ஆள்கூறுகள்: 10°00′32″N 77°28′12″E / 10.009°N 77.47°E / 10.009; 77.47

தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Theni.M.Subramani
சிNo edit summary
imported>Theni.M.Subramani
சிNo edit summary
வரிசை 31: வரிசை 31:
}}
}}


[[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தின்]] தலைநகராக '''தேனி''' இருக்கிறது. இது உள்ளாட்சி அமைப்பில் ''தேனி-அல்லிநகரம்''' ([[ஆங்கிலம்]]:Theni Allinagaram) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
[[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தின்]] தலைநகராக '''தேனி''' இருக்கிறது. இது உள்ளாட்சி அமைப்பில் '''தேனி-அல்லிநகரம்''' ([[ஆங்கிலம்]]:Theni-Allinagaram) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.


==தேனி- அல்லிநகரம் நகராட்சி==
==தேனி- அல்லிநகரம் நகராட்சி==
வரிசை 43: வரிசை 43:


தேனி- அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நகராட்சியின் தலைவராக எஸ்.பழனிச்சாமி என்பவரும், துணைத் தலைவராக ஏ.எம்.இலங்கேஸ்வரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
தேனி- அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நகராட்சியின் தலைவராக எஸ்.பழனிச்சாமி என்பவரும், துணைத் தலைவராக ஏ.எம்.இலங்கேஸ்வரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.

==பேருந்து நிலையம்==

தேனியின் மையப்பகுதியில் தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குச் சொந்தமான [[காமராசர்]] [[பேருந்து நிலையம்]] அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களிலும், [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[கம்பம்]], [[போடிநாயக்கனூர்]] ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

==தொடர்வண்டி நிலையம்==

[[மதுரை]]யிலிருந்து [[போடிநாயக்கனூர்]] செல்லும் தொடர்வண்டிப் பாதையில் தேனி தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தொடர் வண்டி நிலையத்திற்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் தொடர்வண்டி காலையிலும், இந்தப் பயணிகள் தொடர்வண்டி மாலையில் போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் போதும் நின்று செல்கிறது. இந்தத் தொடர்வண்டி நிலையம் தவிர தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தப் பகுதியிலும் இந்தத் தொடர்வண்டி நிறுத்தப்படுகிறது. இந்தத் தொடர்வண்டி வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை.


==மேல்நிலைப் பள்ளிகள்==
==மேல்நிலைப் பள்ளிகள்==

01:54, 5 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

தேனி
—  hq  —
தேனி
இருப்பிடம்: தேனி

, Tamil Nadu

அமைவிடம் 10°00′32″N 77°28′12″E / 10.009°N 77.47°E / 10.009; 77.47
நாடு  இந்தியா
மாநிலம் Tamil Nadu
மாவட்டம் தேனிTheni
ஆளுநர்
முதலமைச்சர்
நகர்மன்றத் தலைவர் எஸ்.பழனிச்சாமி
மக்களவைத் தொகுதி தேனி
மக்களவை உறுப்பினர்

தங்க தமிழ்ச்செல்வன்

மக்கள் தொகை

அடர்த்தி

10,34,724 (2001)

358/km2 (927/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2,889 சதுர கிலோமீட்டர்கள் (1,115 sq mi)

100 மீட்டர்கள் (330 அடி)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்

Aw (Köppen)

     658 mm (25.9 அங்)

     39.5 °C (103.1 °F)
     25.8 °C (78.4 °F)

தொலைவு(கள்)
  • • From Chennai • 498 கிலோமீட்டர்கள் (309 mi) southwest
    • From Madurai • 76 கிலோமீட்டர்கள் (47 mi) west (highway)
குறியீடுகள்
இணையதளம் http://municipality.tn.gov.in/theni/


தேனி மாவட்டத்தின் தலைநகராக தேனி இருக்கிறது. இது உள்ளாட்சி அமைப்பில் தேனி-அல்லிநகரம் (ஆங்கிலம்:Theni-Allinagaram) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

தேனி- அல்லிநகரம் நகராட்சி

மதுரையிலிருந்து 76 கிமீ தொலைவில் உள்ளது தேனி. இந்நகரம் இந்த ஊர் தேனி, அல்லிநகரம், பொம்மைய கவுண்டன் பட்டி, கருவேல் நாயக்கன்பட்டி எனும் ஊர்களை உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் இந்த ஊர்களின் வருவாய் கிராமம் அல்லிநகரம் எனும் பெயரில் இருந்ததால் இந்நகர் உள்ளாட்சி அமைப்பில் தேனி-அல்லிநகரம் நகராட்சி என்கிற பெயரில் 1964 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்நகராட்சி தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 194, date: 10.02.1972)மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 851, date: 09.05.1983) மூலம் முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக முன்னேற்றமடைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 85,424 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தேனி அல்லிநகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேனி அல்லிநகரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள்

தேனி- அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நகராட்சியின் தலைவராக எஸ்.பழனிச்சாமி என்பவரும், துணைத் தலைவராக ஏ.எம்.இலங்கேஸ்வரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.

பேருந்து நிலையம்

தேனியின் மையப்பகுதியில் தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குச் சொந்தமான காமராசர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களிலும், மதுரை, திண்டுக்கல், கம்பம், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

தொடர்வண்டி நிலையம்

மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் தேனி தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தொடர் வண்டி நிலையத்திற்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் தொடர்வண்டி காலையிலும், இந்தப் பயணிகள் தொடர்வண்டி மாலையில் போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் போதும் நின்று செல்கிறது. இந்தத் தொடர்வண்டி நிலையம் தவிர தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தப் பகுதியிலும் இந்தத் தொடர்வண்டி நிறுத்தப்படுகிறது. இந்தத் தொடர்வண்டி வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை.

