மாமதுரை போற்றுவோம் (விழா)
மாமதுரை போற்றுவோம் என்பது மதுரை மாநகரின் பழம் பெருமைகளை விளக்கும் வகையில் நடத்தப் பெற்ற ஒரு சிறப்பு விழாவாகும்[1].
நோக்கம்
மதுரை மாநகரின் வரலாற்றுத் தொன்மை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவைகளை அனைவருக்கும் அறிவிக்கும் வகையில் இந்த விழாவைக் கொண்டாடுவதே இதன் நோக்கமாக இருந்தது.
விழாக்குழு
இந்த விழாவிற்கு அமைக்கப்பட்ட குழுவில் தலைவராக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து தி. கண்ணன், துணைத்தலைவராக சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் மற்றும் பரத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
விழா நடத்தப் பெற்ற நாட்கள்
2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 முதல் பெப்ரவரி 10 வரை[2] மூன்று நாட்கள் நடத்தப் பெற்ற இவ்விழாவில், முதல் நாள் “மாமதுரை போற்றுவோம்” எனும் தலைப்பில் தொடக்க விழாவும், இரண்டாம் நாள் “தொன்மையைப் போற்றுவோம்” என்ற தலைப்பில் மதுரை நகரின் தொன்மையை விளக்கும் விழாவும், மூன்றாம் நாள் “வைகையைப் போற்றுவோம்” எனும் தலைப்பில் மதுரை நகரின் முக்கிய ஆறான வைகை ஆற்றின் சிறப்புகளை விளக்கும் விழாவும் நடத்தப் பெற்றன.
வெளி இணைப்புகள்
- மாமதுரை போற்றுவோம் விழாவிற்கான இணையதளம் பரணிடப்பட்டது 2013-01-08 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ ""மாமதுரை போற்றுவோம்" மதுரையின் பழம்பெருமையை விளக்க இதோ ஒரு மாபெரும் விழா!". தினமலர். பிப் 08, 2013. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=643917. பார்த்த நாள்: 19 சூலை 2015.
- ↑ "மாமதுரை போற்றுவோம்! மண்ணின் பெருமை பேச ஒரு விழா". ஜூனியர் விகடன். 3 பிப்., 2013. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)