மு. மேத்தா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மு. மேத்தா |
---|---|
பிறப்புபெயர் | முகமது மேத்தா |
பிறந்ததிகதி | செப்டம்பர் 5, 1945 |
பிறந்தஇடம் | பெரியகுளம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | கவிஞர் பாடலாசிரியர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2006) |
துணைவர் | சையது ராபியா (௭)மல்லிகா மேத்தா[1] |
பிள்ளைகள் | 5 மகள்கள் |
மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.[2]
"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை"
போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.
"வானம்பாடி" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.
படைப்புகள்
கவிதை நூல்கள்
- கண்ணீர்பூக்கள்[3] (1974)
- ஊர்வலம்[4] (1977)
- மனச்சிறகு (1978)
- அவர்கள்வருகிறார்கள் (1980)
- முகத்துக்கு முகம் (1981)
- நடந்தநாடகங்கள் (1982)
- காத்திருந்த காற்று (1982)
- ஒரு வானம் இரு சிறகு (1983)
- திருவிழாவில் தெருப்பாடகன் (1984)
- நந்தவனநாட்கள் (1985)
- இதயத்தில் நாற்காலி (1985)
- என்னுடையபோதிமரங்கள் (1987)
- கனவுக்குதிரைகள் (1992)
- கம்பன் கவியரங்கில் (1993)
- என் பிள்ளைத் தமிழ் (1994)
- ஒற்றைத் தீக்குச்சி (1997)
- மனிதனைத்தேடி (1998)
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2004)
- மு.மேத்தா கவிதைகள் (2007)
- கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010)
- கனவுகளின்கையெழுத்து (2016)
- நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)[5]
கட்டுரை நூல்கள்
- திறந்த புத்தகம்.
நாவல்கள்
- சோழ நிலா
- மகுடநிலா
நாயகம் ஒரு காவியம்
கவிஞர் வாலியின் 'அவதார புருஷன்' எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய 'நாயகம் ஒரு காவியம்' என்கிற நூல்தான். ''அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்'' என்றார் வாலி.
ஆனால், பதுருப்போருடன் அந்நூல் முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு.மேத்தா அவர்கள் எழுதவில்லை என்றால் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும், நல்ல தமிழ்நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால், நாளைக்கே வேலையை தொடங்கிவிடலாம் என்றும் அதனை பதிப்பித்த ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள் கூறினார்
சிறுகதை தொகுப்புகள்
- கிழித்த கோடு
- மு.மேத்தா சிறுகதைகள்
- பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)
பரிசுகளும் விருதுகளும்
- "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
- "சோழ நிலா" (நாவல்) ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதை நூல்) சாகித்திய அகாதமி விருது
திரைப்படப் பட்டியல்
ஆண்டு | திரைப்படம் | இசையமைப்பாளர் | குறிப்பு |
---|---|---|---|
1981 | அனிச்சமலர் | சங்கர் கணேஷ் | முதல் திரைப்படம் |
1981 | பன்னீர் புஷ்பங்கள் | இளையராஜா | |
1982 | ஆகாய கங்கை | இளையராஜா | தேனருவியில் நனைந்திடும் மலரோ |
1985 | நான் சிகப்பு மனிதன் | இளையராஜா | பெண் மானே சங்கீதம் |
1985 | இதய கோவில் | இளையராஜா | யார் வீட்டில் ரோஜா |
1985 | உதயகீதம் | இளையராஜா | பாடு நிலாவே |
