ஜூடோ. கே. கே. இரத்தினம்
ஜூடோ. கே. கே. இரத்தினம் Judo. K. K. Rathnam | |
---|---|
பிறப்பு | கே. கே. இரத்தினம் 8 ஆகத்து 1930 குடியாத்தம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 26 சனவரி 2023 குடியாத்தம், தமிழ்நாடு, இந்தியா | (அகவை 92)
மற்ற பெயர்கள் | கலைச்செல்வம், ருத்ரநாகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1959–2023 |
ஜூடோ. கே. கே. இரத்தினம் (பிறப்பு கே. கே. இரத்தினம் ; 8 ஆகத்து 1930 - 26 சனவரி 2023) என்பவர் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றிய ஓர் இந்திய சண்டை பயிற்சியாளர் மற்றும் சண்டைக் காட்சி அமைப்பாளர் ஆவார். இவர் 1959 ஆம் ஆண்டு தாமரைக்குளம் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் 1966 ஆம் ஆண்டு வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் சண்டைப் பயிற்சியாளராக அறிமுகமானார். திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு நடிகராக 2006 இல் தலைநகரம் படத்தில் கடைசியாக தோன்றினார். விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், தளபதி தினேஷ், ஜாகுவார் தங்கம், ராம்போ ராஜ்குமார், பெப்சி விஜயன், பொன்னம்பலம், ஜூடோ கே. கே. இராமு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், ஆம்பூர். ஆர். எஸ். பாபு, எம். சாகுல் அமீது ஆகிய திரைப்பட சண்டை பயிற்சியாளர்கள், நடிகர்கள் இவரிடம் சண்டைக் காட்சிக் கலைஞர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றியவர்களாவர். இவரது மகன் ஜூடோ. கே. கே. இராமு ஒரு சண்டைப் பயிற்சியாளராகவும், இவருடைய பேரன்கள் ஜூடோ லெனின் மற்றும் ஜான் பிரின்ஸ் சண்டைக் காட்சி கலைஞர்களாகவும் உள்ளனர்.[1]
இரத்தினம் 2023 சனவரி 26 அன்று 92 தன் வயதில் குடியாத்தத்தில் இறந்தார்.[2][3]
திரைப்படவியல்
- 1966 வல்லவன் ஒருவன்
- 1966 இரு வல்லவர்கள்
- 1967 மாடிவீட்டு மாப்பிள்ளை
- 1967 எதிரிகள் ஜாக்கிரதை
- 1967 காதலித்தால் போதுமா
- 1968 தங்க வளையல்
- 1968 முத்துச் சிப்பி
- 1968 தெய்வீக உறவு
- 1969 துலாபாரம்
- 1970 தரிசனம்
- 1971 தங்க கோபுரம்
- 1972 பதிலுக்கு பதில்
- 1972 காசேதான் கடவுளடா
- 1975 ஓட்டல் சொர்கம்
- 1977 காயத்ரி
- 1977 நல்லதுக்கு காலமில்லை
- 1978 மேளதாளங்கள்
- 1979 பஞ்ச கல்யாணி
- 1980 முரட்டுக்காளை
- 1980 ஒத்தையடி பாதையிலே
- 1981 நெற்றிக்கண்
- 1981 நெஞ்சில் ஒரு முள்
- 1981 சிவப்பு மல்லி
- 1982 போக்கிரி ராஜா
- 1982 சகலகலா வல்லவன்
- 1982 சின்னஞ்சிறுசுகள்
- 1982 தீராத விளையாட்டுப் பிள்ளை
- 1982 கண்ணே ராதா
- 1982 புதுக்கவிதை
- 1982 பக்கத்து வீட்டு ரோஜா
- 1982 எங்கேயோ கேட்ட குரல்
- 1982 தீர்ப்புகள் திருத்தப்படலாம்
- 1982 ஆனந்த ராகம்
- 1983 உருவங்கள் மாறலாம்
- 1983 மலையூர் மம்பட்டியான்
- 1983 ஒரு கை பார்போம்
- 1983 பாயும் புலி
- 1983 தங்கைக்கோர் கீதம்
- 1983 உயிருள்ளவரை உஷா
- 1983 துடிக்கும் கரங்கள்
- 1983 புத்திசாலி பைத்தியங்கள்
- 1983 நான் சூட்டிய மலர்
- 1983 சிவப்பு சூரியன்
- 1983 முந்தானை முடிச்சு
- 1983 வளர்த்த கடா
- 1983 தூங்காதே தம்பி தூங்காதே
- 1983 கைராசிக்காரன்
- 1983 சூரக்கோட்டை சிங்கக்குட்டி
- 1983 அடுத்த வாரிசு
- 1984 மதுரை சூரன்
- 1984 நான் மகான் அல்ல
- 1984 தம்பிக்கு எந்த ஊரு
- 1984 சபாஷ்
- 1984 மகுடி
- 1984 திருப்பம்
- 1984 நெருப்புக்குள் ஈரம்
- 1984 நீங்கள் கேட்டவை
- 1984 நியாயம்
- 1984 நேரம் நல்ல நேரம்
- 1984 கை கொடுக்கும் கை
- 1984 இருமேதைகள்
- 1984 முடிவல்ல ஆரம்பம்
- 1984 நல்லவனுக்கு நல்லவன்
- 1984 இராஜதந்திரம்
- 1984 நாணயமில்லாத நாணயம்
- 1985 படிக்காதவன்
- 1985 ஒரு கைதியின் டைரி
- 1985 அவன்
- 1985 வீட்டுக்காரி
- 1985 கெட்டிமேளம்
- 1985 மாப்பிள்ளை சிங்கம்
- 1985 இரகசியம்
- 1985 நேர்மை
- 1985 பார்த்த ஞாபகம் இல்லையோ
- 1985 யார்?
