ரே கல்வெட்டுக்கள்
Jump to navigation
Jump to search
கிரேக்கப் பாக்திரியாப் பேரர்சர் மெனாண்டரால் பிராமி எழுத்துமுறையில் பிராகிருத மொழியில் நிறுவப்பட்ட ரே கல்வெட்டுக்கள், காலம்: கிமு இரண்டாம் நூற்றாண்டு - கிபி முதலாம் நூற்றாண்டு | |
எழுத்து | பிராமி எழுத்து, பிராகிருத மொழி |
---|---|
உருவாக்கம் | கிமு 2-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை |
இடம் | ரே தொல்லியல் களம், பதேபூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தற்போதைய இடம் | ரே, பதேபூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
ரே கல்வெட்டுக்கள் (Reh Inscription) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பதேபூர் மாவ்ட்டத்தில் உள்ள ரே தொல்லியல் களத்தில் 1979-இல் உடைந்த நிலையில் இக்கல்வெட்டுப் பலகை கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டுக்கள் சிவலிங்கத்தின் பீடத்தில் பிராமி எழுத்துமுறையில் பிராகிருத மொழியில் உள்ளது. இக்கல்வெட்டின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் ஆகும். [1] இக்கல்வெட்டில் கிரேக்கப் பாக்திரியாப் பேரர்சர் மெனாண்டரைக் குறித்த செய்திகள் உள்ளது.[2]
ரே கல்வெட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு: இந்தோ-கிரேக்கப் பேரரசர் மெனாண்டரை மன்னாதி மன்னர், பெரும் மீட்பர் மற்றும் வெல்லமுடியாதவர் எனக்குறிப்பிட்டுள்ளது.
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
- ↑ A. D. H. Bivar (1985), Review: Reh Inscription of Menander and the Indo-Greek Invasion of the Gaṅgā Valley by G. R. Sharma, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, No. 1 (1985), Cambridge University Press, pages 94-96
- ↑ Richard Salomon (1998). Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the Other Indo-Aryan Languages. Oxford University Press, USA. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-509984-3.
உசாத்துணை
- Reh Inscription of Menander and the Indo Greek Invasion of the Ganga Valley, (Studies in history, culture and archaeology / University of Allahabad, Dept. of Ancient History, Culture and Archaeology) Abinash Prakashan (1980)