சு. வெங்கடேசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சு. வெங்கடேசன்
SU.VENKATESAN.JPG
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 சூன் 2019
முன்னவர் இரா. கோபாலகிருஷ்ணன்
தொகுதி மதுரை
மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
பதவியில்
24 சூன் 2018 – 15 ஆகத்து 2022
முன்னவர் ச. தமிழ்ச்செல்வன்
பின்வந்தவர் மதுக்கூர் இராமலிங்கம்
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
பதவியில்
18 செப்டம்பர் 2011 – 24 சூன் 2018
முன்னவர் ச. தமிழ்ச்செல்வன்
பின்வந்தவர் ஆதவன் தீட்சண்யா
தனிநபர் தகவல்
பிறப்பு (1970-03-16)16 மார்ச்சு 1970
ஹார்விப்பட்டி, ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமை இந்தியர்
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்)
பி.ஆர். கமலா (தி. 1998)
பிள்ளைகள்
  • யாழினி
  • தமிழினி
பெற்றோர்
  • இரா. சுப்புராம்
  • நல்லம்மாள்
இருப்பிடம் 4, ஹார்விப்பட்டி மேற்கு தெரு, மதுரை, தமிழ்நாடு
படித்த கல்வி நிறுவனங்கள் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி
பணி எழுத்தாளர், அரசியலர்
பட்டப்பெயர்(கள்) சு. வெ

சு. வெங்கடேசன் (Su. Venkatesan, பிறப்பு: மார்ச் 16, 1970) என்பவர் ஓர் எழுத்தாளரும், அரசியல்வாதியும், இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவராக உள்ளார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஹார்விபட்டியை சேர்ந்த விவசாயி இரா. சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு 1970 மார்ச் 16 அன்று மகனாகப் பிறந்தார்.[2] இவர் ஹார்விப்பட்டி நடுநிலைப்பள்ளியிலும், திருநகர் எம்.எம்.மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கல்வியை பயின்றார். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989-இல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.[3] இவர் செம்மலர் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[4] இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[5] இவர் 1998-இல் பி.ஆர். கமலா என்பவரை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்.[6] இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.[7]

அரசியல் செயல்பாடுகள்

சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடிக்கும் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார்.[8] தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்ததில் முதன்மை பங்கு வகித்தவர்.[9] மாமதுரை போற்றுவோம் என்ற கலை விழாவை நடத்தியதில் முக்கியப் பங்களிப்பைச் செய்தவர்.[10] தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். சல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு இயக்கங்களில் முக்கிய பங்களிப்பை செய்தவர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகிப் பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.[11] 2019-ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு,1.39 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]

மதுரை மக்களவை உறுப்பினராகச் செயல்பாடுகள்

  • மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.[13]
  • தமிழ் நாகரிகம் உருவான காலத்தைப் பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு ஆறாம் நூற்றாண்டு என மாற்ற செய்திடவேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.[14]
  • மக்கள் சந்திப்பு இயக்கம் எனும் பெயரில் மதுரை மக்களவை தொகுதிக்கு உட்பட 124 ஊராட்சி, 2 பேரூராட்சி, மேலூர் நகராட்சி, மதுரை மாநகராட்சி பகுதிகளில் தொடா்ந்து 14 மாதங்களாக சிறப்பு முகாம்களை நடத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.[15]

படைப்புகள்

புதினங்கள்

  1. காவல் கோட்டம் (2008)
  2. சந்திரஹாசம் (2015)
  3. வீரயுக நாயகன் வேள்பாரி (2019)

கவிதைகள்

  1. ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (1989)
  2. திசையெல்லாம் சூரியன் (1990)
  3. பாசி வெளிச்சத்தில் (1997)
  4. ஆதிப் புதிர் (2000)

புத்தகங்கள்

  1. கலாசாரத்தின் அரசியல் (2001)
  2. மதமாற்றத் தடைச் சட்டம் மறைந்திருக்கும் உண்மைகள் (2003)
  3. கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே? (2003)
  4. மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (2003)
  5. ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை (2004)
  6. உ.வே.சா. சமயம் கடந்த தமிழ் (2005)
  7. அலங்காரப் பிரியர்கள் (2014)
  8. கீழடி (2017)
  9. வைகை நதி நாகரிகம் (2018)
  10. கதைகளின் கதை (2019)
  11. இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம் (2022)

மொழிபெயர்ப்புகள்

  1. இந்தி இந்துத்துவா இந்துராஜ்ஜியம் (சீத்தாராம் யெச்சூரி)

