மண்டைக்காடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மண்டைக்காடு
—  பேரூராட்சி  —
மண்டைக்காடு
இருப்பிடம்: மண்டைக்காடு

, தமிழ்நாடு

அமைவிடம் 8°09′47″N 77°16′43″E / 8.1631°N 77.2786°E / 8.1631; 77.2786Coordinates: 8°09′47″N 77°16′43″E / 8.1631°N 77.2786°E / 8.1631; 77.2786
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி மண்டைக்காடு
மக்கள் தொகை

அடர்த்தி

13,317 (2011)

6,053/km2 (15,677/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2.2 சதுர கிலோமீட்டர்கள் (0.85 sq mi)

64 மீட்டர்கள் (210 அடி)

இணையதளம் www.townpanchayat.in/mandaikadu


மண்டைக்காடு (English: Mandaikadu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது.

அமைவிடம்

இதன் கிழக்கில் குளச்சல் 2.5 கிமீ; மேற்கில் திங்கள் நகர் 3 கிமீ; வடக்கில் மணவாளக்குறிச்சி 2.5 கிமீ; தெற்கில் புத்தூர் கடற்கரை 1 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 6 கிமி தொலைவில் உள்ள இரணியலில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

2.2 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 38 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3444 வீடுகளும், 13317 மக்கள்தொகையும் கொண்டது. [2] [3] [4]

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒரு பெரிய புனித ஸ்தலமாகும். இது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் குளச்சலுக்கு அருகில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முக்கியமான இந்து கோவில்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கொண்டாடப்படும் கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மண்டைக்காடு&oldid=115555" இருந்து மீள்விக்கப்பட்டது