பொம்பெயி இலக்குமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பொம்பெயி யட்சினியின் சிற்பம்
Statuetta indiana di Lakshmi, avorio, da pompei, 1-50 dc ca., 149425, 02.JPG
கிபி முதல் நூற்றாண்டின் இலக்குமியின் நிர்வாண தந்தச் சிற்பம் (கிபி 79ல் வெசூவியஸ் எரிமலைச் சீற்றத்தால் சீற்த்தில் சேதமடைந்தது.)
செய்பொருள்தந்தம்
உயரம்24.5 செ மீ
தற்போதைய இடம்ரகசிய அருங்காட்சியகம், நேப்பிள்ஸ், இத்தாலி
அடையாளம்149425

பொம்பெயி இலக்குமி சிற்பம் (Pompeii Lakshmi)இந்தியாவில் யானைத் தந்தத்தால் செதுக்கப்பட்ட 24.5 செண்டி மீட்டர் உயரம் கொண்ட இலக்குமியின் நிர்வாணச் சிற்பம் ஆகும். தற்போது இச்சிற்பம் இத்தாலி நாட்டின் பொம்பெயி நகரத்தின் இடிபாடுகளிலிருந்து 1930ல் கண்டெடுக்கப்பட்டது. [1][2] [3] யானையின் தந்தத்திலான இலக்குயின் சிற்பம் தற்போது இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் தேசிய தொல்லியல் அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவான இரகசிய அருங்காட்சியகத்தில் பொது மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [3]

சிலையின் அமைப்பு

யானையின் தந்தத்திலான இலக்குமி சிலையின் கழுத்து மற்றும் இடைகள் அழகிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையின் இருபுறத்திலும் இரண்டு யட்சினிகள் அழகு சாதனப் பொருட்களுடன் காட்சியளிக்கின்றனர். [1]

கிபி 79ல் வெசூவியஸ் எரிமலைச் சீற்றத்தால் பொம்பெயியில் இருந்த இலக்குமி சிற்பம் சேதமுற்றது.[1][2]இச்சிற்பம் கிபி 50-க்குள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நேப்பிள்ஸ் தொல்லியல் அருங்காட்சியக அறிஞர்கள் கருதுகின்றனர். [3]

தோற்றம்

இலக்குமியின் தந்தச் சிலை வட இந்தியாவின் மதுரா நகரத்தில் அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள போகர்தன் எனுமிடத்தில் முதலில் செதுக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.[4] இச்சிலையின் தலை உச்சியில் வட்ட வடிவில் சும்மாடு போன்ற அமைப்பு காணப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. [5]

மேற்கு சத்திரபதி நாட்டு மன்னர் நாகபானன் , சாதவாகன இராச்சியத்தை, கிமு 25-75 முடிய, ஏறத்தாழ 50 ஆண்டுகளாக போர் முற்றுகையிட்டான். [6]போர் முற்றுகையின் போது சாதவாகனர்களின் இராச்சியத்திலிருந்த இலக்குமி சிலையை, மேற்கு சத்திரபதிகளின் படைவீரர்கள் கடத்திச் சென்று, உரோமானியர்களுக்கு, கடல் வணிகம் மூலம் விற்பனை செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. [7]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Beard, Mary (2010). Pompeii: The Life of a Roman Town. Profile Books. p. 24.
  2. 2.0 2.1 De Albentiis, Emidio; Foglia, Alfredo (2009). Secrets of Pompeii: Everyday Life in Ancient Rome. Getty Publications. p. 43.
  3. 3.0 3.1 3.2 "Lakshmi". Museo Archeologico Napoli. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
  4. Dhavalikar, M. K. (1999). "Chapter 4: Maharashatra: Environmental and Historical Process". In Kulkarni, A. R.; Wagle, N. K. (eds.). Region, Nationality and Religion. Popular Prakashan. p. 46.
  5. Butterworth, Alex; Laurence, Ray (2011). Pompeii. Hachette UK. p. 36.
  6. Higham, Charles (2014). Encyclopedia of Ancient Asian Civilizations. Infobase Publishing. p. 299.
  7. The Voyage around the Erythraean Sea, translation with commentary, Chap 41, 48 and 49

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பொம்பெயி_இலக்குமி&oldid=142772" இருந்து மீள்விக்கப்பட்டது