ஆங்கில நூல்கள்

  1. Chandrahasam (2015)

வகித்த பதவிகள்

  • 17வது மக்களவை உறுப்பினர் (2019)
  • இரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்
  • மதுரை விமான நிலைய ஆலோசனை குழுவின் துணை தலைவர்
  • சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் (2022)
  • தமுஎகச மாநிலத் தலைவர் (2018 - 2022)
  • சிபிஎம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் (2018 - 2022)
  • தமுஎகச மாநில பொதுச்செயலாளர் (2011 - 2018)
  • தமிழக அரசின் கீழடி அகழாய்வு ஆலோசனைக் குழு உறுப்பினர் (2019)

விருதுகள்

போட்டியிட்ட தேர்தல்கள்

வருடம் தொகுதி முடிவு வாக்கு சதவீதம் எதிர்கட்சி வேட்பாளர் எதிர்கட்சி எதிர்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம்
2019 மதுரை வெற்றி 44.20% வி. வி. ஆர். ராஜ் சத்யன் அஇஅதிமுக 30.42%

திரைப்படத் துறைப் பங்களிப்புகள்

தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் நாவலின் முக்கிய பகுதிகளைத் தழுவியே படமாக்கப்பட்டது.[28]

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார்.[29]

இவர் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சி நடைபெறுகிறது.[30]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "தமுஎகச மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு". தீக்கதிர். 16 ஆகத்து 2022. https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/election-of-new-administrators-in-tamuegasa-state-conference. 
  2. "சு.வெங்கடேசனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது 2019’". கட்டுரை (இந்து தமிழ்). 6 சனவரி 2020. https://www.hindutamil.in/news/tamilnadu/533799-s-venkatesan-canada-tamil-literary-estate-s-nomination-award-2019.html. 
  3. "மதுரைக்கு "முதல் மரியாதை:காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்ய அகாடமி விருதுபெற்ற மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன்". தினமலர் நாளிதழ். 27 டிசம்பர் 2011. https://m.dinamalar.com/detail.php?id=374795. 
  4. "மதுரைக்கு சு.வெங்கடேசன் தேர்வானது எப்படி?". விகடன். 23 மார்ச் 2019. https://www.vikatan.com/government-and-politics/politics/149437-madurai-cpm-candidate-writer-venkatesan-interview. 
  5. "Debutant novelist Su. Venkatesan wins Sahitya Akademi Award". The Hindu. December 21, 2011. https://www.thehindu.com/books/debutant-novelist-su-venkatesan-wins-sahitya-akademi-award/article2735141.ece. 
  6. "சு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து!". அவள் விகடன். 9 சனவரி 2018. https://www.vikatan.com/gender/137659-interview-with-writer-venkatesan-and-family. 
  7. "ஜாதிகள் இருக்குதடி பாப்பா..!". தினமலர் நாளிதழ். 7 ஏப்ரல் 2019. https://m.dinamalar.com/detail.php?id=2249388. "ஜாதி பார்த்து சீட் கொடுப்பதில், கம்யூனிஸ்ட்களும் விதிவிலக்கல்ல. மதுரையில், அ.தி.மு.க., - அ.ம.மு.க.என, இரு தரப்பினரும் முக்குலத்தோரை நிறுத்தியிருப்பதால், மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில், சு.வெங்கடேசனை நிறுத்தியுள்ளது; அவர் நாயுடு." 
  8. *"கீழடி பெருமை vs கரன்ஸி மகிமை! மதுரை சவாலை முறியடிப்பாரா சு.வெங்கடேசன்!?". ஜூனியர் விகடன். 6 ஏப்ரல் 2019. https://www.vikatan.com/government-and-politics/election/154326-star-candidate-of-madurai-su-venkatesan. "உத்தபுரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு சம்பவத்தில் களப் பணியை மேற்கொண்டார்" 
  9. "சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன், கோவையில் பி.ஆர்.நடராஜன் போட்டி". இந்து தமிழ் திசை நாளிதழ். 15 மார்ச் 2019. https://www.hindutamil.in/news/election-2019/others/159548--4.html. 
  10. "மாமதுரை போற்றுவோம்! - மண்ணின் பெருமை பேச ஒரு விழா". ஜூனியர் விகடன். 3 பிப்ரவரி 2013. https://www.vikatan.com/government-and-politics/29134--2. 
  11. செல்வ புவியரசன் (19 மார்ச் 2019). "தேர்தல் களம் புகும் தமிழ் எழுத்தாளர்கள்!". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/opinion/columns/article26576044.ece. பார்த்த நாள்: 21 மார்ச் 2019. 
