செருந்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செருந்தி
Ochna squarrosa De Candolle 1811 t1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malpighiales
குடும்பம்: Ochnaceae
பேரினம்: Ochna
இனம்: O. squarrosa
இருசொற் பெயரீடு
Ochna squarrosa
(Hochst.) Walp.
வேறு பெயர்கள்

Ochna atropurpurea
Ochna multiflora

சங்கப்பாடல்களில் செருந்தி (Ochna squarrosa, Golden champak) எனக்குறிப்பிடப்படும் புல்லை நெட்டுக்கோரை என்றும் வாட்கோரை என்றும் இக்காலத்தில் கூறுகின்றனர்.[1](நீளமாக வளர்வதால் நெட்டுக்கோரை. வாள் போல் பூ பூப்பதால் வாட்கோரை.)

சங்கப்பாடல்கள் காட்டும் செருந்தி

பூக்குமிடமும் தோற்றமும்

செருந்தி பொய்கையில் பூக்கும். இதற்குக் கண்பு என்னும் கணுக்கள் உண்டு. களிறுகள் இதனை உண்டும் உழக்கியும் மாய்க்கும் [2]
செருந்தி நெய்தல் நிலத்தில் பொன் நிறத்தில் பூக்கும்.[3]
பொய்கையில் புதர்புதராக வளரும்.[4]
வயலில் கோரைப்புல் போல வளரும்.[5]
உப்பங்கழிகளில் வளரும் இது பசுமையான தோகைகளைக் கொண்டது.[6]
கடற்கரை மணல்மேடுகளில் ஞாழல் பூவும் செருந்திப் பூவும் மணம் கமழும்.[7]
செருந்தி சூரியக் கதிர் போல் அரும்பிப் பூக்கும்.[8]
செருந்தி நெருக்கமான மொட்டுகளைக் கொண்டது.[9]
செருந்தி வண்டு அருந்தும் தேன் உள்ள மலர்.[10]

சூடும் பூ

பொன் போல் கொத்தாகப் பூக்கும் இதனை மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.[11]
செருந்தியையும் நெய்தலையும் சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர்.[12]
செருந்திப் பூவின் கால் செந்நிறம் கொண்டது.[13]

விளையாடும் பூ

மகளிர் குவித்து விளையாடும் மலர்களில் ஒன்று [14]

அடிக்குறிப்பு

  1. பாட்டும் தொகையும், ஆசிரியர் குழு தொகுத்தது, எஸ். ராஜம் வெளியீடு, 1958
  2. பொய்கை களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர - மதுரைக்காஞ்சி 172
  3. தலைநாள் செருந்தி தமனியம் பூப்பவும் – சிறுபாணாற்றுப்படை 147
  4. பொய்கை கொழுங்கால் புதவமோடு செருந்தி நீடி - பட்டினப்பாலை 243
  5. வயலிலும் வளர்ந்தது. இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலமரும் கழனி - ஐங்குறுநூறு 18
  6. பாசிழைச் செருந்தி தாய இருங்கழி - ஐங்குறுநூறு 112
  7. எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ - ஐங்குறுநூறு 141
  8. பருதியஞ் செல்வன் போல் நனை ஊழ்த்த சொருந்தியும் - கலித்தொகை 26
  9. நனைத்த செருந்தி - அகம் 150
  10. வண்டு பட விரிந்த செருந்தி - அகம் 240
  11. பொன் அடர்ந்து அன்ன ஒள்ளிணர்ச் செருந்திப் பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள் - அகம் 280
  12. நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக் கைபுனை நறுந்தார் கமழும் மார்பன் - ஐங்குறுநூறு 182
  13. அரும்பு அலர் செருந்தி செங்கால் மலர் - புறம் 390
  14. குறிஞ்சிப்பாட்டு 75
"https://tamilar.wiki/index.php?title=செருந்தி&oldid=11286" இருந்து மீள்விக்கப்பட்டது