இராயகோபுரம், மதுரை
இராயகோபுரம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சுவாமி சன்னதி எதிரில் அமைந்த புது மண்டபத்திற்கு கிழக்கில் எழுகடல் தெரு துவங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இராயகோபுர கட்டிடப் பணிகள் மன்னர் திருமலை நாயக்கரால்[1], அடிப்பகுதி வரை கட்டப்பட்ட இராயகோபுரம், திருமலை நாயக்கருக்கு பின் வந்த நாயக்க மன்னர்களால் முழுமையாக்கப்படவில்லை. இராய கோபுரம் முழுமைப் பெற்றிருந்தால் தென்னிந்தியாவில் மிகப் பெரிய கோபுரமாக விளங்கியிருக்கும்.[2]
கோபுர அமைப்பு
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கோபுரங்களின் அடிப்பகுதியை விட இராயகோபுரத்தின் அடிப்பகுதி மூன்று மடங்கு பெரிதானது. இராய கோபுரம், மதுரை திராவிடக் கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்டது. ராயகோபுரத்தின் அஸ்திவாரத் தூண்கள் ஒரே கல்லால் ஆனது. இதன் உயரம் ஐம்பது அடி கொண்டது. அழகிய சிற்பங்களுடன் கூடிய இத்தூண்களின் அடிப்பகுதி நிலத்தில் பத்து அடி ஆழத்தில் நிலை கொண்டுள்ளது.
தற்போதைய நிலை
முற்றுப் பெறாத இராயகோபுரத்தைச் சுற்றிய பகுதிகளில் முளைத்த நவீன கட்டிடங்களால் இராயகோபுரம் மிகவும் சேதமடைந்துள்ளது. மேலும் இராய கோபுரச் சுவர்களை ஒட்டிய பகுதிகளில் வணிகர்கள் துணிக்கடைகள் அமைத்துள்ளதால், இராயகோபுரம் மக்கள் பார்வையிலிருந்து மறைக்கும் வகையில் உள்ளது.