ஜோதிமணி
ஜோதிமணி சென்னிமலை | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | தம்பிதுரை |
தொகுதி | கரூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 ஆகத்து 1975 தமிழ்நாடு, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பெரிய திருமங்கலம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | பெரிய திருமங்கலம், கூடலூர் மேற்கு கிராமம், அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம், தமிழ்நாடு |
வேலை | எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் சமூக செயற்பாட்டாளர் |
ஜோதிமணி சென்னிமலை (பிறப்பு 9 ஆகத்து 1975) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். இவர் மிக இளவயதிலேயே அரசியலில் நுழைந்தார். இவர் சில ஆண்டுகள் இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் தமிழ், இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்தவராவார். இது இவரது அரசியல் வாழ்வில் இந்தியா மற்றும் பிற நாடுகளின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு உதவியாக உள்ளது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
இவர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியின், பெரிய திருமங்கலத்தில், சென்னிமலை மற்றும் முத்துலட்சுமி ஆகியோருக்கு மகளாக 1975 ஆகத்து 9 அன்று பிறந்தார். இவரது தந்தையான சென்னிமலை ஒரு விவசாயி ஆவார். ஜோதிமணி தனது குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். இவரது தாயார் முத்துலட்சுமியால் வளர்க்கப்பட்ட இவர் உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி. வி. ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் என்எஸ்எஸ் முகாம்கள் மற்றும் சமூக சேவை பணிகளில் தீவிரமாக கலந்துகொள்பவராக இருந்தார். 2006 முதல் 2009 வரை இவர் தமிழ்நாட்டு திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக இருந்தார்.
பட்டப்படிப்பு
- முதுகலைப் பட்டம், அண்ணாமலை பல்கலைக்கழகம், 2003[1]
- ஆய்வியல் நிறைஞர், அண்ணாமலை பல்கலைக்கழகம், 2005[1]
அரசியல் வாழ்க்கை
22 வயதில் அரசியலில் நுழைந்த ஜோதிமணி, இந்திய இளைஞர் காங்கிரசில் தீவிரமாக பணியாற்றி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்கு அறிமுகமானவராக ஆனார்.[2]
இந்திய இளைஞர் காங்கிரசின் பேராளராக 2006 ஆம் ஆண்டு அமெரிக்க ஒன்றியத்தில் நடந்த, ஆசிய இளம் தலைவர்கள் உச்சி மாநாடு மற்றும் 2009 இல் மலேசியாவில் நடைபெற்ற இளம் அரசியல் தலைவர்களுக்கான உச்சி மாநாடு போன்றவற்றில் கலந்துகொண்டுள்ளார். மேலும் 2010இல் தில்லியில் நடந்த இன்றியமையாத- ஆசிய பெண் தலைவர் குரல் என்ற தலைவர்கள் கூடலில் கலந்துகொள்ள இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
ஜோதிமணி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 மற்றும் இந்தியப் பொதுத் தேர்தல், 2014 போன்றவற்றில் போட்டியிட்டுள்ளார்.
தேர்தல்கள்
போட்டியிட்டவை
தேர்தல்கள் | தொகுதி | கட்சி | முடிவு | வாக்கு விழுக்காடு | எதிர் வேட்பாளர் | எதிராக போட்டியிட்ட கட்சி | எதிர் வேட்பாளரின் வாக்கு விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 | கரூர் | காங்கிரசு | தோல்வி | 34.10 | வி. செந்தில் பாலாஜி | அதிமுக | 61.18[4] |
இந்தியப் பொதுத் தேர்தல், 2014 | கரூர் | காங்கிரசு | தோல்வி | 2.91 | மு. தம்பிதுரை | அதிமுக | 51.64[5] |
இந்தியப் பொதுத் தேர்தல், 2019 | கரூர் | காங்கிரசு | வெற்றி | 63.06 | மு. தம்பிதுரை | அதிமுக | 24.94 |
இந்தியப் பொதுத் தேர்தல், 2024 | கரூர் | காங்கிரசு | வெற்றி | 47.3 | எல் தங்கவேல் | அதிமுக | 32.5 |
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், 2016
2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது இவர் தனது தேர்தல் பரப்புரையை, 2016 சூலை மாதம், அரவக்குரிச்சி சட்டமன்றத் தொகுதியில் தொடங்கினார். இவர் களத்திலும், சமூக ஊடகங்கள் வழியாகவும் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டார். மேலும் தொகுதியின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்தார். மேலும் இவர் தனது வேட்பாளரை ஆதரித்து "தவறிய அழைப்பை" அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை தொகுதியில் விநியோகிக்கப்பட்டன. இவரது முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்குகளில் ஹேஸ்டேக், 'அரவக்குறிச்சி 2016' என்ற பதிவுகளில் தொகுதி மற்றும் வாக்காளர்களுடன் இவரது தொடர்பு குறித்த படங்கள் போன்றவை நிரம்பி உள்ளன. வாக்காளர்களை அணுக இளைஞர் குழுக்களை உருவாக்கினார்.[6]