1985 | உன்னை விடமாட்டேன் | ஞாயிறு ஒளி மழையில் | |
1985 | உன் கண்ணில் நீர் வழிந்தால் | ||
1986 | மரகத வீணை | இளையராஜா | ஒரு பூவனக்குயில் மாமரத்துல |
1987 | ரெட்டை வால் குருவி | இளையராஜா | ராஜராஜ சோழன் நான் |
1987 | வேலைக்காரன் | இளையராஜா | அனைத்து பாடல்களும் |
1987 | கிருஷ்ணன் வந்தான் | இளையராஜா | |
1987 | சிறைப்பறவை | ||
1987 | மைக்கேல் ராஜ் | சந்திரபோஸ் | காலம் பொறந்தாச்சு சின்னமயிலே |
1988 | கலியுகம் | ||
1988 | சொல்ல துடிக்குது மனசு | இளையராஜா | |
1988 | தாய்ப்பாசம் | சந்திரபோஸ் | |
1989 | அன்னக்கிளி சொன்ன கதை | ||
1989 | ௭ம்புருஷன்தான் ௭னக்குமட்டுந்தான் | இளையராஜா | |
1990 | கேளடி கண்மணி | இளையராஜா | கற்பூர பொம்மையொன்று |
1991 | இதயவாசல் | ||
1991 | தந்துவிட்டேன் ௭ன்னை | இளையராஜா | தென்றல் நீ தென்றல் நீ |
1992 | உன்னை வாழ்த்தி பாடுகிறேன் | இளையராஜா | |
1994 | பிரியங்கா | இளையராஜா | |
1996 | பூமணி | இளையராஜா | ௭ம்பாட்டு ௭ம்பாட்டு |
1997 | சூரிய வம்சம் | எஸ். ஏ. ராஜ்குமார் | நட்சத்திர சன்னலில் |
1998 | சிம்மராசி | சிற்பி | |
1998 | கும்பகோணம் கோபாலு | இளையராஜா | |
1999 | ராஜஸ்தான் | இளையராஜா | |
1999 | தொடரும் | இளையராஜா | |
1999 | நிலவே முகம் காட்டு | ||
2000 | பாரதி | இளையராஜா | மயில்போல பொண்ணு ஒன்னு |
2000 | இளையவன் | இளையராஜா | |
2001 | காசி | இளையராஜா | ௭ன் மனவானில் சிறகை |
2002 | இவன் | இளையராஜா | |
2002 | ௭ன் மனவானில் | ||
2003 | பிதாமகன் | இளையராஜா | அடடா அகங்கார அரக்க |
2005 | கரகாட்டக்காரி | இளையராஜா | |
2005 | சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி | இளையராஜா | |
2006 | உள்ள கடத்தல் | பரத்வாஜ் | |
2007 | மாயக்கண்ணாடி | இளையராஜா | |
2007 | உதயம் | ||
2008 | தனம் | இளையராஜா | |
2009 | கண்ணுக்குள்ளே | ||
2009 | மத்திய சென்னை | ||
2009 | அழகர் மலை | இளையராஜா | |
2010 | நந்தலாலா | இளையராஜா | |
2011 | அய்யன் | இளையராஜா | |
2012 | அஜந்தா | இளையராஜா | |
2013 | மத்தாப்பூ | ||
2013 | மறந்தேன் மன்னித்தேன் [6] | ||
2014 | ஒரு ஊருல | இளையராஜா |
மேற்கோள்கள்
- ↑ "கவிஞர் மு.மேத்தா துணைவியார் மல்லிகா மரணம்". https://tamil.filmibeat.com/news/poet-mu-metha-wife-passed-away-049266.html.
- ↑ "மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது".
- ↑ அலி, எஸ் ஏ எம் பரக்கத். ""கண்ணீர்ப் பூக்கள் கிடைத்தது எப்படி?" - மு.மேத்தா பிறந்த தின சிறப்புப் பகிர்வு" (in ta). https://www.vikatan.com/arts/literature/tamil-poet-mu-metha-birthday-special-article.
- ↑ "மு.மேத்தா, சொ.சேதுபதிக்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
- ↑ சத்தியமார்க்கம் (2013-05-30). "கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை!". சத்தியமார்க்கம்.காம் (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
- ↑ "mu metha filmography". https://www.filmibeat.com/celebs/mumetha/filmography.html.
வெளி இணைப்புகள்
- மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும் - ப. லட்சமி
- இசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா - கானா பிரபா