இமையம் (எழுத்தாளர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இமையம் (எழுத்தாளர்)
இமையம் (எழுத்தாளர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
இமையம்
பிறப்புபெயர் வெ. அண்ணாமலை
பிறந்ததிகதி 10 மார்ச்சு 1964 (1964-03-10) (அகவை 60)
பிறந்தஇடம் கழுதூர், திட்டக்குடி வட்டம், தமிழ் நாடு
பணி புதின எழுத்தாளர்,
தேசியம் இந்தியா இந்தியர்
குறிப்பிடத்தக்க விருதுகள் இயல் விருது (2018), சாகித்திய அகாதமி விருது, (2020)

இமையம் என்ற புனைபெயரில் எழுதும் வெ. அண்ணாமலை (பிறப்பு: மார்ச் 10, 1964) நன்கறியப்பட்ட தமிழக எழுத்தாளர். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[1]

இவருடைய முதல் புதினமான "கோவேறு கழுதைகள்", இலட்சுமி ஓம்சுற்றோம் (Lakshmi Holmström) என்பவரால், “Beasts of Burden“ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி ”கோவேறு கழுதைகள்” நாவலைப் பற்றிக் கூறுகையில், தமிழ் எழுத்துலகில் கடந்த நூறு ஆண்டுகால வளர்ச்சியில், இந்த நாவலுக்கு இணையானது வேறொன்றும் இல்லை என்று புகழ்ந்து கூறியுள்ளார்.[சான்று தேவை]

எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்[2]

வாழ்க்கைக் குறிப்பு

1964 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதியன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூரில் பிறந்த இவரது இயற்பெயர் வெ.அண்ணாமலை. இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ச.புஷ்பவள்ளி - முதுநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். குழந்தைகள் கதிரவன் மற்றும் தமிழ்ச்செல்வன்.

இமையம்

நூல்கள்

தமிழ் நாட்டுக் கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளைக் கவனப்படுத்துவதன் மூலம் தனது படைப்புகளில் பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலவும் முரண்பாடுகளையும் ஆதிக்கத்தின் குரூரங்களையும் முன் வைக்கிறார்.

புதினங்கள்

  • கோவேறு கழுதைகள் (நாவல்) - 1994 ISBN 978-93-82394-05-1
  • ஆறுமுகம் (நாவல்) - 1999 ISBN 81-85602-75-1
  • செடல் (நாவல்)-2006 ISBN 978-81-921302-2-4
  • எங் கதெ (நாவல்) - 2015 {{ISBN|978-93-82394-15-0}}
  • செல்லாத பணம் (நாவல்) - 2018 - ISBN 978-93-82394-28-0
  • பெத்தவன் (குறுநாவல்)_2018
  • வாழ்க வாழ்க (குறுநாவல்)_2020
  • இப்போதும் உயிரோடுடன் இருக்கிறேன் (நாவல்)_2022

சிறுகதைத் தொகுப்புகள்

  • மண்பாரம் (சிறுகதைத் தொகுப்பு) -2002 ISBN 81-85602-84-0
  • வீடியோ மாரியம்மன் (சிறுகதைத் தொகுப்பு) - 2008 ISBN 978-81-921302-2-4
  • கொலைச் சேவல் (சிறுகதைத் தொகுப்பு) - 2013 ISBN 978-81-921302-8-6
  • சாவு சோறு (சிறுகதைத் தொகுப்பு) - 2014 ISBN 978-93-82394-11-2
  • பெத்தவன் (நெடுங்கதை) - க்ரியா பதிப்பகம் - 2013 ISBN 978 93 828264 9 1
  • நறுமணம் (சிறுகதைத் தொகுப்பு) - 2016 {{ISBN|978 93 823941 9 8}}
  • நன்மாறன் கோட்டைக் கதை (சிறுகதைத் தொகுப்பு) - 2019 ISBN 978-93-82394-37-2

சிறுகதைகள்

இமையம் - சிறுகதைகள்

மொழிப் பெயர்க்கப்பட்ட நூல்கள்

  • கோவேறு கழுதைகள் என்ற புதினம், 2001 இல் பீஸ்ட் ஆஃப் பர்டன் (BEAST OF BURDEN)) என்ற பெயரில் East West Books என்ற பதிப்பகத்தாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதே புதினம் 2009 இல் பாஷா பாரதி என்னும் நிறுவனத்தால் கன்னடத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பெற்றுள்ளது.
  • ஆறுமுகம் என்ற புதினம் கதா நிறுவனத்தால் அதே பெயரில் ஆங்கிலத்தில் 2006 இல் வெளியிடப்பெற்றுள்ளது
  • பெத்தவன் என்ற நெடுங்கதை Oxford University Press என்ற பதிப்பகத்தின் மூலம் 'The Begetter' என்ற பெயரில் 2015 இல் வெளியிடப்பட்டுள்ளது

விருதுகளும் சிறப்புகளும்

மேற்கோள்கள்

  1. பிரபல எழுத்தாளர் இமயத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!, மார்ச் 12, 2021
  2. Satyanarayana and Tharu (2011). No Alpahbet in Sight: New Dalit Writing from South India 1. New Delhi: Penguin Books. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-143-41426-1. 
  3. Imayam wins Sahitya Akademi Award
  4. Sahitya award for writer Imayam’s literary work
  5. "2018-ம் ஆண்டுக்கான `இயல்’ விருதைப் பெறுகிறார் எழுத்தாளர் இமையம்!". விகடன். 25 திசம்பர் 2018. https://www.vikatan.com/news/miscellaneous/145514-writer-imayam-selected-for-iyal-award-2018.html. பார்த்த நாள்: 28 திசம்பர் 2018. 
  6. எழுத்தாளர் இமையத்தின் 'செல்லாத பணம்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது
  7. செல்லாத பணம் நாவல் எழுதிய தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
  8. தமிழ் எழுத்தாளர் இமயம் எழுதிய ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
"https://tamilar.wiki/index.php?title=இமையம்_(எழுத்தாளர்)&oldid=9486" இருந்து மீள்விக்கப்பட்டது