கனிகா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கனிகா
Kanihaa.jpg
பிறப்புதிவ்யா வெங்கடசுப்பிரமணியம் ஐயங்கார்
சூலை 3, 1982 (1982-07-03) (அகவை 42)
மதுரை, தமிழ் நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்கனிஹா, திவ்யா, சிரவந்தி
பணிநடிகை, பின்னணிப் பாடகி, தொகுப்பாளினி
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போதுவரை

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் ஐயங்கார் என்ற இயற்பெயரைக் கொண்ட கனிகா, ஓர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் கன்னட, மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பிள்ளைப் பருவம்

திவ்யா, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில் பிறந்தவர், இவரின் பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். மதுரையிலிருந்த பிரபலமான பள்ளியொன்றில் படித்த திவ்யா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார் [1] பின்னர் இராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் (பிட்ஸ்) இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட திவ்யா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது.

பின்குரலும் பாடுதலும்

இவரின் இனிய குரலும் சரியான தமிழ் உச்சரிப்பும் இவர் பின்னணிப் பாடகராக உதவின. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார். இவர் நடித்த திரைப்படமான பைவ் சுடாரின் கருப்பாடலிலும் பாடினார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி திரைப்படத்தில் சிரேயாவுக்கும் குரல் கொடுத்தார்.. [2]

திரைத்துறை

நடிகையாக

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2002 'ஃபைவ் ஸ்டார் ஈசுவரி தமிழ்
2003 'ஒட்டேசி செப்புதன்னா திவ்யா தெலுங்கு
2004 அன்னவாரு சுப்புலட்சுமி கன்னடா
எதிரி காயத்ரி நடராசன் தமிழ்
ஆட்டோகிராப் தேன்மொழி செந்தில் தமிழ்
2005 டான்சர் திவ்யா தமிழ்
2006 நா ஆட்டோகிராப் சந்தியா தெலுங்கு
' திவ்யா கன்னடம்
என்னிதும் சினேகா மலையாளம்
வரலாறு காயத்ரி தமிழ்
2008 ராசகுமாரி ராசகுமாரி கன்னடம்
2009 பாக்யதேவதா டெய்சி பென்னி மலையாளம் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்காக நியமிக்கப்பட்டவர்
பழசிராசா கைதேரி மாகம் மலையாளம்
மை பிக் பாதர் அன்சி மலையாளம்
2010 துரோணா துளசிமணி மலையாளம்
2011 கிறித்தியன் பிரதர்சு ஸ்டெல்லா மலையாளம்
2012 'கோப்ரா ஆனி மலையாளம்
'ஸ்பிரிட் மீரா மலையாளம்

பின் குரல் கொடுப்பவராக

ஆண்டு படம் இவருக்காக மொழி குறிப்பு
2005 சச்சின் ஜெனிலியா டி சௌசா தமிழ்
2005 அந்நியன் சதா தமிழ்
2007 சிவாஜி' சிரேயா சரன் தமிழ்

பின்னணிப் பாடகராக

ஆண்டு தலைப்பு படம் மொழி இசையமைப்பாளர் குறிப்பு
2002 "எங்களுக்கு" பைவ் ஸ்டார் தமிழ் பரசுராம்-ராதா
2011 "டேதடி" தூக்குடு தெலுங்கு தமன்

விளம்பரங்கள்

கனிகா, நன்கறியப்பட்ட பல நிறுவனங்களின் பொருட்களை விளம்பரப்படுத்தியுள்ளார். குறிப்பிடத்தக்கவற்றுள் சில:

  • தி சென்னை சில்க்சு
  • கல்யாண் சேலைகள், நகைகள்
  • ரத்னா தங்க மாளிகை
  • டாட்டா கோல்டு பிளசு
  • ஆச்சி மசாலா
  • சீமாசு சில்க்சு

விருதுகள்

  • ஏசியானெட் திரைப்பட விருதுகள் - பாக்யதேவதா, பழசிராஜா ஆகிய படங்களுக்காக சிறப்பு விருது

[3]

  • 2009 ஆண்டிற்கான மலையாளத் திரைப்பட விருது, சிறந்த நடிகை, பாக்யதேவதா, பழசிராஜா ஆகிய படங்களுக்காகப் பெற்றார்.[4]
  • 2009 ஆண்டிற்கான கேரளத் திரைப்பட சங்கத்தின் சிறப்பு நடிகைக்கான விருது[5]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கனிகா_(நடிகை)&oldid=22534" இருந்து மீள்விக்கப்பட்டது