தோப்பில் முகமது மீரான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தோப்பில் முகமது மீரான்
தோப்பில் முகமது மீரான்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தோப்பில் முகமது மீரான்
பிறந்ததிகதி (1944-09-26)26 செப்டம்பர் 1944
பிறந்தஇடம் நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 10 மே 2019(2019-05-10) (அகவை 74)
செயற்பட்ட ஆண்டுகள் 2010
செயற்பட்ட ஆண்டுகள் 2010
குறிப்பிடத்தக்க விருதுகள் சாகித்திய அகாதமி விருது
துணைவர் ஜலீலா மீரான்
பிள்ளைகள் சமீம் அகமது
மிர்சாத் அகமது

[புகைப்படத்திற்கு நன்றி fetna.org] தோப்பில் முகமது மீரான் என்பவர் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019)[1] தமிழ், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. தனது 74 வயதில் (மே 1, 2019) உடல்நிலை குறைவு காரணமாக திருநெல்வேலி மாவட்டம், பேட்டை எனும் இடத்தில் இறந்தார்.[3]

விருதுகள்

  • சாகித்திய அகாதமி விருது - சாய்வு நாற்காலி (1997)
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
  • இலக்கியச் சிந்தனை விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • தமிழக அரசு விருது
  • அமுதன் அடிகள் இலக்கிய விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது

எழுதிய நூல்கள்

(முழுமையானதல்ல)

புதினங்கள்

  • ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988)
  • துறைமுகம் (1991)
  • கூனன் தோப்பு 1993)
  • சாய்வு நாற்காலி (1997)
  • அஞ்சுவண்ணன் தெரு
  • குடியேற்றம்(2017)

சிறுகதைத் தொகுப்புகள்

  • அன்புக்கு முதுமை இல்லை
  • தங்கரசு
  • அனந்தசயனம் காலனி
  • ஒரு குட்டித் தீவின் வரைபடம்
  • தோப்பில் முகமது மீரான் கதைகள்
  • ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்

மொழிபெயர்ப்புகள்

  • தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது)
  • வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தோப்பில்_முகமது_மீரான்&oldid=4762" இருந்து மீள்விக்கப்பட்டது