இதற்கிடையில் தி.மு.க. மற்றும் காங்கிரசு கட்சிகளிக்கு இடையில் தொகுதிபங்கீடு ஏற்பட்டது. அதில் காங்கிரசுக்கு 41 இடங்கள் என முடிவானது. ஆனால் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் காங்கிரசு போட்டியிடும் தொகுதிகள் வெளியானது. இந்த பட்டியலில் அரவக்குறிச்சி தொகுதி இடம்பெறவில்லை. ஆனால் ஜோதிமணி தான் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அச்சுறுத்தினார். ஆனாலும் கூட்டணிக் கட்சி தொகுதியை விட்டுத்தர மறுத்துவிட்டது. காரணம் இந்தத் தொகுதியானது அதற்கு முந்தைய தேர்தலில் தி.மு.க. வென்ற தொகுதிகளில் ஒன்றாகும். மேலும் இந்த முறை தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுபவராக கட்சியின் முக்கிய தலைவராக இருந்த கே. சி. பழனிசாமி இருந்தது காரணம் ஆகும்.[7] தனது ஆதரவாளர்களுடன் ஆலோசணை நடத்திய பின்னர், காங்கிரசு கட்சியின் நலனுக்காக ஆரவக்குறிச்சி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதில்லை என முடிவெடுத்தார்.[8][9] தேர்தல் 2016 மே 16 அன்று நடைபெறவிருப்பதாக அறிவித்தது.[10] பின்னர் தேர்தல் ஆணையமானது தேர்தலை 2016 மே 23 அன்றைக்கு ஒத்திவைத்தது.[11] அதன்பிறகு தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியுடன் தேர்தலை சேர்த்து நடத்துவதாகக் கூறி 2016 சூன் 13 ஆம் நாளுக்கு வாக்குப்பதிவை தள்ளிவைத்தது. இறுதியில், தேர்தல் ஆணையமானது அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தேர்தல்களை இரத்து செய்தது.[12]
நாடாளுமன்றத் தேர்தல் 2019
2019 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இவர் 4 லட்சத்து 20,546 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரான தம்பிதுரையை வென்றார்.[13][14]
வகித்த பதவிகள்
மாநில அளவில்
- 1996 முதல் 2006 வரை கே.பரமத்தி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இரண்டு முறை.[2]
- 1997 முதல் 2004 வரை கரூர் மாவட்ட காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர்.
- 1998 முதல் 2000 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.
- 2006 முதல் 2008 வரை, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ், துணைத் தலைவர் .
- 2006 முதல் 2009 வரை தமிழ்நாடு திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினர்.
இந்திய ஒன்றிய அளவில்
- கேரள இளைஞர் காங்கிரசின் தேசிய ஒருங்கிணைப்பாளர் - 2008
- இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக - 2009 முதல் 2012 வரை (நியமித்தவர் ராகுல் காந்தி , * தேசிய அளவிலான தேடல் மூலமாக).
- கேரள இளைஞர் காங்கிரஸ் உட்கட்சி தேர்தலுக்கான, தேர்தல் பொறுப்பு அலுவலர் (கூடுதல் பொறுப்பு).
- நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் - 2019 முதல்
எழுதிய நூல்கள்
விருதுகள்
- சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது - 1999[15]
- சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சக்தி விருது - 2007[15]
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 ADR. "Jothimani(Indian National Congress(INC)):Constituency- KARUR(KARUR) – Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
- ↑ 2.0 2.1 "Jothimani gets Congress ticket for Karur Lok Sabha seat" (in en-IN). The Hindu. 26 March 2014. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/jothimani-gets-congress-ticket-for-karur-lok-sabha-seat/article5833845.ece.
- ↑ "IIM grads, techies set to contest Tamil Nadu polls". electionnow.tv. Archived from the original on 2016-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
- ↑ http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-11-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ "Jothimani's campaign kicks up row in Karur" (in en-IN). The Hindu. 12 March 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/jothimanis-campaign-kicks-up-row-in-karur/article8344116.ece.
- ↑ "Why Jothimani Did Not Stand a Chance Against KCP". பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
- ↑ "Jothimani agreed not to contest" (in en-IN). The Hindu. 18 April 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/jothimani-agreed-not-to-contest/article8487845.ece.
- ↑ "Aravakurichi Assembly Election 2016 Latest News & Results". பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
- ↑ "Aravakurichi Assembly Election 2016 Latest News & Results". பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
- ↑ "Polls in Aravakurichi, Thanjavur further postponed to June 13" (in en-IN). The Hindu. 20 May 2016. http://www.thehindu.com/elections/tamilnadu2016/polls-in-aravakurichi-thanjavur-further-postponed/article8625827.ece.
- ↑ "Election Commission cancels polls to Aravakurichi and Thanjavur Assembly seats". பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
- ↑ "வேட்பாளர் அறிவோம் - ஜோதிமணி ( கரூர் காங்கிரஸ் )". News18. 26 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2019.
- ↑ "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)
- ↑ 15.0 15.1 15.2 15.3 15.4 "Karur Jothimani: Jothimani Biodata English". karurjothimani.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- தமிழகப் பெண் எழுத்தாளர்கள்
- கரூர் மாவட்ட நபர்கள்
- தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்
- தமிழ்நாடு அரசியலில் பெண்கள்
- 1975 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- 17வது மக்களவை உறுப்பினர்கள்
- இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழ முன்னாள் மாணவர்கள்
- 18ஆவது மக்களவை உறுப்பினர்கள்