ஆள்கூறுகள்: 24°25′42.1″N 80°38′29.6″E / 24.428361°N 80.641556°E / 24.428361; 80.641556

பூமரா கோயில்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பூமரா கோயில்
பர்குலீஸ்வரர் கோயில்
கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் சிவனுக்குரிய கற்கோயில்
கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் சிவனுக்குரிய கற்கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பூம்ரா, நகோட்
புவியியல் ஆள்கூறுகள்24°25′42.1″N 80°38′29.6″E / 24.428361°N 80.641556°E / 24.428361; 80.641556
சமயம்இந்து சமயம்
மாநிலம்மத்தியபிரதேசம்
மாவட்டம்சத்னா[1]

பூமரா கோயில் அல்லது பர்குலீஸ்வரர் கோயில் (இக்கோயிலை பூமரா கோயில், பூப்பரா கோயில், பூம்ரா கோயில் என்றும் அழைப்பர்) (Bhumara Temple, sometimes called Bhumra or Bhubhara), இது கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் குப்தர்கள் காலத்து இந்து கற்கோயில் ஆகும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கபப்ட்ட இக்கோயில் மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சத்னா நகரத்திற்கு தென்மேற்கில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது.[2][3][4] சதுர வடிவில் அமைந்த இக்கோயில் ஒரு மண்டபத்துடன் கூடியது.[5] தற்போது இக்கோயிலின் பெரும்பகுதிகள் சிதிலமடைந்து உள்ளது. இக்கோயில் சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டது. இக்கோயிலின் கருவறையின் நுழைவாயிலில் கங்கை மற்றும் யமுனா தேவிகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது.[1][6] இக்கோயில் கருவறையின் ஒருமுக சிவலிங்கம் குப்தர்களின் கலைநயத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

இக்கோயிலில் மகிஷாசூரனை கொன்ற துர்கை மற்றும் விநாயகர், முருகன், விஷ்ணு, பிரம்மா, யமன், குபேரன், சூரியன், மன்மதன் போன்ற தேவர்களின் சிற்பங்கள் உள்ளது.[7][5][8]

சூரியச் சிற்பம், பூமரா கோயில்

காலம்

1920-இல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குப்தர் காலத்து இக்கோயிலின் காலம், கிபி 5-6-ஆம் நூற்றாண்டு காலத்தவை என தொல்லியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.[5][9][10][11]

பூமரா சிவன் கோயிலின் கருவறை, ஆண்டு 1919
பூமரா சிவன் கோயில் கருவறை ஜன்னலின் புகைப்படம், ஆண்டு, 1919

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Bhumra temple". Archaeological Survey of India, Bhopal Circle.
  2. George Michell 1988, ப. 39, 95.
  3. Heather Elgood (2000). Hinduism and the Religious Arts. Bloomsbury Publishing. p. 144. ISBN 978-0-8264-9865-6., Quote: "Other examples are the fifth-century Siva temple at Bhumara which has a fine ekamukha (single faced) linga, a sixth century Dasavatara temple at Deogarh (...)".
  4. Bhumra (Bhumara) Shiva temple, viewed from south, Gupta Dynasty, India, ca. 5th-6th century A.D. C. Krishna Gairola (1975), University of Washington
  5. 5.0 5.1 5.2 Ulrich Wiesner (1978). Nepalese Temple Architecture: Its Characteristics and Its Relations to Indian Development. BRILL Academic. pp. 46–48. ISBN 90-04-05666-1.
  6. Ulrich Wiesner (1978). Nepalese Temple Architecture: Its Characteristics and Its Relations to Indian Development. BRILL Academic. pp. 46–48, 74. ISBN 90-04-05666-1.
  7. Radhakumud Mookerji (1959). The Gupta Empire. Motilal Banarsidass. p. 146. ISBN 978-81-208-0440-1.
  8. Banerji 1998, ப. 9-10, with Plates XII-XV.
  9. Heather Elgood (2000). Hinduism and the Religious Arts. Bloomsbury Publishing. p. 144. ISBN 978-0-8264-9865-6.
  10. Frederick M. Asher (1980). The Art of Eastern India: 300 - 800. University of Minnesota Press. p. 27. ISBN 978-1-4529-1225-7.
  11. Michael W. Meister (1984). Discourses on Siva. University of Pennsylvania Press. p. 494. ISBN 978-0-8122-7909-2.

ஆதார நூற்பட்டியல்

வெளி இணப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பூமரா_கோயில்&oldid=446392" இலிருந்து மீள்விக்கப்பட்டது