கண்ணாத்தாள்
கண்ணாத்தாள் | |
---|---|
இயக்கம் | பாரதி கண்ணன் |
தயாரிப்பு | ஆர். பி. செளத்ரி |
கதை | பாரதி கண்ணன் ஈ. இராமதாஸ் (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | விஜய் |
படத்தொகுப்பு | வி. ஜெய்சங்கர் |
கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | திசம்பர் 2, 1998 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணாத்தாள் 1998 ஆம் ஆண்டு கரண் மற்றும் நீனா நடிப்பில், இளையராஜா இசையில், பாரதி கண்ணன் இயக்கத்தில், ஆர். பி. செளத்ரி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3]
கதைச்சுருக்கம்
கண்ணாத்தாள் (நீனா) தெய்வபக்தி நிறைந்தவள். அந்த கிராமத்து மக்கள் அவளை தெய்வமாகவே போற்றுகின்றனர். நாதஸ்வரக் கலைஞரான அவளது தந்தை சண்முகம் பிள்ளை (டெல்லி கணேஷ்), தாய் (பாத்திமா பாபு) மற்றும் நான்கு சகோதரிகளுடன் வசிக்கிறாள்.
ஜமீன்தார் மோகனசுந்தரத்தின் (மணிவண்ணன்) மனைவி ரங்கநாயகி (வடிவுக்கரசி). இவர்களின் மகன் சின்னதுரை (கரண்). பல தீய பழக்கங்களுக்கு அடிமையானவன் சின்னதுரை. கோயில் திருவிழாவில் கண்ணாத்தாவைக் காணும் அவன் அவளைத் திருமணம் செய்ய விருப்பப்படுகிறான். சண்முகம் பிள்ளையின் சம்மதத்தோடு அவர்கள் திருமணம் நடைபெறுகிறது.
திருமணத்திற்குப் பிறகு அப்பாவியான கண்ணாத்தாளைக் கொடுமைப்படுத்துகிறான் சின்னதுரை. தன் மகளைக் காண வரும் சண்முகம் பிள்ளை, கண்ணாத்தாள் படும் சிரமங்களைக் கண்டு மனவேதனை அடைகிறார். அந்தக் கவலையிலேயே மாரடைப்பு வந்து இறக்கிறார். ஆதரவற்ற தன் தாயையும் சகோதரிகளையும் தன் வீட்டில் தங்கவைக்கிறாள் கண்ணாத்தாள். சின்னதுரையின் தாயும் தந்தையும் அவர்களை அவமானப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றுகின்றனர். இவர்களின் கொடுமை தாளாமல் கண்ணாத்தாளின் தாயும், சகோதரிகளும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
சின்னதுரையும் அவன் தாய், தந்தையும் சேர்ந்து கர்ப்பிணியான கண்ணத்தாளைக் கொடுமைப்படுத்திக் கொலை செய்துவிட்டு அதை விபத்தாக சித்தரிக்கின்றனர். அதன் பிறகு சின்னதுரை, சீதாலட்சுமியை (இந்து) திருமணம் செய்கிறான். கண்ணாத்தாள் தெய்வமாக வந்து சின்னதுரை மற்றும் அவன் தாய், தந்தையை பழிதீர்க்கிறாள்.
நடிகர்கள்
- கரண் - சின்னதுரை
- நீனா - கண்ணாத்தாள்
- இந்து - சீதாலட்சுமி
- மணிவண்ணன் - மோகனசுந்தரம்
- வடிவேலு - சூனா பாணா (சுப்பையா பாண்டியன்)
- வடிவுக்கரசி - ரங்கநாயகி
- பாத்திமா பாபு - கண்ணாத்தாவின் தாய்
- டெல்லி கணேஷ் - சண்முகம் பிள்ளை
- ராஜ் சந்தர் - பாபு
- அச்சன்
- அல்வா வாசு - வாசு
- திடீர் கண்ணையா - கோபால்
- கோவை செந்தில்
- சித்திரகுப்தன்
- வெள்ளை சுப்பையா
- மீசை முருகேசன்
- குள்ளமணி
- நெல்லை சிவா
- பாரதி கண்ணன் - பாபு
- வினு சக்கரவர்த்தி - கருப்பு சாமி
- குஷ்பூ - சிறப்புத் தோற்றம்
இசை
படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் காமகோடியன், பொன்னடியான், அறிவுமதி, இளையராஜா மற்றும் பாரதிகண்ணன்[4][5].
வ. எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | அம்மன் புகழைப் பாட (ஆண்குரல்) | இளையராஜா | 4:53 |
2 | அம்மன் புகழைப் பாட (பெண்குரல்) | பவதாரிணி | 4:53 |
3 | காமாட்சி அம்மனுக்கு | சுஜாதா மோகன் | 5:17 |
4 | மாலைவெய்யழகி | இளையராஜா | 2:42 |
5 | முந்தி முந்தி விநாயகரே | சித்ரா | 6:20 |
6 | பதிலெங்கே சொல்வாய் | சுஜாதா மோகன் | 4:09 |
7 | உன்னை நம்பும் | தேவி | 2:38 |
மேற்கோள்கள்
- ↑ "கண்ணாத்தாள்" இம் மூலத்தில் இருந்து 2011-05-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110516062504/http://www.jointscene.com/movies/Kollywood/Kannathaal/7032.
- ↑ "கண்ணாத்தாள்". http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kannathal.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "கண்ணாத்தாள்". http://spicyonion.com/movie/kannathaal/.
- ↑ "பாடல்கள்". http://play.raaga.com/tamil/album/Kannathal-songs-T0001017.
- ↑ "பாடல்கள்". http://www.saavn.com/s/album/tamil/Kannathaal-1998/Pyq41WXwOYY_.