முருகர் குணசிங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முருகர் குணசிங்கம் அல்லது கலாநிதி முருகர் குணசிங்கம் (Murugar Gunasingam) என்பவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து, தற்போது புலம் பெயர்ந்து வாழும் ஒரு புகழ்பெற்ற வரலாற்று நூலாசிரியர் ஆவர். இலங்கை தமிழரின் வரலாறு தொடர்பில் இவர் எழுதிய நூல்கள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் அறிவுஜீவிகள், கல்விமான்கள், புலமைசார் அறிவியலாளர்கள், பல்கலைக்கழகங்கள் என பல்வேறு மட்டத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றவைகளாகும். அத்துடன் இவர் ஒரு நூலக விஞ்ஞானத் துறையாளரும் ஆவார். இலங்கைத் தீவில் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள், அரசியல், சமூக, சமய, மொழி, கலை, பண்பாடு போன்ற விடயங்கள் குறித்து பல்வேறு ஆசிரியர்கள் பல நூல்களை எழுதியிருந்தாலும், இலங்கையில் தமிழர் தொடர்பான ஒரு முழுமையான வரலாற்று நூல் இருக்கவில்லை. அதனை ஈடுசெய்யும் முகமாக, முருகர் குணசிங்கம் அவர்கள் பல்லாண்டுகள் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க ஆய்வின் ஊடாக, சான்றாதாரங்களுடனும் எழுதப்பட்ட முழுமையான நூல்கள் இவைகள் ஆகும். இவரால் எழுதப்பட்ட நூல்கள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மட்டுமன்றி, உலகின் பல்வேறு அறிவுசார் மட்டங்களிலும் பாராட்டுக்களை பெற்றன.

எழுதிய நூல்கள்

இலங்கை தமிழ் தேசியவாதம்

இது இவர் எழுதிய முதல் வரலாற்று நூலாகும். இந்த நூல்

இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்

கலாநிதி.முருகர் குணசிங்கம் அவர்களின் இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் அனைத்துலகத் தேடல் என்ற நூல் அறிமுக விழாவை பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தியது. இந்த நூல் ஒரே நூலாக தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் "PRIMARY SOURCES FOR HISTORY OF THE SRI LANKAN TAMILS A world-wide search" என பெயரிடப்பட்டிருந்தது.

இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு

இலங்கைத் தமிழரின் முழுமையான வரலாற்றை சான்றாதாரத்துடன் விளக்கும் இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு இலங்கைத் தமிழர் வரலாற்றில் கி.மு. 300 தொடக்கம் கி.பி. 2000 வரையிலான முழுமையான ஆவணமாக போற்றப்படுகிறது. இந்நூல் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டது சிறப்பு இந்த நூலுக்கு உரியது. அத்துடன் பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யத் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

விருது

கனடிய இலக்கியத் தோட்டம், தனது 2008 ஆம் ஆண்டு இயல் விருது விழாவின் போது, கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் "இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு" நூலுக்கு உலக தமிழ் ஆசிரியர் நினைவாக 2008 ஆம் ஆண்டுக்கான சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=முருகர்_குணசிங்கம்&oldid=2781" இருந்து மீள்விக்கப்பட்டது