மேல்நிலைப் பள்ளிகள்

தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.

  1. அரசு மேல்நிலைப் பள்ளி, அல்லிநகரம்.
  2. நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
  3. நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
  4. மேரி மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.

உயர்நிலைப் பள்ளிகள்

தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.

  1. என்.ஏ.கொண்டுராசா நினைவு உயர்நிலைப் பள்ளி, தேனி.
  2. ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, தேனி.
  3. பத்மநாபா உயர்நிலைப் பள்ளி, தேனி.

தொழிற்பயிற்சி நிலையம்

  1. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்

கோயில்கள்

இங்கு இந்து சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காகப் பல கோயில்கள் இருப்பினும் கீழ்காணும் கோயில்கள் சிறப்புடன் விளங்குகின்றன.

  • வீரப்ப அய்யனார் கோயில்
  • பெத்தாட்சி விநாயகர் கோயில்
  • கணேச கந்த பெருமாள் கோயில்
  • பத்திரகாளியம்மன் கோயில்
  • வரசித்தி விநாயகர் கோயில்
  • இரட்டை விநாயகர் கோயில்
  • மாரியம்மன் கோயில்

தேவாலயங்கள்

இங்கு கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காக சில தேவாலயங்கள் உள்ளன. அவை:

பள்ளிவாசல்கள்

இங்கு இசுலாமிய சமயம் சார்ந்தவர்கள் தொழுகை நடத்துவதற்காக சில பள்ளிவாசல்கள் உள்ளன. அவை:

சிறப்புக்கள்

  • தேனி-அல்லிநகரம் வாரச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது வாரச்சந்தையாகும். இந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.
  • தேனி- அல்லிநகரம் நகரில் சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவதால், இங்குள்ள வணிக நிறுவனங்கள் புதன்கிழமையையே வார விடுமுறையாகக் கொண்டுள்ளன.
  • திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இந்த ஊரைச் சேர்ந்தவர்.
  • திரைப்பட நடிகர் வையாபுரி, செவ்வாழை ராசு ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.

இலக்கிய நகரம்

தேனி நகரை எழுத்தாளர்கள் அதிகமுடைய நகரம் என்று சொல்லலாம். கவிஞர் ஜெயபாஸ்கரன் ஒரு பேட்டியில் "எல்லா ஊரும் என் தமிழின் ஊர்களே. எனினும் தேனி எனக்கு மிகவும் பிடித்த ஊராகும். அதன் வளமான இயற்கையழகு மட்டுமல்ல; திரும்பிய பக்க மெல்லாம் தென்பட்டு இலக்கி யம் பேசுவோர் அங்கு அதிகம். கவிஞர் முகமது சபி போன்றவர்கள் அங்கு இலக்கிய ஆர்வம் தழைத்து வளரப் பெருங்காரண மாக இருக்கிறார்கள். அதே போல கலைஞர்களையும் இலக் கியவாதிகளையும் தமிழுலகிற்கு அதிக அளவில் வழங்கிய மண் தேனி மண்தான். மிதிவண்டியில் கிராமம் தோறும் சென்று மிளகாய் வத்தல், மசாலாப் பொடி விற்கும் எழுத்தாளர் அல்லி உதயன் தமிழ் இலக்கிய இதழ் களையும் மசாலாப் பொடி களுடன் சேர்த்து கிராம மக்களுக்குக் கொடுத்துவிட்டு வருகிறார். அவரைப் பற்றி ஒரு அரைமணி நேரக் குறும்படம் ஒன்று எடுத்தால் அது இலக் கியத்திற்குச் செய்யக்கூடிய மாபெரும் சேவையாக இருக்கும் என்று குறும்பட இயக்குனர் களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த ஊரில் ஒரு மளிகைக்கடையில் நின்று கொண்டு தொலைபேசி யில் யாருடனோ நீங்கள் தி. ஜானகிராமனைப் பற்றி மாற்றுக் கருத்துச் சொல்வதாக வைத்துக் கொண்டால், அந்தக் கடைச் சிப்பந்தி, "அது எப்படி அப்படி யொரு கருத்தை நீங்கள் முன் வைக்கலாம்?' என்று தொடங்கி, தன் முதலாளியின் முன்பாகவே ஒரு மாபெரும் உரை நிகழ்த்தக் கூடும். எழுத்தாளர்கள், கவிஞர் கள், விமர்சகர்கள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் தேனி மண் இலக்கியத்தால் மணக்கும். தேனியை தமிழ் நாட்டின் "இலக் கியத் தலைநகரம்' என்றுகூட அறிவிக்கலாம். கவிஞர் மு. முகமதுசபி, தேனி சீருடையான், அல்லி உதயன், கே.எஸ்.கே., நடேசன், பொன்முடி, கலை இலக்கியா, மணிபாரதி, பொன் கணேஷ், ஈஸ்வர வடிவு லிங்கா லிங்கம், கலைதாசன், உமா மகேஸ்வரி (ரெட்டியபட்டி), திருநாவுக்கரசு, தொழிலதிபர் மோகன், தனபாண்டி என்று நூற்றுக்கணக்கான இலக்கிய அன்பர்கள் தேனியில் மட்டுமே உண்டு. அதன் சுற்றுவட்டார ஊர்களில் இருப்பவர்களைத் தனிக்கணக்கு எடுக்க வேண்டும்.[2] என்று கூறியிருப்பது இங்கே கவனிக்கத் தக்கது.

மேற்கோள்கள்

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. இனிய உதயம் இணைய இதழில் வெளியான கவிஞர் ஜெயபாஸ்கரன் நேர்காணல்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தேனி&oldid=157825" இலிருந்து மீள்விக்கப்பட்டது