அனிச்சம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அனிச்சம் மலர்
Anagallis arvensis 2.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Primulaceae
பேரினம்: Anagallis
இனம்: A. arvensis
இருசொற் பெயரீடு
Anagallis arvensis
L
நீல அனிச்சம், இசுரேல்.

அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) என்பது குறைவாக வளரும் ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் தாயகப் பகுதிகளாக ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்கள் காணப்படுகின்றன.[1]

இதன் பூக்கள் மிகவும் மென்மையான இதழ்களை உடையன. முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ.[2] இதன் பூக்ககள் மென் செம்மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் காணப்படும். இது சூரியன் உதித்ததும் அதன் பூக்கள் மலரத் தொடங்கும்.[3]

அனிச்சம் சங்கநூல்கள் குறிப்பிடும் மலர்களில் ஒன்று.

மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்றாகக் குறிஞ்சிப்பாட்டு நூல் குறிப்பிடுகிறது.[4] நீலம், அல்லி, அனிச்சம், முல்லை, நறவு ஆகிய மலர்களைக் தலையில் அணியும் கண்ணியாகவும், கழுத்தில் அணியும் மாலையாகவும் தொடுத்து அணிந்துகொண்டனர் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது [5]

மூச்சுக்காற்றுப் பட்டாலே குழையும் அளவுக்கு அனிச்சம் மென்மையான மலர் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.
மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து [6]

இதன் மென்மைத் தன்மை இரண்டு திருக்குறள்களிலும் சுட்டப்படுகிறது.
நன் நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென் நீரள் யாம் வீழ்பவள் [7]
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப்பழம் [8]

அனிச்சம் பூ மிகவும் இலேசானது என்று ஒரு திருக்குறள் குறிப்பிடுகிறது.
அனிச்சப்பூ கால் களையாப் பெய்தாள் நுசும்பிற்கு
நல்ல படா பறை [9]

காப்பியங்களில் அனிச்சம்

  • ஆண்கள் தலையில் சூடிக்கொள்வர்.[10]
  • மாலையாகத் தொடுத்தும் அணிவர்.[11]
  • பட்டாடை மேல் அனிச்ச மாலை அணிவர்.[12]
  • கருவைத் தாங்கும் பெண்ணுக்கு அனிச்ச மலரும் சுமையாயிற்று.[13]
  • அல்லிப் பூவோடு சேர்த்து அனிச்ச மலரை அணிவதும் உண்டு.[14]
  • ஐ என்னும் வியப்புக்கு உரிய மலர்.[15]
  • குழையும் மலர்.[16]
  • பஞ்சி படர்ந்த மலர்.[17]
  • அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மிகவும் மென்மையானவை.[18]
  • வியப்புக்கு உரிய நொய்ய மலர்.[19]

உசாத்துணை

  1. "Factsheet – Anagallis arvensis". http://www.iewf.org/weedid/Anagallis_arvensis.htm. 
  2. "அனிச்சம் aṉiccam". http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:5232.tamillex. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Scarlet Pimpernel (Anagallis arvensis)". Connecticut Botanical Society இம் மூலத்தில் இருந்து 2011-06-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605120535/http://www.ct-botanical-society.org/galleries/anagallisarve.html. 
  4. அடி 62
  5. அடி 1-2
  6. திருக்குறள் 90
  7. திருக்குறள் 1111
  8. திருக்குறள் 1120
  9. திருக்குறள் 1115
  10. குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டுணும் – சீவகசிந்தாமணி 1 134/1
  11. அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று ஆய்ந்த அனிச்ச மாலை - சீவகசிந்தாமணி 1 231/3 அனிச்ச பூம் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சி - சீவகசிந்தாமணி 3 745/1
  12. அம் மலர் உரோம பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை - சீவகசிந்தாமணி 13 2667/3
  13. அம் வாய் வயிறு கால் வீங்கி அனிச்ச மலரும் பொறை ஆகி - சீவகசிந்தாமணி 13 2701/3
  14. அம் மலர் அனிச்சத்து அம் போது அல்லியோடு அணியின் நொந்து - சீவகசிந்தாமணி 3 606/1
  15. அலர் தலை அனிச்சத்து அம் போது ஐம் முழ அகலம் ஆக - சீவகசிந்தாமணி 3 617/2
  16. அனிச்சத்து அம் போது போல தொடுப்பவே குழைந்து மாழ்கி - சீவகசிந்தாமணி 13 2939/1
  17. பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று - சீவகசிந்தாமணி 1 341/1
  18. அம் மெல் அனிச்சம் மலரும் அன்னத் தூவியும் - சீவகசிந்தாமணி 12 2454/1
  19. ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல் - கம்பராமாயணம் பாலகாண்டம்: 22 14/1

வெளி இணைப்புகள்

Wikilogo.JPG
தமிழர்விக்கி பொதுவகத்தில்,
Anagallis arvensis
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=அனிச்சம்&oldid=11091" இருந்து மீள்விக்கப்பட்டது