGUp4iB5Akmpsh9YIectRaxu2beBEw4c&sig=AHIEtbTI6PgQNSQ_zUKkIbi5518AjsvWiw. பார்த்த நாள்: 27 July 2010.
- ↑ [1]
- ↑ குன்றாத செயலூக்கம். தி இந்து தமிழ் திசை. 2 சனவரி 2017. https://www.hindutamil.in/news/literature/203632-.html.
- ↑ "TAMIL" இம் மூலத்தில் இருந்து 2015-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150917102914/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/akademi%20samman_suchi.jsp.