குச்சிப்புடி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வைதேகி குல்கார்னி குச்சிப்புடி நடனமாடுகின்றார்
யாமினி ரெட்டி குச்சிப்புடி நடனமாடுகின்றார்

குச்சிப்புடி /kiˈpdi/ (தெலுங்கு: కూచిపూడి) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிபுடி என்னும் கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.[1]

கருநாடக இசையோடு இவ்வகை நடனம் ஆடப்படுவது வழக்கமாகும். அதோடு மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் மற்றும் தம்புரா ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படலாம். இது 7ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் புகழ்பெறத்தொடங்கியது.

வரலாறு

நெடுங்காலமாக தேவதாசிகள் இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில் ஆடிவந்தார்கள்[சான்று தேவை]. காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் பிராமணர்களால்[சான்று தேவை] இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே[சான்று தேவை] ஆடப்பட்டதாகத் தெரிகிறது.


தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது[சான்று தேவை]. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த நடனம்.


நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கோ ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயற்பட்டிருக்கிறது[சான்று தேவை]. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம்.[சான்று தேவை]

இசைக்கருவிகள்

இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம், கஞ்சீரா, புல்லாங்குழல், வீணை மற்றும் வயலின் பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.

நடனமுறை

குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு.

மேற்கோள்கள்

  1. Banham, edited by James R. Brandon ; advisory editor, Martin (1993). The Cambridge guide to Asian theatre (Pbk. ed. ed.). Cambridge, England: Cambridge University Press. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521588225. {{cite book}}: |edition= has extra text (help); |first= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://tamilar.wiki/index.php?title=குச்சிப்புடி&oldid=142828" இருந்து மீள்விக்கப்பட்டது