வழை மரம்
Jump to navigation
Jump to search
வழை மரம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Malpighiales |
குடும்பம்: | Calophyllaceae |
பேரினம்: | Ochrocarpos |
இனம்: | O. longifolius |
இருசொற் பெயரீடு | |
Ochrocarpos longifolius Benth. & Hook.f. ex T.Anderson |
வழை (Ochrocarpos longifolius) என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும்.[1]
- 'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது. அதன்படி இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும் காட்சியை இந்தப் படத்தில் கண்டு இன்புறலாம்.
- வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்
- ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.[2]
- குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.[3]
- வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.[4]
- நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.[5]
- கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.[6]
- குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.[7]
- தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்தது.[8]
- யானை விரும்பும் தழைமரம்.[9]
- மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.[10]
- வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.[11]
- வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்.[12]
- பண்புப்பெயர்
- வழைச்சு என்னும் சொல் ‘குழகுழத்’ தன்மையைக் குறிக்கும்.[13]
இவற்றையும் காண்க
வெளியிணைப்புகள்
- வழை மலர்கள் படம் பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டுபவை.
அடிக்குறிப்பு
- ↑ ஆசிரியநிகண்டு நான்காவது மரப்பெயர்த் தொகுதி பாடல் 4
- ↑ வழைப்பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன் - புறநானூறு 131-2
- ↑ குறிஞ்சிப்பாட்டு 83
- ↑ பரிபாடல் 12-5
- ↑ வழையொடு வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பு - அகநானூறு 8-8
- ↑ கழை அமல் சிலம்பின் வழை தலை வாட - அகநானூறு 177-7
- ↑ கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, ஆசினிக் கவினிய பலா - புறநானூறு 158-21
- ↑ தொண்டையர் வழை அமல் அடுக்கம் - குறுந்தொகை 260
- ↑ களிறு ... வழை அமல் வியன்காடு சிலம்பப் பிளிறும் - பதிற்றுப்பத்து 41-13
- ↑ கழைவளர் நெல்லின் அரி உலை ஏற்றி வழை அமல் சாரல் கமழத் துழைஇ - மலைபடுகடாம் 181
- ↑ வறன் உறல் அறியாத வழை அமல் நறுஞ்சாரல் - கலித்தொகை 53-1
- ↑ வழைவளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் பாலப் பாராட்டி - கலித்தொகை 50-21
- ↑ வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த வெந்நீர் அரியல் - வழைச்சு – பெரும்பாணாற்றுப்படை 280