மலைக்கோயில் கல்வெட்டு
எழுத்து | சமசுகிருதம் |
---|---|
உருவாக்கம் | ~ கிபி முதல் நூற்றாண்டு |
இடம் | மதுரா, உத்தரப் பிரதேசம் |
தற்போதைய இடம் | இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா |
அடையாளம் | NS 6482 |
மலைக்கோயில் கல்வெட்டு (Mountain Temple inscription) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுராவில் கண்டுபிடிக்கப்பட்ட, கிபி முதல் நூற்றாண்டின் சமசுகிருத மொழி கல்வெட்டாகும். இக்கல்வெட்டு தற்போது இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [1][2]
மலைக்கோயில் கல்வெட்டு துவக்க கால இந்து மற்றும் சமண சமயக் கோயில் கட்டிடக் கலை குறித்தும், மவுண்டன் கோயில் கல்வெட்டு இந்து மற்றும் சமண கோயில் கட்டிடக்கலை பற்றி ஆரம்பத்தில் குறிப்பிடுகிறது, அதன் மலை போன்ற வடிவமைப்பு மற்றும் சபா மண்டபம் குறித்தும் விளக்குகிறது.
மலைக்கோயில் கல்வெட்டின் எழுத்து அமைப்பும், செய்திகளும் மோரா கிணறு கல்வெட்டு போன்றே உள்ளது. இரண்டு கல்வெட்டுகளும் கற்கோயில் மற்றும் மண்டபம் ஆகியவை கொடையாக அளித்தவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு
சமஸ்கிருத மொழியில் அமைந்த முற்றிலும் முடிவுவற்ற மலைக்கோயில் கல்வெட்டின் ஆங்கில பெயர்ப்பு[2] It reads:[1]
1. . . . uvulasya putrasya mahaksatrapasya so ...
2. . . . ti parvato prasade(or do) sabha silapata ...
3. . . . taviryo rane rajulas ca pi[ta] ...
4. . . . sasyedam arca ...
மொழிபெயர்ப்பு
சோன்யா குயின்டானில்லா என்ப்வர் மலைக்கோயில் கல்வெட்டை கீழ்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்.[1]
. . . ரஜுவுலாவின் மகன் வடக்கு சத்திரபதி சோடசா . . .
மலை வடிவ கோயில், சபா மண்டபம், கற்பலகைகள்.....
போரின் அவரது வீரம் மற்றும் (அவரது) தந்தை ரஜுவுலா.....
இவைகள்....அவரது போற்றுதலுக்குரியவைகள்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Sonya Rhie Quintanilla (2007). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL Academic. p. 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-15537-6.
- ↑ 2.0 2.1 Heinrich Lüders and Klaus Ludwig Janert (1961), Mathurā inscriptions, Göttingen : Vandenhoeck & Ruprecht, வார்ப்புரு:Oclc, pages 203-204, 154, image on page 318