எஸ். ஜெபநேசன்
இயற்பெயர் | எஸ். ஜெபநேசன் S. Jebanesan |
---|---|
பிறப்பு | 28-03-1940 (அகவை 83) |
கல்வி நிலையம் | டிரிபேர்க் கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
பெற்றோர் | என். சுப்பிரமணியம், கனகம்மா |
வண. எஸ். ஜெபநேசன் (பிறப்பு: 28 மார்ச் 1940) தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஓய்வு பெற்ற பேராயர். இவர் யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றியவர். பல பட்டங்களைப் பெற்ற இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களையும் எழுதியுள்ளார்.
வரலாறு
இவர் 1940 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரியில் ஆசிரியர்களான என். சுப்பிரமணியம், கனகம்மா ஆகியோருக்குப் பிறந்தார். தனது கல்வியை முதலில் அவரது பிறந்த ஊரில் இருக்கும் சாவகச்சேரி டிரிபேர்க் கல்லூரியிலும், பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றதுடன், அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். பின்னர் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் தத்துவம், ஆங்கிலம் ஆகிய துறைகளிலும் முதுமாணிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினதும், பின்னர் மருதனாமடத்தில் அமைந்துள்ள இறையியற் கல்லூரியிலும் அதிபராகப் பணியாற்றினார்.[1]
எழுதிய நூல்கள்
இவர் சார்ந்த அமெரிக்க மிஷன் தொடர்பாகவும், கிறித்தவம் தொடர்பிலும் பல நூல்களை இவர் ஆக்கியுள்ளார். இவற்றுட் சில பின்வருமாறு.
- இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும்
- இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்
- யாழ்ப்பாணத்துக் கிறிஸ்தவக் கவிஞர்களும் கீர்த்தனைகளும்
- பழையதும் புதியதும்
- பேராயர் சபாபதி குலேந்திரன்
- வணக்கத்துக்குரிய டானியல் பூவர்
மேற்கோள்கள்
- ↑ ஜெபநேசன், எஸ்., இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2009. பின் அட்டை.