பேட் துவாரகை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பேட் துவாரகை கட்சு வளைகுடாவில் உள்ள சிறு தீவு ஆகும். இதனைத் தீவுத் துவாரகை என்றும் பேட் துவாரகை[1] என்றும் அழைக்கின்றனர். துவாரகை நகரிலிருந்து 32 கி. மீ., தொலைவில் உள்ள ஒகா கடற்கரை வரை பேருந்தில் சென்று, பின் அங்கிருந்து விசைப்படகு மூலம் பேட் துவாரகையை அடையலாம். இங்கு கிருஷ்ணர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இங்கு எழுந்தருளி இருக்கும் கிருஷ்ணரை துவாரகாநாத்ஜி என்று அழைக்கின்றனர். இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு அரசனைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறும். இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி, நாராயணன் என மொத்தம் ஐந்து கோவில்களும் சங்க தீர்த்தம் என்னும் மிகப் புகழ்பெற்ற தீர்த்தமும் உண்டு.

தொல்லியல் அகழாய்வுகள்

பேட் துவாரகை தீவு சிந்துவெளி நாகரீகத்தின் தொல்லியல் களங்களில் ஒன்றாகும்.[2]1980-களில் பேட் துவாரகையில் அகழாய்வு செய்த போது பிந்தைய ஹரப்பா காலத்து மட்பாண்டகள் கிடைக்கப்பெற்றது. 1982-இல் அகழாய்வு செய்த போது, பொ.ஊ.மு. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட 580 மீட்டர் நீளம் கொண்ட சுவர் கடலில் அமிந்திருப்பது கண்டெடுக்கப்பட்டது. மேலும் அரப்பன் முத்திரைகள், எழுத்துக்கள் பொறித்த குடுவை, செப்புக் கலைஞரின் அச்சு, செப்பு மீன் கொக்கி, கப்பல்களில் அழிந்த பாகங்கள், கல் நகூரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்விடத்தில் புதிய கோயில்கள் பொ.ஊ. 18-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-01. பார்க்கப்பட்ட நாள் 2014-03-08.
  2. Archaeology of Bet Dwarka Island
  3. Gaur, A.S.; Sundaresh and Sila Tripati (2004). "An ancient harbour at Dwarka: Study based on the recent underwater explorations". Current Science 86 (9). 
  4. Sullivan, S. M. (2011) Indus Script Dictionary, page viii

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

"https://tamilar.wiki/index.php?title=பேட்_துவாரகை&oldid=142774" இருந்து மீள்விக்கப்பட்டது