மணிச்சிகை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குன்றிமணிச் செடி

மணிச்சிகை என்பது குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகத் தொகுத்துக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. [1]

இந்த மலர் பற்றிய செய்தி வேறு சங்கப்பாடல்களில் இல்லை. என்றாலும் இந்த மலரின் பெயரைக்கொண்டு இந்த மலர் இன்னதென உணரமுடிகிறது.

மணி என்னும் முன்னொட்டு மணியாங்கல் என்னும்போது சிறிய கல்லை உணர்த்தும். மண் < மணல் என்பனவும் இச்சொல்லின் வேரிலிருந்து தோன்றியவை.

மணி அன்ன நீர் புறநானூறு 137-11
மணி அன்ன மாமை கலித்தொகை 48-17
மணியாரம் (மாணிக்க மணி ஆரம்) புறநானூறு 365-4
மணியிருங்கதுப்பு (கருநிற முடி) நற்றிணை 214-5
மணி இழந்த நாகம் (நீலநிற நஞ்சு இழந்த நாகம்) சிலப்பதிகாரம் 13-58
மணி இழந்த பாம்பு (நீலநிற நஞ்சு இழந்த பாம்பு) அகநானூறு 392-13
மணி ஏர் ஐம்பால் (நீல நிற ஐம்பால் கூந்தலை) நற்றிணை 133
மணியேர் நெய்தல் (நீல நிற அழகிய தெய்தல்) நற்றிணை 78
மணிகடல் (நீலநிறக் கடல்) சிலப்பதிகாரம் 30-30

முதலான சொற்களில் மணி என்பது கருநீல நிறத்தையும், கருநிறத்தையும் உணர்த்துதலைக் காணலாம்.

இதனை மனத்திற்கொண்டு நீல(கரு)நிறத்தை உச்சியில் கொண்ட குன்றிமணியைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றர். ஆயின் இது குன்றிமணியைக் குறிக்கும்.

படங்கள்

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

  1. குறிஞ்சிப்பாட்டு 64
"https://tamilar.wiki/index.php?title=மணிச்சிகை&oldid=11423" இருந்து மீள்விக்கப்பட்டது