செங்கொடுவேரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செங்கொடுவேரி
Plumbago rosea01.jpg
Plumbago indica
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Plumbaginaceae
பேரினம்: Plumbago
இனம்: P. indica
இருசொற் பெயரீடு
Plumbago indica
L.

செங்கொடுவேரி (Plumbago indica) என்னும் சொல் செந்நிறக் கிளைகளையும், செங்குத்துக் கிளைகளையும் குறிக்கும்.

சங்ககால விளையாட்டு
சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்படும் 99 மலர்களில் செங்கோடு என்பதும் ஒன்று. [1]
செங்கோட்டு மலரின் பயன்பாடு
யாழைச் சித்திர வேலைப்பாடு அமைந்த துணிப்பையில் வைத்திருந்தனர். அத்துடன் அதற்குச் செங்கோடு என்னும் மலரையும் சாத்தியிருந்தனர்.[2]
செங்கோட்டு மலர்
நொச்சி செங்குத்து வலார்களைக் கொண்டு செங்கோடாக வளரும். இதன் பூவே செங்கோட்டு மலர். இக்காலத்தில் கொசுக்கள் அண்டாமல் இருக்க நொச்சி இலைகளை அருகில் போட்டுக்கொண்டு உறங்குவர். அக்காலத்தில் யாழ்ப்பையை அந்துப் பூச்சிகள் அண்டாமல் இருக்க இந்தச் செங்கோட்டு மலர்கள் சிலவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
குறிப்பு
செங்கோடு வேரி
இந்த இரண்டு மலர்களைச் 'செங்கோடுவேரி' என ஒரே மலராக எடுத்துக்கொள்கின்றனர். அவை ஒருசொல்லாக வரின் 'செங்கோட்டுவேரி' என வருவது தமிழ்நெறி என்பதைச் சான்று காட்டப்பட்டுள்ள சிலப்பதிகார மேற்கோளால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மேலும் பார்க்க

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

  1. குறிஞ்சிப்பாட்டு - பாடலடி 64
  2. சித்திரப் படத்துள் புக்கு, செழுங் கோட்டின் மலர் புனைந்து,
    மைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி, (யாழ் இருந்தது - சிலப்பதிகாரம் 7 கானல்வரி 1மு)

"https://tamilar.wiki/index.php?title=செங்கொடுவேரி&oldid=11279" இருந்து மீள்விக்கப்பட்டது