இலங்கைத் தமிழர் வரலாறு - தமிழ் நூல் பட்டியல்
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் நூல்கள் |
---|
முதன்மைப் பகுப்புகள்
|
சிறப்புப் பகுப்பு
|
பொதுப் பிரிவு
|
மெய்யியல் துறை |
தத்துவம். உளவியல். ஒழுக்கம் |
சமயங்கள் |
சமூக அறிவியல் |
சமூகம்.பெண்ணியம். அரசறிவியல் |
மொழியியல் |
தூய அறிவியல் |
பயன்பாட்டு அறிவியல் |
தொழில் நுட்பம்.
பொதுச் சுகாதாரம் |
கலைகள், நுண்கலைகள் |
இலக்கியங்கள் |
சிங்களம்.
தமிழ் .
பிறமொழி.
கவிதை.
நாடகம் .
காவியம்.
சிறுகதை.
புதினங்கள்.
திறனாய்வு, கட்டுரை.
பலவினத்தொகுப்பு |
பொதுப்புவியியல் |
வாழ்க்கை வரலாறு |
துறைசாரா வாழ்க்கை வரலாறு .
ஊடகம்.
சமயம்.
போராளி .
அரசியல்.
பிரமுகர் .
கலைஞர் .
இலக்கிய அறிஞர் |
தொகு |
பழைய நூல்கள்
- பரராசசேகரம் - 14 - 16ஆம் நூற்றாண்டு.
- கதிரைமலைப்பள்ளு - 14 - 16ஆம் நூற்றாண்டு.
ஆண்டுகள் 1501 - 1600
- வையாபாடல் - வையாபுரி ஐயர், (15ம் 16ம் நூற்றாண்டின் இடைப்பட்டக்காலம்) சரியான ஆண்டு அறியப்படாதவை.
- கைலாய மாலை - முத்துராசக் கவிராசர், 1591.
ஆண்டுகள் 1601 - 1700
ஆண்டுகள் 1701 - 1800
- யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகனப் புலவர், 1736.
- தண்டிகைக் கனகராயன் பள்ளு - சின்னக்குட்டிப் புலவர் கனகராயன் செட்டி மேல் பாடியது.
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இலக்கியங்கள்
இவர் இலக்கியங்கள் அனைத்தும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
- பறாளை விநாயகர் பள்ளு - சுழிபுரம், பறாளை என்னும் இடத்திலுள்ள விநாயகப் பெருமானின் மேற் பாடப்பட்டது.
- மறைசையந்தாதி - இது வேதாரணியேசுரர் மேற் பாடப்பெற்றது. இதற்கான உரையை உடுப்பிட்டி அ.சிவசம்புப் புலவரும், மதுரை மாகா வித்துவான் சபாபதி முதலியார் எழுதியுள்ளார்கள்
- கல்வளையந்தாதி - இது யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் கல்வளையில் உள்ள விநாயகர் மீது பாடப் பெற்றது. இதற்கான உரையை வல்வெட்டித்துறை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ஸ்ரீ.வைத்திலிங்கம் பிள்ளை எழுதியுள்ளார்.
- கரவை வேலன் கோவை - கரவெட்டி பிரபு திலகராகிய வேலாயுதம் பிள்ளை மேற் பாடப்பட்டது. இக்கோவையை அரங்கேற்றியபோது ஒவ்வொரு செய்யுட்கும் ஒவ்வொரு பொற்றேங்காய் பரிசாக அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இச் செய்யுட்கள் சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் அவர்களால் “செந்தமிழ்” பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
ஆண்டுகள் 1801 - 1900
ஆண்டுகள் 1901 - 1950
- யாழ்ப்பாணச் சரித்திரம் - முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணம், 1915.
- யாழ்ப்பாண வைபவ கௌமுதி - க. வேலுப்பிள்ளை, 1918.
- யாழ்ப்பாண வைபவ விமரிசனம் - சுவாமி ஞானப்பிரகாசர், அச்சுவேலி, 1928.
