நெல்லை சிவா

நெல்லை சிவா (Nellai Siva; 16 சனவரி 1952 – 11 மே 2021) என்ற திரைப்பெயரால் அறியப்பட்ட சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி என்பவர் ஒரு நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.[2] மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் போன்ற பிரபல திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களில் இவர் முற்றிலும் நெல்லை வட்டார வழக்கில் பேசும் வழக்கம் உள்ளவர். இது இவரை மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது. இவர் தனது வாழ்க்கையில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் 1985 இல் வெளியான ஆண்பாவம் ஆகும்.[3][4]

நெல்லை சிவா
பிறப்புசிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி
(1952-01-16)16 சனவரி 1952
தமிழ்நாடு,
திருநெல்வேலி
இராதாபுரம், பணகுடி, வேப்பிலாங்குளம்,
இறப்பு11 மே 2021(2021-05-11) (அகவை 69)[1]
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1985–2021
குறிப்பிடத்தக்க படைப்புகள்வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும்
தொலைக்காட்சிபாண்டியன் ஸ்டோர்ஸ் (தொலைக்காட்சித் தொடர்), மாமா மாப்பிள்ளை.

ஆரம்ப கால வாழ்க்கை

நெல்லை சிவா 16 சனவரி 1952 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேப்பிலையன்குளம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். சிவாஜி கணேசனின் தீவிர ரசிகராக இருந்த இவர், திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்தார். அந்த நேரத்தில் நடிப்பு வாய்ப்புகளைத் தேடியபடி இருந்த நடிகர்களான மன்சூர் அலி கான் மற்றும் போண்டா மணி ஆகியோரை சந்தித்து நல்ல நட்பைப் பெற்றார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போராடிய பின்னர், பாக்யராஜை சந்தித்தார். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ் பெற்றார்.[5] அப்போதைய பிரபல நடிகர் நாகேசுடன் இணைந்து நடித்து தனது திரைப்பட வாழ்க்கையையும் தொடங்கினார். நாகேசு இவரது திருநெல்வேலி வட்டாரமொழியை படப்பிடிப்புத் தளத்தில் பாராட்டி, அதை நகைச்சுவைக்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவித்தார்.[6]

திரைப்பட வாழ்க்கை

1985ஆம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். பின்னர், இவர் சிறிய வேடங்களில் நடித்துவந்தார். 1990களின் பிற்பகுதியில் இவர் ஒரு நகைச்சுவை துணைநடிகராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் தேநீர் கடை உரிமையாளராக நடித்தார். இத்திரைப்படத்திற்குப் பின்னர், இவர் சாமி, அன்பே சிவம், திருப்பாச்சி, கிரீடம் போன்ற பெரிய திரைப்படங்களில் நடிக்குமளவு முன்னேற்றம் பெற்றார். 2000களில் வடிவேலு மற்றும் விவேக் ஆகியோருடன் படங்களில் நடித்தார். நடிகர் வடிவேலு உடன் நடித்த திரைப்படங்களில் இவரது நகைச்சுவை வேடங்களுக்காக இவர் மிகவும் பிரபலமானார்.[7][8][9][10]

தொலைக்காட்சி வாழ்க்கை

2020 இல், விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் மாமா மாப்பிள்ளையிலும் கலந்து கொண்டார்.

நடித்த திரைப்படங்கள்

நீங்கள் இதை விரிவாக்கலாம்.

ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1985 ஆண்பாவம் கிராமத்தான் அறிமுகம்
1993 ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்
1994 என் ஆசை மச்சான்
1994 சீவலப்பேரி பாண்டி
1994 இராவணன் புண்ணாக்கு
1995 காந்தி பிறந்த மண்
1995 சிந்துபாத்
1996 மகாபிரபு உள்ளூர் அரசியல்வாதி
1996 அருவா வேலு காவல் அதிகாரி
1996 ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே சந்தனக் கருப்பன்
1996 டாடா பிர்லா தலைமைக் காவலர்
1996 வாழ்க ஜனநாயகம்
1998 கண்ணாத்தாள்
1999 உன்னை தேடி
1999 சுயம்வரம் விடுதி காப்பாளர்
1999 உன்னருகே நானிருந்தால்
2000 கண்ணன் வருவான்
2000 வெற்றிக் கொடி கட்டு தேனீர் கடை உரிமையாளர்
2002 இவன்
2002 ரன் அரசியல்வாதி
2003 அன்பே சிவம்
2003 சாமி பெருமாள் பிச்சையின் ஆதரவாளர்
2003 வின்னர் ஜோசியக்காரர்
2003 திருமலை திருமலையின் நண்பர்
2003 சிந்தாமல் சிதறாமல்
2005 திருப்பாச்சி கிராமத்தான்
2005 அன்பே ஆருயிரே போக்குவரத்து காவல் ஆய்வாளர்
2005 ஒரு நாள் ஒரு கனவு
2005 பதவி படுத்தும் பாடு
2006 இம்சை அரசன் 23ம் புலிகேசி புலவர்
2006 வட்டாரம்
2005 இலக்கணம் வீட்டுத் தரகர்
2007 மணிகண்டா
2007 திருத்தம் தலைமைக் காவலர்
2007 என்னைப் பார் யோகம் வரும் தலைமைக் காவலர்
2007 என் உயிரினும் மேலான
2007 கிரீடம் தானி ஓட்டுநர்
2008 சக்ரவியூகம் காவல் அதிகாரி
2008 சிலந்தி
2008 மலரினும் மெல்லிய
2008 அறை எண் 305ல் கடவுள் தேனீர் கடை உரிமையாளர்
2008 சுட்ட பழம்
2008 தித்திக்கும் இளமை பரந்தாமன்
2008 இயக்கம்
2008 கண்ணும் கண்ணும் சடலை
2008 மாணவன் நினைத்தால் தனியார் அஞ்சல் ஊழியர்
2008 அழைப்பிதழ்
2008 மதுரை பொண்ணு சென்னை பையன் கணித ஆசிரியர்
2008 வேள்வி காவலர்
2009 படிக்காதவன் கோதண்டம்
2009 தோரணை
2009 குடியரசு
2009 மாதவி இருசக்கர வாகனத்தில் வருபவர்
2009 பிஞ்சு மனசு அண்ணாச்சி
2009 அய்ம்புலன்
2009 கந்தசாமி காவலர்
2009 மதுரை டூ தேனி
2009 வேடப்பன் அண்ணாச்சி
2010 அம்பாசமுத்திரம் அம்பானி தலைமைக் காவலர்
2010 கற்றது களவு
2010 தமிழ் படம் அமைச்சர்
2010 பா. ர. பழனிச்சாமி
2010 அழகான பொண்ணுதான்
2010 நீயும் நானும் நெல்லை
2011 மின்சாரம் தூயவன்
2012 வாச்சாத்தி
2012 கழுகு காவல் அதிகாரி
2012 சகுனி அரசியல்வாதி
2013 புத்தகம் போக்குவரத்து காவலர்
2013 திருமதி தமிழ்
2013 பட்டத்து யானை காவலர்
2013 யாருடா மகேஷ்
2014 அழகிய பாண்டிபுரம்
2014 சூரன்
2015 சவாலே சமாளி
2015 விந்தை
2015 எலி
2015 பாபநாசம்
2015 துணை முதல்வர்
2015 சகலகலா வல்லவன்
2015 விரைவில் இசை
2015 கலை வேந்தன்
2016 மிருதன் குருமூர்த்தியின் அடியாள்
2016 பதிலடி
2016 அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
2016 ஜித்தன் 2 விஜயகுமார்
2016 தகடு பூங்கா அதிகாரி
2016 நேர்முகம்
2016 யோக்கியன் வாரான்
2017 ஆரம்பம் அட்டகாசம்
2017 விருதாச்சலம்
2017 உன்னை தொட்டு கொல்லவா
2017 நம்மகத
2018 சொல்லிவிடவா போக்குவரத்து காவல் அதிகாரி
2018 படித்தவுடன் கிழித்துவிடவும்
2018 சீமத்துரை காவல் அதிகாரி
2019 முடிவில்லா புன்னகை
2019 கழுகு 2 தலைமைக் காவலர்
2019 உதய்
2019 50 ரூவா
2019 மங்குனி பாண்டிகள்
2019 பேய் வால் புடிச்ச கதை
2019 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்
2020 என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா
2020 பச்சை விளக்கு
2020 சொல்லுங்கண்ணே சொல்லுங்க
2021 பேய் இருக்க பயமேன்
2021 பழகிய நாட்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நெல்லை_சிவா&oldid=21909" இருந்து மீள்விக்கப்பட்டது