குரலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Water caltrop
Illustration Trapa natans1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Myrtales
குடும்பம்: Lythraceae
துணைக்குடும்பம்: Trapoideae
பேரினம்: Trapa
மாதிரி இனம்
Trapa natans
L.
இனங்கள்
  • T. natans
  • T. bicornis
  • T. rossica

குரலி தாவரத்தில் 3 வகைகள் (Trapa natans, Trapa bicornis, Trapa rossica) உள்ளன. அவற்றில் நீர்நிலையிலும், மரத்தில் படரும் வகைள் உள்ளன. இவை சிவப்பு நிறத்தில் நீண்ட குரல்கொத்தாகப் பூக்கும்.

நீர்நிலையில் குரலி
குரலி நீரில் பூக்கும் மலர். நீர்நாய் ஒன்று நீரில் குரலி பூத்திருந்த குளத்தைக் கலக்கி வாளைமீனை இரையாகப் பெறுமாம்.[1]
குருந்த மரத்தில் படர்ந்த குரலி
குரல் என்பது ஒரு கொடி. அது குருந்த மரத்தில் படர்ந்திருந்த செய்தி பழம்பாடலில் உள்ளது.[2]
செந்நிறச் சிறுமலர் நீள்கொத்து
குரலி மலரைக் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் 'சிறுசெங் குரலி' எனக் குறிப்பிடுகிறது.[3] இதனால் இந்தப் பூ சிறிதாகச் சிவப்பு நிறத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் இதுவும் ஒன்று.
குரல்
குரல் என்னும் சொல் நாவொலியில் வரும் குரலொலியைக் குறிக்கும்.
குரல் என்னும் சொல் நீண்ட வரிசையில் பூத்திருக்கும் பூக்கொத்தைக் குறிக்கும்.
ஒப்புநோக்குக
குரவம்

அடிக்குறிப்பு

  1. ஒண்செங் குரலித் தண்கயம் கலக்கி
    வாளை நீர்நாய் நாளிரை பெறூஉம் - புறநானூறு 283

  2. குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்பிற்ற
    கொல்லைப்புரத்துக் குருந்து ஒசித்தான் - சிலப்பதிகாலம் - ஆய்ச்சியர் குரவை பாடல் 17

  3. குறிஞ்சிப்பாட்டு அடி 82
"https://tamilar.wiki/index.php?title=குரலி&oldid=11205" இருந்து மீள்விக்கப்பட்டது