அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம், பெங்களூரு
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம், பெங்களூரு | |
---|---|
இரவு நேரத்தில் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம், பெங்களூரு | |
ஆள்கூறுகள்: | 13°0′34″N 77°33′3″E / 13.00944°N 77.55083°E |
பெயர் | |
பெயர்: | ஸ்ரீ இராதா கிருஷ்ணா கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கருநாடகம் |
மாவட்டம்: | பெங்களூரு |
அமைவு: | இராசாசி நகர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருட்டிண-சந்திரா |
சிறப்பு திருவிழாக்கள்: | ஜென்மாஸ்டமி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக்கோயில் |
கோயில்களின் எண்ணிக்கை: | 3 |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1997[1][2] |
இணையதளம்: | இசுகான் பெங்களூரு [1] |
ஸ்ரீ இராதா கிருஷ்ணா கோயில் (கன்னடம்- ಶ್ರೀ ರಾಧಾ ಕೃಷ್ಣ ಮಂದಿರ), கருநாடகத்தின் வடக்கு பெங்களூருவில் உள்ள இராசாசி நகரத்தில் அமைந்துள்ளது. இது உலகத்திலுள்ள பெரிய அகில உலக கிருஷ்ண பக்திக் கழகக் கோயில்களில் ஒன்றாகும்.[3] ராதையின் பக்தர்களும் கிருட்டிணனின் பக்கத்தர்களும் வழிபாடும் இக்கோயிலானது, 1997 ஆம் ஆண்டு சங்கர் தயால் சர்மாவால் தொடங்கப்பட்டது. இக்கோவில், மது பண்டிட் தாசா என்பவரால், பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் ஆசிர்வாதத்துடன் கட்டி முடிக்கப்பட்டது.
அமைவிடம்
இக்கோயிலானது ஹரே கிருஷ்ணா மலையில் அமைந்துள்ளது.
வரலாறு
1976 ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த பக்தர்கள் இஸ்கானின் நடவடிக்கைகளை தென்னிந்தியாவிலுள்ள பெங்களூரு, ஹூப்ளி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பரப்பிவந்தனர். சங்கீர்த்தனைகளை தெருக்களிலும், வாழ்நாள் உறுப்பினர்களை சேர்ப்பதிலும், வீடுகளில் கூட்டங்களை ஒருங்கிணைப்பதும், பந்தல்கள் போட்டு கூட்டங்களை நடத்தியும் வந்தனர். மே 1997-ல், பெங்களூரு இஸ்கான் கோயிலை சயபதாகா சுவாமி மற்றும் இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத்தலைவர் சங்கர் தயால் சர்மாவால் தொடங்கப்பட்டது.[2]
அவதாரங்கள்
பெங்களூரு இஸ்கானில் ஆறு அவதாரங்கள் உள்ளது.
- முதன்மைக் கடவுள் ராதா-கிருட்டிணன்
- கிருட்டிண பலராமன்
- நித்தை கவுரங்கா (சைதன்யர்).
- ஸ்ரீனிவாசா கோவிந்தா ( வெங்கடாசலபதி ).
- பிரகலாதன் நரசிம்மர்
- ஸ்ரீல பிரபுபாதா[4]
வழிபாட்டு நேரம்
இக்கோயிலானது காலை 4:15 முதல் 5:15 வரையிலும் மங்கள் ஆரத்திக்காகவும், துளசி, நரசிம்ம ஆரத்தி, சுப்ரபாதத்திற்காகவும், 5:15 முதல்7:15 வரை ஜபத்திற்காகவும், மதியம் 1:00 வரையிலும், மாலை 4:15 முதல் 8:20 வரையிலும் திறந்திருக்கும்.
சமூக சேவை
இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.[5] அட்சய பாத்திரம் அறக்கட்டளை[6] திட்டம் இக்கோயில் உறுப்பினர்களால் துவங்கப்பட்டதாகும்.
படக்காட்சியகம்
வெளி இணைப்புகள்
- The official website of Srila Prabhupada's ISKCON Bangalore.
- The journal of the Hare Krishna Movement. பரணிடப்பட்டது 2015-08-17 at the வந்தவழி இயந்திரம்
- News & views of the Hare Krishna Movement. பரணிடப்பட்டது 2016-01-15 at the வந்தவழி இயந்திரம்
- BangaloreTourism.org: ISKCON, Bangalore.
- Akshaya Pātra USA | Unlimited food for education. பரணிடப்பட்டது 2015-09-13 at the வந்தவழி இயந்திரம்
- ISKCON Truth | Website publishing the hidden stories of ISKCON.
மேற்கோள்கள்
- ↑ "ISKCON Temple Bangalore website, Temple Information". Archived from the original on 2012-06-15. பார்க்கப்பட்ட நாள் 2015-08-17.
- ↑ 2.0 2.1 ISKCON Temple Bangalore website, Temple History
- ↑ Jones, Constance and D. Ryan, James (2007). Encyclopedia of Hinduism. U.S.A.: Facts on File. p. 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-5458-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ ISKCON Temple Bangalore website, Deities page.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-08. பார்க்கப்பட்ட நாள் 2015-08-17.
- ↑ "Obama’s accolade for Akshaya Patra" from Bangalore Mirror, 12-12-2008, hosted on the ISKCON Temple Bangalore website.