முடிவல்ல ஆரம்பம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முடிவல்ல ஆரம்பம்
இயக்கம்என். மொகைதீன்
தயாரிப்புஎன். மொகைதீன்
என். எம். பிக்சர்ஸ்
கதைசரண்தாஸ் ஷோக்
இசைஇளையராஜா
நடிப்புராஜேஷ்
ஜோதி
வெளியீடுமார்ச்சு 30, 1984
நீளம்3403 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முடிவல்ல ஆரம்பம் (Mudivalla Arambam) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். மொகைதீன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமாகும்.[1] இதில் ராஜேஷ், ஜோதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கதைச் சுருக்கம்

ஒரு மலையோரக் கிராமத்தில் சாலையோரம் தேனீர்கடை நடத்தும் பெண்ணின் மகள் ராதா, பத்தாவதுவரை படித்தவள். கிட்டத்தட்ட பதினாறு வயதினிலே மயிலு போன்றவள். கண்ணையா, என்னும் சரக்குந்து ஓட்டுநர். செல்லும் வழியில் அடிக்கடி தேனீர்கடைக்கு வந்து செல்கிறவன். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். திருமணத்திற்கு முன்னரே இருவரும் உடலால் ஒன்று சேர்ந்துவிடுகின்றனர். இதனால் ராதா கர்ப்பமாகிவிடுகிறாள். திருமண நாள் தேதி குறித்துவிடுகிறார்கள். அதற்கு முன் தினம் இரவு தொழில் நிமித்தமாகச் சென்ற கண்ணையா திரும்பிவரவில்லை.

திருமணம் ஆகாமலேயே ராதா, குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். குழந்தையை கருணை இல்லம் ஒன்றின் வாசலில், யாருமறியாத வகையில் விட்டுவிடுகிறாள், பின் தன் பெயரை சீதா எனச் சொல்லி அதே கருணை இல்லத்தில் வேலைக்கும் சேர்ந்துவிடுகிறாள். அவளது குழந்தை ஜான் என்னும் பெயரிலேயே இங்கே வளர்கிறது. ராம் என்னும் மருத்துவருக்கு சீதா மீது காதல் அரும்புகிறது. ஒரு கட்டத்தில் சீதாவும் ஜானும் தாயும் மகனும் என்பது அனைவருக்கும் தெரியவந்து விடுகிறது. அதன் பின்னர், ராமுக்கும் சீதாவுக்கும் திருமணம் என்னும் சூழலில் ஒரு விபத்தில் கண் பார்வை பறிபோன நிலையில் கண்ணையா அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்ணையாவின் கண் பார்வையை மீட்பதற்கான அறுவை சிகிச்சையை ராம் மேற்கொள்கிறார். கண்ணையாவின் பார்வை திரும்பியதா, சீதா கண்ணையாவுடன் சேர்ந்துவிட்டாளா இல்லை ராமுக்கும் அவளுக்கும் திருமணமா என்பதே இறுதிக் காட்சி.

நடிகர்கள்

திரை குழு

  • கதை சரண்தாஸ் ஷோக்
  • பாடல்கள் - வைரமுத்து கங்கை அமரன் ரவி
  • பாடியவர்கள் - பி சுசிலா சைலஜா ஜெயச்சந்திரன் மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் ரமேஷ் தீபன் சக்கரவர்த்தி கிருஷ்ண சந்தர் சாய்பாபா,சசிரேகா
  • கலை பி சாய் குமார்
  • நடனம் பாபு
  • படத்தொகுப்பு வி ராஜகோபால்
  • ஒளிப்பதிவு -ஆர். எம். ரமேஷ்

பாடல்கள்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்களுக்கான பாடல் வரிகள் வைரமுத்து, கங்கை அமரன் மற்றும் ரவி ஆகியோரும் எழுதியுள்ளனர்.

வ. எண் பாடல் பாடகர்கள் வரிகள்
1. "பாடி வா தென்றலே" பி. ஜெயச்சந்திரன் வைரமுத்து
2. "தென்னங்கீத்தும் தென்றல் காற்றும்" பி. சுசீலா, மலேசியா வாசுதேவன்
3. "தேன் எடுக்க போனான்" மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா கங்கை அமரன்
4. "ஆசைன்னா ஆசை" கங்கை அமரன், இரமேஷ், சாய்பாபா, தீபன் சக்ரவர்த்தி & கிருஷ்ணசந்தர் இரவி

மேற்கோள்கள்

  1. "சினிமா ஸ்கோப் 31: இதயத்தைத் திருடாதே". கட்டுரை. தி இந்து. 21 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2017.
"https://tamilar.wiki/index.php?title=முடிவல்ல_ஆரம்பம்&oldid=36665" இருந்து மீள்விக்கப்பட்டது