- 1985 ஒரு மலரின் பயணம்
- 1985 புதிய சகாப்தம்
- 1985 ஈட்டி
- 1985 தெய்வப்பிறவி
- 1985 ராஜா யுவராஜா
- 1985 பாடும் வானம்பாடி
- 1985 உரிமை
- 1985 வெற்றிக்கனி
- 1985 இளமை
- 1985 சிகப்புக்கிளி
- 1985 தலைமகன்
- 1985 உயர்ந்த உள்ளம்
- 1985 மங்கம்மா சபதம்
- 1985 நல்ல தம்பி
- 1985 மூக்கணாங்கயிறு
- 1985 உன்னைத் தேடி வருவேன்
- 1985 கெட்டிமேளம்
- 1985 அர்த்தமுள்ள ஆசைகள்
- 1985 சின்ன வீடு
- 1986 எங்கள் தாய்க்குலமே வருக
- 1986 தர்ம தேவதை
- 1986 மிஸ்டர் பாரத்
- 1986 குளிர்கால மேகங்கள்
- 1986 காலமெல்லாம் உன் மடியில்
- 1986 முரட்டு கரங்கள்
- 1986 மௌனம் கலைகிறது
- 1986 கடைக்கண் பார்வை
- 1986 நானும் ஒரு தொழிலாளி
- 1986 ஜீவநதி
- 1986 விடுதலை
- 1987 மனிதன்
- 1987 கூலிக்காரன்
- 1987 சங்கர் குரு
- 1987 அஞ்சாத சிங்கம்
- 1987 எங்க சின்ன ராசா
- 1987 பேர் சொல்லும் பிள்ளை
- 1988 குரு சிஷ்யன்
- 1988 பாட்டி சொல்லைத் தட்டாதே
- 1988 இது நம்ம ஆளு
- 1988 செந்தூரப்பூவே
- 1988 வசந்தி
- 1988 தர்மத்தின் தலைவன்
- 1988 இரண்டில் ஒன்று
- 1988 மணமகளே வா
- 1988 கழுகுமலைக் கள்ளன்
- 1989 மீனாட்சி திருவிளையாடல்
- 1989 திராவிடன்
- 1989 ராஜா சின்ன ரோஜா
- 1989 சொந்தக்காரன்
- 1989 டெல்லி பாபு
- 1989 தர்மதேவன்
- 1989 வாய்க் கொழுப்பு
- 1989 ௭ன் ரத்தத்தின் ரத்தமே
- 1990 உலகம் பிறந்தது எனக்காக
- 1990 அம்மா பிள்ளை
- 1990 அதிசயப் பிறவி
- 1990 பெண்கள் வீட்டின் கண்கள்
- 1990 புது வாரிசு
- 1990 எங்கிட்ட மோதாதே
- 1990 என் காதல் கண்மணி
- 1990 புதுப்புது ராகங்கள்
- 1990 ஆத்தா நான் பாசாயிட்டேன்
- 1991 நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
- 1992 சகலகலா வாண்டுகள்
- 1992 காவல் கீதம்
- 1992 தெற்கு தெரு மச்சான்
- 1992 முதல் குரல்
- 1992 பாண்டியன்
நடிகராக
- 1959 தாமரைக்குளம்
- 1963 கொஞ்சும் குமரி
- 1977 காயத்திரி
- 1982 போக்கிரி ராஜா
- 1984 நாணயமில்லாத நாணயம்
- 1992 பொன்னுக்கேத்த புருஷன்
- 2006 தலைநகரம்
தயாரிப்பாளராக
- 1980 ஒத்தையடி பாதையிலே
விருதுகளும் கௌரவங்களும்
- 2013 கின்னஸ் சாதனை புத்தகம் - 1200 க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி கின்னஸ் உலக சாதனைகள் .[4]
- 2016 சங்கரதாஸ் சுவாமிகள் விருது .[5]
- தமிழ்நாடு அரசின் 2019 கலைமாமணி விருது.[6]
குறிப்புகள்
- ↑ "Judo. K. K. Rathnam Antru Kanda Mugam". Wordpress.com. 15 May 2015. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.
- ↑ "Legendary stunt choreographer Judo Rathnam passes away at 92". Cinema Express. 26 January 2023. https://www.cinemaexpress.com/tamil/news/2023/jan/26/legendary-stunt-choreographer-judo-rathnam-passes-away-at-92-39286.html.
- ↑ "பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் காலமானார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
- ↑ "Judo. K. K. Rathnam takes place in the Guinness Books of Records". Thina Boomi. 1 June 2013. பார்க்கப்பட்ட நாள் 3 March 2020.
- ↑ "Appreciation Ceremony conducted for Judo. K. K. Rathnam who had won Sankaradas Swamigal Award". Dina Mani. 19 December 2016. பார்க்கப்பட்ட நாள் 3 March 2020.
- ↑ "Kalaimamani awards after 8 years: 201 artistes get awards". Deccan Chronicle. 1 March 2019. பார்க்கப்பட்ட நாள் 3 March 2020.