கோங்கம்
Jump to navigation
Jump to search
கோங்கம் | |
---|---|
Cochlospermum religiosum blossoms | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Malvales |
குடும்பம்: | Bixaceae |
பேரினம்: | Cochlospermum |
இனம்: | C. religiosum |
இருசொற் பெயரீடு | |
Cochlospermum religiosum (L.) Alston |
கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில் கோங்கு (Cochlospermum religiosum) எனக் கூறுகின்றனர்.
கோங்கமரம் இக்காலத்தில் வீட்டுப்பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. இதனால் செய்யப்பட்ட பொருள்கள் இலேசாகவும், மழமழப்பாகவும், மஞ்சள்-நிறதிலும் இருக்கும்.
சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் கோங்கம் பூவும் ஒன்று.[1]
கோங்கமரம், பூ, தாது பற்றிய சங்கநூல் செய்திகள்
- எலியின் காது கோங்கம் பூவின் மையப் பகுதி போல இருக்கும் [2]
- கோங்க மலரைப் பதத்தோடு பறித்தெடுப்பர் [3]
- கோங்கின் மகரந்தப் பொடிகளை மகளிர் மேனியில் பூசிக்கொள்வர். அதற்காக அவற்றைச் செம்பாலான செப்புகளில் சங்ககாலத்தில் விற்பனை செய்வர். செல்வர் அவற்றை சம அளவு பொன் கொடுத்து வாங்குவர்.[4]
- கோங்க-மலரின் முகை மகளிர் முலைபோல் இருக்கும்.[5][6][7][8][9]
- மதுரையை அடுத்த வையை ஆற்றுப் படுகையில் பாணர் முற்றத்தில் கோங்க மலர்கள் கொட்டிக்கிடக்கும்.[10]
- கோங்கம்பூ குடை போலவும், மீன் போலவும் இருக்கும்.[11]
- கோங்கின் அடிமரத்தில் செதில்கள் பொரிந்திருக்கும். பூ பொன்னிறத்தில் இருக்கும்.[12]
- மரத்திலிருந்து கோங்கமலர் காம்பறுந்து விழுவது யானை ஓட்டுநர் வீசும் தீப்பந்தம் போல விழும்.[13]
- கோங்கமரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்.[14]
இவற்றையும் பார்க்க
அடிக்குறிப்பு
- ↑ குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 73)
- ↑ வேனில் கோங்கின் பூம்பொகுட்டு அன்ன குடந்தையம் செவிய கோட்டு எலி - புறம் 321
- ↑ கோங்கும் கொய்குறை உற்றன - அகநானூறு 341
- ↑ சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்து ஆங்கு - அகநானூறு 25-10
- ↑ கோங்கு முகைந்நு அன்ன குவிமுலை - அகம் 240-11
- ↑ கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலை - புறம் 336
- ↑ சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து யாணர்க் கோங்கின் அவிர்முலை எள்ளி – சிறுபாணாற்றுப்படை 24
- ↑ கோங்கின் இளமுலை – திருமுருகாற்றுப்படை -34
- ↑ முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர்வந்தன - குறுந்தொகை 254
- ↑ மதுரைக்காஞ்சி 338
- ↑ புல் இதழ் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ வைகுறு மீனின் நினையத் தோன்றி - நற்றிணை 48
- ↑ பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசு வீ - ஐங்குறுநூறு 367
- ↑ தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரியிணர்க் கோங்கின் கால்உறக் கழன்ற கட்கமழ் புதுமலர் கைவிடு சுடரின் தோன்றும் - அகம் 153-16
- ↑ அகம் 157