மாணவன் நினைத்தால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாணவன் நினைத்தால்
இயக்கம்எஸ். பி. ஞானமொழி
தயாரிப்புபி. கே. சந்திரன்
கதைஎஸ். பி. ஞானமொழி
இசைவி. தாஷி
நடிப்புரித்திக்
வர்சினி
ஒளிப்பதிவுசெல்வகுமார்
படத்தொகுப்புஎம். ஆர். சீனிவாசன்
கலையகம்அருள் மூவிஸ்
வெளியீடுசூலை 18, 2008 (2008-07-18)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாணவன் நினைத்தால் (Maanavan Ninaithal) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். பி. ஞானமொழி இயக்கிய இப்படத்தில், புதுமுகம் ரிதிக் மற்றும் வர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, பாண்டு, அனு மோகன், நளினி, வாமன் மாலினி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். பி. கே. சந்திரன் தயாரித்த இப்படத்திற்கு தாஷி இசை அமைத்துள்ளார். படமானது 18 சூலை 2008 அன்று வெளியானது.[1][2]

நடிகர்கள்

  • ரித்திக் சக்தியாக
  • வர்சினி நிவேதாவாக
  • பாக்யராஜ் ராஜாக
  • மணிவண்ணன் பாயாக
  • மனோபாலா பேராசிரியராக
  • பாண்டு பேராசிரியராக
  • அனு மோகன் மோகனாக
  • நளினி நிவேதாவின் தாயாக
  • வாமன் மாலினி சக்தியின் தாயல் லட்சுமியாக
  • சிங்கமுத்து பேருந்து நடத்துநராக
  • நெல்லை சிவா தனியார் அஞ்சல் அலுவலக மேலாளராக
  • கொட்டாச்சி கொட்டாச்சியாக
  • கிளி இராமச்சந்திரன் கிளியாக
  • மும்தாஜ் பக்கோடா காதர்
  • சின்னராசு ஜேப்படியாக
  • வி. பி. பிரதீஷ்
  • சிவநாராயணமூர்த்தி காவல் ஆய்வாளர் சிவநாராயணமூர்த்தியாக
  • சுருளி மனோகர் காவலராக
  • ரவுண்ட லிங்கன்
  • பாலதாசன்
  • செல்வகுமார் செல்வராஜாக
  • சம்பத்குமார் சம்பத்தாக
  • கலிவரதன் வரதனாக
  • சிறீராம் சிறீராமாக
  • திருப்பூர் தெனாலி தெனாலியாக
  • பாரதி சிறப்புத் தோற்றத்தில்
  • ரிசா சிறப்புத் தோற்றத்தில்

தயாரிப்பு

அருள் மூவிஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட திரைப்படமான மாணவன் நினைத்தால் படத்தை அறிமுக இயக்குநர் ஞானமொழி இயக்கினார். ரித்திக் நாயகனாக நடிக்க, கடைசியாக அச்சச்சோ படத்தில் (2007) நடித்த வர்ஷினி ஆதிரா என்ற பெயரில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். 2006 ஆம் ஆண்டில் சிறந்த பின்னணி இசைக்கான கேரள அரசு திரைப்பட விருதை வென்ற வி. தாஷி இந்த படத்திற்கு இசையமைத்தார்.[3][4]

இசை

திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் வி. தாஷி இஅமைத்தார். இசைப் பதிவில் ஆறு பாடல்கள் உள்ளன.[5]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நிலவே தங்க நிலவே"  பி. சி. சுபாஷ் 4:11
2. "நீ பேரழகா"  பி. சி. சுபாஷ், சுவர்ணலதா 4:43
3. "சுல்லப்பா"  பி. சி. சுபாஷ் 4:36
4. "பரமக்குடி"  பி. சி. சுபாஷ் 3:35
5. "அங்கும் காதல்"  பி. சி. சுபாஷ் 3:03
6. "காதல் கொள்ளாதே"  மாணிக்க விநாயகம், அனுராதா ஸ்ரீராம் 5:19
மொத்த நீளம்:
25:18

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாணவன்_நினைத்தால்&oldid=36447" இருந்து மீள்விக்கப்பட்டது