தில்லை (மலர்)
Jump to navigation
Jump to search
தில்லை | |
---|---|
Excoecaria agallocha in Krishna Wildlife Sanctuary, Andhra Pradesh, இந்தியா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Malpighiales |
குடும்பம்: | Euphorbiaceae |
சிற்றினம்: | Hippomaneae |
பேரினம்: | Excoecaria |
இனம்: | E. agallocha |
இருசொற் பெயரீடு | |
Excoecaria agallocha L |
தில்லை என்பது ஒரு மரம்.
- ஊர்
- சிதம்பரம் என்னும் ஊருக்கு மற்றொரு பெயர் ‘தில்லை’. தில்லை மரம் மிகுதியாக இருந்த ஊர் தில்லை. தில்லை மரம் அதிகமாக இருந்ததால் தில்லைவனம் என்றழைக்கப்பட்ட ஊர் தில்லைவிளாகம்(முத்துப்பேட்டை அருகே) என்று மருவியது.
- கோயில் மரம்
- தில்லையில் உள்ள சிவன் கோயிலின் காப்புமரம் (தலவிருட்சம்) தில்லை. மற்றும் ஆலமரமும் இதன் காப்புமரம்.
- இந்தத் தில்லைமரம் இப்போது சிதம்பரத்தில் இல்லை. என்றாலும் சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் உப்பங்கழிகளில் இன்றும் மிகுதியாக உள்ளன.
- இடைச்சொல்
- தில்லை இடைச்சொல் தொல்காப்பியம் தமிழிலுள்ள தில்லை என்னும் சொல்லைக் குறிப்பிடுகிறது.[1]
- தில்லை மரம் பற்றிச் சங்கப்பாடல் தரும் செய்திகள்
- குறிஞ்சிநிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் தில்லை மலரும் ஒன்று. இது மணம் வீசும் மலர். இதன் மரம் 'தளதள'வெனத் தழைத்திருக்கும். பெரிதாக இருக்கும்.[2]
- நீர்நாயின் குருளை (குட்டி) மீனை மேய்ந்தபின் தில்லையம் பொதும்பில் (ஆற்றோரக் காடுகளில்) பள்ளி கொள்ளுமாம்.[3]
- தில்லை மரங்கள் ஊருக்கு வேலியாக அமைவது உண்டு.[4]
- உப்பங்கழிகளில் முண்டகமும் தில்லையும் ஓங்கி வளரும்.[5]
- தில்லைக் காய்கள் முனிவர்களின் சடைமுடி தொங்குவது போலக் காய்த்துக் குலுங்கும். புது வெள்ளம் கொட்டும் அருவியில் குளித்துக் குளித்து அவர்களின் தலைமுடி சடை போட்டுவிடுமாம்.[6]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ சொல்லதிகாரம் 260
- ↑ கடிகமழ் கலிமாத் தில்லை - குறிஞ்சிப்பாட்டு 77
- ↑ நற்றிணை 195
- ↑ தில்லை வேலி இவ்வூர் - ஐங்குறுநூறு 131
- ↑ <poem> மாமலர் முண்டகம் தில்லையொடு ஒருங்குடன் கானல் அணிந்த உயர்மணல் எக்கர் – கலித்தொகை 133
- ↑ <poem>கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையொடு அள்ளிலைத் தாளி கொய்யுமோனே - புறநானூறு 252