- யாழ்ப்பாணச் சரித்திரம் - இராசநாயகம், செ., 1933.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
- மட்டக்களப்பு மான்மியம் - எவ். எக்ஸ்.சீ. நடராசா, மட்டக்களப்பு மாவட்ட கலாச்சாரப் பேரவை, 1962
- மட்டக்களப்புத் தமிழகம் - வி. சீ. கந்தையா, ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம், 1964
ஆண்டுகள் 1971 - 1980
- தமிழ் ஈழம்: நாட்டு எல்லைகள் - சின்னத்தம்பி மற்றும் சச்சிதானந்தன், காந்தளகம், 1977
ஆண்டுகள் 1981 - 1990
- இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும், எஸ். ஜெபநேசன், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 1983.
ஆண்டுகள் 1991 - 2000
- குளக்கோட்டன் தரிசனம் - க.தங்கேஸ்வரி, அன்பு வெளியீடு, 1993
- மட்டக்களப்பு மான்மியம் (ஓர் ஆராய்ச்சி) - திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம், சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம், 1993
- மாகோன் வரலாறு - க.தங்கேஸ்வரி, அன்பு வெளியீடு, 1995
- யாழ்ப்பாண இராச்சியம் - சிற்றம்பலம், சி. க. (பதிப்பாசிரியர்), யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், 1992.
- நூறு வருட மட்டுநகர் நினைவுகள் - எஸ். பிரான்சிஸ், அன்பு வெளியீடு, 1994
- தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, ப. புஷ்பரட்ணம், பவானி பதிப்பகம், புத்தூர், 2000.
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2003
- இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்பதோற்றம் பற்றியதோர் ஆய்வு - முருகர் குணசிங்கம், தென் ஆசியவியல் மையம், சிட்னி, 2003. (தமிழ் ஆங்கிலம் இருமொழி வெளியீடு)
ஆண்டு 2004
- அடங்காப்பற்று (வன்னி) வரலாறு பாகம் 1 கி.மு-கி.பி., அருணா செல்லத்துரை, அருணா வெளியீட்டகம், கொழும்பு, 2004.
ஆண்டு 2005
- இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்: அனைத்துலகத் தேடல் - முருகர் குணசிங்கம், தென் ஆசியவியல் மையம், சிட்னி, 2005. (தமிழ் ஆங்கிலம் இருமொழி வெளியீடு)
- மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் (நூல்) - வெல்லவூர்க் கோபால் (எஸ். கோபாலசிங்கம்), ஆதவன் அச்சகம், 2005
- அடங்காப்பற்று (வன்னி) வரலாறு பாகம் 3 சுதேசத் தலைமைகள் கி.பி.1750-1895, அருணா செல்லத்துரை, அருணா வெளியீட்டகம், கொழும்பு, 2005.
ஆண்டு 2006
- இலங்கையில் தமிழர் - ஒரு இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு பொ. ஆ. மு 300 - பொ. ஆ. 1200, இந்திரபாலா, கா., குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2006.
- மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் - சத்தியசீலன், சமாதிலிங்கம்., அயோத்தி நூலக சேவை, ஐக்கிய இராச்சியம், 2006.
- அடங்காப்பற்று (வன்னி) வரலாறு பாகம் 2 பண்டாரவன்னியன் கி.பி.1750-1811, அருணா செல்லத்துரை, அருணா வெளியீட்டகம், கொழும்பு, 2006.
ஆண்டு 2007
- அடங்காப்பற்று (வன்னி) வரலாறு பாகம் 4 மாப்பாண வன்னியர் + மடப்பளி வன்னியர் கி.பி.1625-1800, அருணா செல்லத்துரை, அருணா வெளியீட்டகம், கொழும்பு, 2007.
ஆண்டு 2008
- இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு - முருகர் குணசிங்கம், எம் வி வெளியீடு (தென் ஆசியவியல் மையம்), சிட்னி, 2008. (பன்மொழி வெளியீடு)
ஆண்டு 2009
- இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன், எஸ். ஜெபநேசன், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2009.
ஆண்டு 2010
- அடங்காப்பற்று (வன்னி) வரலாறு பாகம் 5 அடங்காப்பற்று முதலிமார் கி.பி.1795-1948, அருணா செல்லத்துரை, அருணா வெளியீட்டகம், கொழும்பு, 2010.
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229