சிந்து (மலர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிந்து
Vitex negundo Blanco1.228.png
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்


சிந்து மலர் மணமுள்ள மகரந்தப் பொடிகளைச் சிந்துவது. சிந்துரக்கட்டி [1] "சிந்துரச்சுண்ணம் [2] என மணப்பொடிகளை இலக்கியங்கள் போற்றுகின்றன. குங்குமத்தைச் செந்தூரம் என்பர். திலகமிடும்போது சிந்தி மணப்பது சிந்தூரம். சிவப்பாக இருப்பதால் இது செந்தூரம். சிந்தி மணப்பதால் இது சிந்து.

சிந்துவாரம் என்னும் மலர் - பி.ஒல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டும் படம்.
குறிப்பு
விற்பனைக்கு வரும் கோங்கம் பொடியை விலைக்கு வாங்கி மகளிர் மேனியில் பூசிக்கொண்டதை இங்கு நினைவுபடுத்திக்கொள்வோம்.

செந்தூரம் தயாரிக்க உதவுவது செந்தூர மரம். இதன் பழம்பெயர் சிந்து. அதன் மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று. குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 89)

மேலும் காண்க

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

  1. மலைக்குறவர்கள் சேரன் செங்குட்டுவன் மலைவளம் காண வந்தபோது அவனுக்குக் காணிக்கையாகத் தந்த பொருள்களில் ஒன்று சிந்துரக்கட்டி. <poem> "சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும், அஞ்சனத் திரளும், அசி அரிதாரமும் - சிலப்பதிகாரம் 25-39
  2. சிந்துரச்சுண்ணம் சேர்த்த மேனி" - சிலப்பதிகாரம் 14-92
"https://tamilar.wiki/index.php?title=சிந்து_(மலர்)&oldid=11269" இருந்து மீள்விக்கப்பட்டது