வேரி மலர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேரி மலர்

வேரி மலர் என்பது பழந் தமிழ் நூல்களில் குறிப்பிடப்படும் ஒருவகை மலர். வேரி என்னும் சொல் ஒருவகை மலரையும், தேனையும் குறிக்கும். முற்காலத்தில் மகளிர் வேரி மலரைக் கூந்தலில் சூடிக்கொள்வர். இரு காதுகளிலும் தொங்கவிட்டுக்கொள்வர்.

மலர்
  • மதுரை மகளிர் கார்காலத்தில் சூடும் பூக்களில் ஒன்று ‘செங்கோட்டு வேரிப் பூ மாலை. [1]
  • இருந்தையூரில் திருமாலின் படுக்கை பாம்பை வழிபட்டவர்கள் இரு காதுகளிலும் வேரி மலரைத் தொங்கவிட்டிருந்தனர். [2]
  • குரவை ஆட ஆய்ச்சியர் 7 பெண்களை நிறுத்தினர். அவர்களில் ஒருத்தி காரிக்காளையை அடக்கியவனைக் காதலித்தவள். அவள் தன் சீவிமுடித்த தன் கூந்தலில் வேரிமலர் சூடியிருந்தாள். [3]
தேன்
ஓரி தன்னைக் காட்டில் கண்டு பாடிய புலவர் வன்பரணருக்கு நெய் போன்ற வேரியை(தேனை) உன்னத் தந்தானாம். [4]
தேன் அல்லது கள்
வெறியாடும் வேலனுக்கு வைத்திருந்த வேரியை(தேனை அல்லது கள்ளை)ப் பாலனுக்கு(முருகனுக்கு)ப் படைத்துவிடுங்கள் என்கிறாள் வெறியாட்டத்தை விலக்கும் ஒருத்தி. [5]

இவற்றையும் பார்க்கவும்

சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்

வேரி மலர் படம் - பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டுவது.

அடிக்குறிப்பு

  1. செங்கோட்டு வேரிச் செழும்பூம் பிணையல் – சிலப்பதிகாரம் 14-91,
  2. கடிப்புகு வேரிக் கதவம் இல் தோட்டி கடிப்பு இரு காதில் கனங்குழை தொடர - பரிபாடல் திரட்டு 1-32
  3. காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ் வேரி மலர்க் கோதையாள். சிலப்பதிகாரம் 17-6-2
  4. ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி - புறநானூறு 152-26
  5. வேரியும் பாலனார்க்கு ஈக - திணைமாலை 12-1
"https://tamilar.wiki/index.php?title=வேரி_மலர்&oldid=11547" இருந்து மீள்விக்கப்பட்டது