க. த. திருநாவுக்கரசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

க. த. திருநாவுக்கரசு (1931- 1989) தமிழ்ப் பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், அறிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். இவர் வரலாறு, கல்வெட்டு, மொழியியல், சமூகவியல், மானிடவியல், தத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் புலமை பெற்றவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர். முனைவர் மு. வரதராசனின் படைப்பிலக்கியங்களை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவருக்கு சாகித்ய அகாடமி நிறுவனம் 'திருக்குறள் மணி' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது.பின்னர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தார். 1974-இல் இவர் எழுதிய திருக்குறள் நீதி இலக்கியம் என்ற இலக்கிய விமர்சன புத்தகத்திற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[1][2][3]

எழுதியுள்ள நூல்கள்

(முழுமையானதல்ல)

ஆங்கிலம்

  1. Studies in Tamil and Greek Literature
  2. Chieftains of the Sangam age
  3. A Critical study of Dr. Mu. Va's works

தமிழ்

  1. சிந்துவெளி தரும் ஒளி (1959)
  2. வாழ்வும் வரலாறும் (1960)
  3. தமிழர் நாகரிக வரலாறு - விடிவெள்ளி (1962)
  4. தம்மபதம், (1971), பாரி நிலையம், சென்னை.
  5. முதலாம் ராசராச சோழன் (1975) தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை
  6. வரலாற்று வஞ்சி (1976)
  7. திருக்குறள் நீதி இலக்கியம் (1977), சென்னை பல்கலைக்கழகம், சென்னை.
  8. அறிஞர் அறவாழி (1978) மணியகம், சென்னை
  9. இலங்கையில் தமிழ்ப்பண்பாடு (1979)
  10. பர்மாவில் தமிழ்ப்பண்பாடு (1982)
  11. தாய்லாந்தில் தமிழ்ப்பண்பாடு (1982)
  12. தமிழ் நிலவு
  13. திருக்குறளும் இந்திய அறநூல்களும்,
  14. சான்றோர் கண்ட திருவள்ளுவர்
  15. அடிமை விலங்கு
  16. பழந்தமிழ் மொழியியல்
  17. வாழ்வும் இலக்கியமும்
  18. சிந்துவெளி எழுத்து வடிவங்கள் (1982)
  19. திருக்குறள் கற்பனைத் திறனும் நாடக நலனும், (1982) சென்னை பல்கலைக்கழகம், சென்னை.
  20. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, (1987) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  21. திருக்குறள் நூலடைவு, தமிழுறவு வெளியீடு, சென்னை
  22. தொல்காப்பிய நூலடைவு, தமிழுறவு வெளியீடு, சென்னை
  23. தமிழ்ப்பண்பாடு, (2009) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  24. ஒளி விளக்கு
  25. மானிடவியல் சொல்லகராதி, (1972), திருநெல்வேலி தென்னிந்தியா சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

மொழிபெயர்ப்பு

  1. ராஜாராம் மோகன் ராய் : இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை, சாகித்ய அகாதெமி
  2. ஜீவானந்த தாஸ் : இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை, சாகித்ய அகாதெமி
  3. லட்சுமிநாத பெஸ்பருவா : இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை, சாகித்ய அகாதெமி

பதிப்பித்தவை

  1. திறனாய்வு அணுகுமுறைகள், (1989) (கு. பகவதி இணைப்பதிப்பாசிரியர்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=க._த._திருநாவுக்கரசு&oldid=27517" இருந்து மீள்விக்கப்பட்டது