  12. *"மதுரை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி". தினத்தந்தி. மே 24, 2019. https://www.dailythanthi.com/News/State/2019/05/24003309/Madurai-Marxist-Communist-candidate-S-Venkatesan-wins.vpf. 
  13. ஆர். ஷபிமுன்னா (1 சூலை 2019). "மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் மக்களவையில் பேச்சு". கட்டுரை (இந்து தமிழ்). https://www.hindutamil.in/news/india/234086-.html. 
  14. ஆர். ஷபிமுன்னா (21 நவம்பர் 2019). "கீழடி கண்டுபிடிப்பு: சங்ககாலம் குறித்த என்சிஆர்டி பாடத் திட்டத்தில் மாற்றம் தேவை: மக்களவையில் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்". கட்டுரை (இந்து தமிழ்). https://www.hindutamil.in/news/india/526434-keezhadi-excavations.html. 
  15. *"இந்தியாவிலே இல்லாத வகையில் மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தியுள்ளோம்! - சு.வெங்கடேசன் எம்.பி., பேட்டி". தீக்கதிர். 19 சூலை 2023. https://theekkathir.in/News/districts/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/received-10-thousand-petitions-and-met-with-one-lakh-people. 
  16. "விகடன் விருதுகள் 2008". விகடன். 7 சனவரி 2009. https://cinema.vikatan.com/kollywood/42687--2. 
  17. இயல் விருது விழா 2010. தமிழ் இலக்கியத் தோட்டம். 18 சூன் 2011. http://tamilliterarygarden.com/files/Book10.pdf. 
  18. "Madurai novelist wins Sahitya Akademi award". The New Indian Express 22nd December 2011. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2011/dec/22/madurai-novelist-wins-sahitya-akademi-award-322714.amp. 
  19. "வீரயுக நாயகன் வேள்பாரிக்கு மலேசிய விருது... சு.வெங்கடேசன் பெருமிதம்!". விகடன். 2 சனவரி 2021. https://www.vikatan.com/literature/malaysia-literature-award-win-su-venkatesan. 
  20. "சு.வெங்கடேசனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ’இயல் விருது’ அறிவிப்பு...!". நியூஸ்18 தமிழ் 06 சனவரி 2020. https://tamil.news18.com/news/tamil-nadu/canata-literature-award-for-madurai-mp-venkatesan-1-san-240979.html. 
  21. "Little-known author is toast of Tamil Nadu". The New Indian Express 05 January 2012. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2012/jan/05/little-known-author-is-toast-of-tamil-nadu-326981.html. 
  22. ஆனந்த விகடன் இலக்கிய விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை. விகடன். 3 சனவரி 2019. https://www.vikatan.com/literature/arts/147307-ananda-vikatan-awards-2018. 
  23. "சாதனையாளர்களைக் கொண்டாடிய ‘மகுடம் விருதுகள்’". தி இந்து தமிழ் திசை. 24 அக்டோபர் 2019. https://www.hindutamil.in/news/tamilnadu/521928-magudam-awards-2019-from-news-18-tamilnadu.html. 
  24. "Galaxy of achievers receive ‘Tamilan' awards". The Hindu (07 April 2012). https://www.thehindu.com/news/national/tamil-nadu/galaxy-of-achievers-receive-tamilan-awards/article3288225.ece. 
  25. "சி.கே.கே.,அறக்கட்டளை சார்பில் இன்று இலக்கிய விருது விழா". தினமலர். 28 மே 2023. https://m.dinamalar.com/detail.php?id=3332737. 
  26. கு. சி. பா. அறக்கட்டளை விருது விழா. செம்மலர். டிசம்பர் 2010. http://keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-dec10/12036-2010-12-23-09-30-41. 
  27. "Little-known author is toast of Tamil Nadu". News18 Tamil 05 January 2012. https://www.news18.com/news/india/little-known-author-is-toast-of-tamil-nadu-434309.html. 
  28. "Aravaan: A lofty aim". The Hindu. 3 March 2012. https://www.thehindu.com/features/cinema/aravaan-a-lofty-aim/article2957450.ece. 
  29. *"ஷங்கர் - சூர்யா காம்போவில் படமாகிறது ‘வேள்பாரி’ நாவல்?". கட்டுரை (இந்து தமிழ்). 10 செப்டம்பர் 2022. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/864200-suriya-and-shankar-to-do-a-film-based-on-the-novel-velpari.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சு._வெங்கடேசன்&oldid=25996" இருந்து மீள்விக்கப்பட்டது