ஆள்கூறுகள்: 13°03′56″N 80°09′39″E / 13.065600°N 80.160800°E / 13.065600; 80.160800

மதுரவாயல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>பொதுஉதவி பயனரால் செய்யப்பட்ட 14:45, 31 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (மக்கள் வகைப்பாடு: சிறு திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மதுரவயல்
மதுரவயல்
அமைவிடம்: மதுரவயல், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°03′56″N 80°09′39″E / 13.065600°N 80.160800°E / 13.065600; 80.160800
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் மதுரவாயல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி மதுரவாயல்

-

சட்டமன்ற உறுப்பினர்

க. கணபதி (திமுக)

மக்கள் தொகை 44,127 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


36 மீட்டர்கள் (118 அடி)


மதுரவாயல் (ஆங்கிலம்:Maduravoyal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும், மதுரவாயல் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது சென்னை மாநகராட்சி பகுதியாகவும் உள்ளது. மதுரவாயல் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4] சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது. சென்னை புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டத்தில் வெளி வளையச் சாலை, மதுரவாயலைக் கடந்து, சென்னையின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைப்பகுதிகளுக்குச் செல்கிறது. அண்மையில் உள்ள சுற்றுப் பகுதிகள்: கோயம்பேடு, நெற்குன்றம், அடையாளம்பட்டு, திருவேற்காடு, வளசரவாக்கம், ஆலப்பாக்கம் மற்றும் போரூர்.

மக்கள் வகைப்பாடு

2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், 44,127 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மதுரவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%; பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. மதுரவயல் மக்கள்தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்வி

  • டாக்டர் எம்ஜியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
  • இராஜராஜேசுவரி பொறியியல் கல்லூரி
  • தாய் மூகாம்பிகை பல்தொழில்நுட்பக் கல்லூரி
  • மீனாட்சி பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
  • திரு செவன்இல்சு பல்தொழில்நுட்பக் கல்லூரி

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225432-sriperumbudur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025. 
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved அக்டோபர் 20, 2006.



"https://tamilar.wiki/w/index.php?title=மதுரவாயல்&oldid=458314" இலிருந்து மீள்விக்கப்பட்டது