நெய்தல் மலர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நெய்தல் மலர்
Blue lotus (Nymphaea nouchali).jpg
நீலாம்பல்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
வரிசை: Nymphaeales
குடும்பம்: அல்லி
பேரினம்: Nymphaea
இனம்: N. nouchali
இருசொற் பெயரீடு
Nymphaea nouchali
Burm. f.
வேறு பெயர்கள்
Castalia acutiloba (DC.) Hand.-Mazz.
Castalia stellaris Salisb.
Castalia stellata (Willd.) Blume
Leuconymphaea stellata (Willd.) Kuntze
Nymphaea acutiloba DC.
Nymphaea cahlara Donn, nom. inval.
Nymphaea cyanea Roxb.
Nymphaea edgeworthii Lehm.
Nymphaea henkeliana Rehnelt
Nymphaea hookeriana Lehm.
Nymphaea malabarica Poir.
Nymphaea membranacea Wall. ex Casp., nom. inval.
Nymphaea minima F.M.Bailey nom. illeg.
Nymphaea punctata Edgew.
Nymphaea rhodantha Lehm.
Nymphaea stellata Willd.
Nymphaea stellata var. albiflora F. Henkel & al.
Nymphaea stellata var. cyanea (Roxb.) Hook. f. & Thomson
Nymphaea stellata var. parviflora Hook. f. & Thomson
Nymphaea stellata var. versicolor (Sims) Hook. f. & Thomson
Nymphaea tetragona var. acutiloba (DC.) F. Henkel & al.
Nymphaea versicolor Sims
Nymphaea voalefoka Lat.-Marl. ex W. Watson, nom. nud.

நெய்தல் மலர் (நீலாம்பல்; Nymphaea nouchali) கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர்.

ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.

நன்னீர் மலர்
குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.

நீர்நிலை மலர்

ஒன்று நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது.[1]
இது சுனையிலும், குளங்களிலும் பூக்கும்.

வயல்வெளி மலர்

மற்றொன்று மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். இது குறுகிய காம்பினைக் கொண்டது.[2]
இது வயலில் பூக்கும்.
உவர்நீர் மலர்
கடலோர உப்பங்கழிகளில் பூக்கும்.

சங்கப்பாடல்கள் தரும் செய்தி

  • நெய்தல் கண்ணுக்கு உவமையாகக் காட்டப்படும்.[3][4]
  • நறுமணம் கொண்டது. செருந்தியொடு சேர்ந்து பூக்கும்.[5]
  • உப்பங்கழியில் பூக்கும்.[6]
  • நெல்வயலில் பூக்கும்.[7][8][9]
  • அலங்கும் இதழ்களைக் கொண்டது.[10]
  • புல்லிய இதழ்களைக் கொண்டது [11]
  • நெய்தல் பூத்திருக்கும் பகுதியை ‘நெய்தல் படப்பை’ என்பர்.[12]
  • கண்ணியாகக் கட்டித் தலையிலும் சூடிக்கொள்வர்.[13]
  • தொடையாகக் கட்டி மார்பில் அணிந்துகொள்வர்.[14]
  • நெய்தல் பூவை தெய்வப்பாவைக்குச் சூட்டும் பழக்கம் இல்லை.[15]
  • வைகறையில் மலரும்.[16]
  • புன்னைப்பூவின் தாதுகள் நெய்தல்மீது கொட்டும்.[17]
  • எருமை நெய்தலின் புதுப்பூக்களை மேயும்.[18]
  • சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் ‘நெய்தலங்கானல் நெடியோய்!’ என விளிக்கிறார். இதனால் நெய்தலங்கானல் என்பது சோழநாட்டின் பகுதியாக விளங்கிய பெருநிலப் பகுதி எனத் தெரிகிறது.[19]

நெய்தல் மலர்கள் படம்

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

  1. குறிஞ்சிப்பாட்டு அடி 79.
  2. குறிஞ்சிப்பாட்டு அடி 84.
  3. ஐங்குறுநூறு 181,
  4. நற்றிணை 113,
  5. ஐங்குறுநூறு 182
  6. ஐங்குறுநூறு 183
  7. ஐங்குறுநூறு 190,
  8. நெய்தலஞ்செறு – அகம் 113
  9. நெய்லங்கழனி – புறம் 209
  10. ஐங்குறுநூறு 185
  11. நற்றிணை 239
  12. திணைமொழி ஐம்பது 41
  13. ஐங்குறுநூறு 135
  14. குறுந்தொகை 401
  15. ஐங்குறுநூறு 187
  16. ஐங்குறுநூறு 188
  17. ஐங்குறுநூறு 189
  18. அகம் 100
  19. புறம் 10
"https://tamilar.wiki/index.php?title=நெய்தல்_மலர்&oldid=11344" இருந்து மீள்விக்கப்பட்டது