ஆதவன் தீட்சண்யா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆதவன் தீட்சண்யா - 1
Aadhavan-dheetchanya.jpg
முழுப்பெயர் ஆதவன் தீட்சண்யா
புனைபெயர் ஆதி[1]
பள்ளிக்கூடத்தாள்
தகடூர் ஆதவன்
ஓசூர் ஆதவன்
பிறப்பு 1964
பிறந்த இடம் தமிழ்நாடு, இந்தியா
தேசியம் தமிழர்
அறியப்படுவது எழுத்தாளர்
வகை சிறுகதை, புதினம்
கட்டுரைகள், கவிதை

தொடக்க வாழ்க்கை

அன்றைய பிரிக்கப்படாத சேலம் மாவட்டம் ஈச்சம்பாடியைச் சேர்ந்த இரத்தினம்மாவுக்கும் உத்தமசோழபுரத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் 6 மார்ச் 1964 அன்று பிறந்தார் ஆதவன் தீட்சண்யா. இவர்பின் பிறந்தோர் அறுவர்."Tamil | Tamilnadu | Art | Culture | Aadhavan Dheetchanya | Interview". http://keetru.com/literature/interview/aadhavan.php.  அரூருக்கும் சேலத்துக்கும் இடைப்பட்ட அலமேலுபுரம் என்கிற சிற்றூர் சார்ந்த ஒண்டிக்கொட்டாயில் (நிலத்தில் தனியாக உள்ள வீடு) வளர்ந்தார்.

கல்வி

பன்னிரண்டாம் வகுப்பு வரை பாப்பிரெட்டிப்பட்டி பள்ளியில் பயின்ற தீட்சண்யா, பின் தருமபுரி அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றார்.

பணி

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே தொலைபேசி இயக்குநர் பணிக்குத் தேர்வானார்.

இலக்கியப்பணி

இளமையில் மாலைமதி உள்ளிட்ட கேலிச் சித்திர நூல்களை மட்டுமே வாசித்தும் சிற்சில சமயங்களில் சிறார் நடையில் எழுதியும் வந்த தீட்சண்யா, கல்லூரிக்காலத்தில் தனக்கு அறிமுகமான சண்முகம் என்ற அரசு ஊழியர் அளித்த ஊக்கத்தால் தணிகைச்செல்வன் இயற்றிய ஒரு சமூகசேவகி சேரிக்கு வந்தாள் என்ற கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினார். இது தனக்கு இலக்கிய உலகுக்கான ஒரு "பெரிய திறப்பு" எனவும் குறிப்பிட்டார்.

கவிதைத் தொகுப்புகள்

சிறுகதைகள்

புதினங்கள்

கட்டுரைகள்

  • இட ஒதுக்கீடல்ல, மறு பங்கீடு
  • ஆகாயத்தில் எறிந்த கல் (2011)
  • ஒசூர் எனப்படுவது யாதெனின் (2014) (மலைகள் பதிப்பகம்)
  • இதுவொன்னும் பழைய விசயம் இல்லீங் சாமீ
  • கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது (2016)
  • எஞ்சிய சொல்
  • தூர்ந்த மனங்களைத் தோண்டும் வேலை

நேர்காணல்கள்

திரைத்துறையில்

தனி வாழ்க்கை

1993-ஆம் ஆண்டு மீனா என்பவரை மணந்தார். இவ்விணையருக்கு தீட்சண்யா என்ற மகள் பிறந்தபின் அவர் பெயரையும் இணைத்துக்கொண்டு 'ஆதவன் தீட்சண்யா' ஆனார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆதவன்_தீட்சண்யா&oldid=10829" இருந்து மீள்விக்கப்பட்டது