சுருளி மனோகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுருளி மனோகர்

சுருளி மனோகர் (Suruli Manohar) (இறப்பு:7 ஆகத்து 2014 வயது 51)[1]), சின்னத்திரை நடிகரும், வெள்ளித்திரை நகைச்சுவை நடிகருமாவார். இவர் சுறா, படிக்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியின் சூப்பர் 10 நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமான இவர், இயக்குநர்[2] என்ற திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிவந்தார். புற்றுநோயால்[3] பாதிக்கப்பட்டுவந்த இவர் 2014 ஆகத்து 7 அன்று காலமானார்.[4]

மேற்கோள்கள்

  1. "சுருளி மனோகர் காலமானார்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2014.
  2. "நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2014.
  3. "பிரபல நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்". Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2014.
  4. "பிரபல நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்!". Archived from the original on 2014-08-11. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2014.
"https://tamilar.wiki/index.php?title=சுருளி_மனோகர்&oldid=23796" இருந்து மீள்விக்கப்பட்டது