மண்டலபுருடர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மண்டலபுருடர் என்பவர் சூடாமணி நிகண்டு என்னும் நூலை இயற்றியவர்.[1] இவர் தன்னை "வீங்குநீர்ப் பழனம் சூழ்ந்த வீரமண்டலவன்" எனக் கூறிக்கொள்கிறார். வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. இவரது சமயம் ஆருகதம். இதனை இவரது 'பன்னிரண்டாவது பல்பெயர்க் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி' என்னும் பகுதிக்கு எழுதப்பட்டுள்ள சிறப்புப் பாயிரத்திலுள்ள தொடரால் அறியலாம்.[2] இவர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்தவர். பல வடசொற்களைத் தமிழ்ச்சொள்களாக ஆக்கிப் பொருளினைத் தொகுத்துக் கூறியுள்ளார். நிகண்டு நூல்கள் பலவற்றில் இவர் இயற்றிய நிகண்டு விருத்தம் என்னும் யாப்பில் உள்ளமையால் பலரும் படித்துப் புரிந்துகொண்டு போற்றுகின்றனர்.

அடிக்குறிப்பு

  1. மண்டல புருடர் (1509-1529 (கிருஷ்ணதேவராயர் காலம்)). சூடாமணி நிகண்டு மூலமும் உரையும் (ஆறுமுக நாவலர் பரம்பரை யாழ்ப்பாணம் மேலைப்புலியூர் நா. கதிரைவேற்பிள்ளை மாணாக்கர் ப. கணேச முதலியார் 12 ஆம் தொகுதிக்கு எழுதிய உரையுடன்), பதிப்பு 1934. திருநெல்வேலி, சென்னை: பூமகள் விலாச அச்சுக்கூடம். p. 83. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. சொல்வகை எழுத்து எண் எல்லாம் தொல்லை நூல் எல்லையா
    நல்வகை யாக்குப் பிண்டி நான்முகன் நாளும் தீமை
    வெல்வினை தொடங்கச் செய்து வீடு அருள்வோன் தாள் போற்றி
    பல்வகைப் பெயர்க் கூட்டத்தின் ஒருபெயர் பகரல் உள்ளாம்.
"https://tamilar.wiki/index.php?title=மண்டலபுருடர்&oldid=18234" இருந்து மீள்விக்கப்பட்டது