மட்டக்களப்பு மான்மியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மட்டக்களப்பு மான்மியம்
Maddakkalappu manmiyam.jpg
மட்டக்களப்பு மான்மியம்
நூலாசிரியர்எவ். எக்ஸ்.சீ. நடராசா
நாடுஇலங்கை
மொழிதமிழ்
வகைவரலாறு
வெளியீட்டாளர்மட்டக்களப்பு மாவட்ட கலாச்சாரப் பேரவை
வெளியிடப்பட்ட நாள்
1962
பக்கங்கள்XII + 128 + 9

மட்டக்களப்பு மான்மியம் என்பது மட்டக்களப்பின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.[1] இந்நூல் இப்பிரதேசத்தில் உலவிய ஏட்டுப் பிரதிக்ளின் தொகுப்பாக எஃப். எக்ஸ். சீ. நடராசா என்பவரால் 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மட்டக்களப்பின் சரித்திரத்தைக் கூறும் இந்நூல் யாரால் எழுதப்பட்டது என்பதை நூன்முகத்தானும் மறுமுகத்தானும் அறிந்து கொள்ள முடியவில்லை என ஆசிரியரே தன் நூல் வரலாற்றில் கூறுகிறார்.[2] ஆலயங்களின் கல்வெட்டுகளாகவும் செப்பேடுகளாகவும் மற்றும் பத்ததிக் குறிப்புகளாவும் அமைந்த ஏட்டுச்சுவடிகளின் தொகுப்பெ இந்நூல் எனலாம்.

ஆதிகாலம் தொட்டு இடச்சு ஆட்சியின் ஆரம்பம் வரையான மட்டக்களப்பின் சரித்திரத்தை இந்நூல் கூறுகிறது.[3] எனினும் பல்வேறு காலப்பகுதிகளில் பல்வேறு பட்டவர்களால் எழுதப்பட்ட ஏட்டுப்பிரதிகளின் தொகுப்பு என்பதால் பல கர்ணபரம்பரைக் கதைகளையும் நம்பிக்கைகளையும் இது கொண்டிருப்பதாகவும் திரிபுகளும், குழப்பங்களும் நேர்ந்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் மட்டக்களப்பு வரலாறு தொடர்பில் இந் நூல் மிகமுக்கியமானதாகும்.

உள்ளடக்கம்

இந்நூல் மட்டக்களப்பின் பூர்வ சரித்திரம் பற்றி எடுத்துக் கூறுகிறது. மட்டக்களப்புப் பெருநிலத்தை ஆண்ட மன்னர்களின் சரித்திரவியல் காட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் சாதியியல், ஆலயமுறை,குளிக்கல் வெட்டுமுறை என்பனவும் விபரிக்கப்பட்டுள்ளன. பெரிய கல்வெட்டு, தாதன் கல்வெட்டு, போடிகல்வெட்டு என்பன அப்படியே பதிவுசெய்யப்பட்டுள்ளன. திருப்படைக் களஞ்சியம், குடுக்கை கூறும் விபரம்,குலச்சிறை, கும்பவரிசை என்பனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நூலின் பிரதான பகுதிகள்

  1. நாமவியல்
  2. சரித்திர இயல்
  3. சாதியியல்
  4. ஆலயவியல்
  5. ஒழிபியல்

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=மட்டக்களப்பு_மான்மியம்&oldid=15181" இருந்து மீள்விக்கப்பட்டது