மதுரை பொண்ணு சென்னை பையன்
மதுரை பொண்ணு சென்னை பையன் (Madurai Ponnu Chennai Paiyan) என்பது 2008ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஏ. சி. ராஜசேகரன் இயக்கிய இப்படத்தில் எஸ். எஸ். ஆர் பங்கஜ் குமார், தேஜமாய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஆர். சுந்தர்ராஜன், மனோபாலா, சந்தான பாரதி, அருண் பாண்டியன், நிழல்கள் ரவி, கராத்தே ராஜா, பாண்டு, எஸ். பி. முத்துபாரதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். எஸ். பி. முத்துபாரதி மற்றும் பி. தமிழ்ச்செல்வி ஆகியோர் தயாரித்த இப்படத்திற்கு கண்மணி ராஜா இசை அமைத்துள்ளார். படமானது 2008 இல் வெளியானது.[1][2][3]
மதுரை பொண்ணு சென்னை பையன் | |
---|---|
இயக்கம் | ஏ. சி. ராஜசேகரன் |
தயாரிப்பு | எஸ். பி. முத்துபாரதி பி. தமிழ்ச்செல்வி |
கதை | ஏ. சி. ராஜசேகரன் |
இசை | கண்மணி ராஜா |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் பங்கஜ் குமார் தேஜமாய் |
ஒளிப்பதிவு | இராஜராஜன் |
படத்தொகுப்பு | வி. எம். உதயகுமார் |
கலையகம் | வேலு தேவர் பிலிம்ஸ் |
வெளியீடு | 18 ஏப்ரல் 2008 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- எஸ். எஸ். ஆர் பங்கஜ் குமார் சூரியாவாக
- தேஜமாய் விசாவாக (விசாலாட்சி)
- ஆர். சுந்தர்ராஜன் மன்மதராஜனாக
- மனோபாலா பாலா நாயராக
- சந்தான பாரதி மருத்துவராக
- அருண் பாண்டியன் விசாவின் உறவினராக
- நிழல்கள் ரவி பாலனாக
- கராத்தே ராஜா மருதுபாண்டியாக
- பாண்டு மருத்துவராக
- எஸ். பி. முத்துபாரதி விசாவின் உறவினராக
- கோவை செந்தில் உணவக உரிமையாளராக
- நெல்லை சிவா கணித ஆசிரியர்
- பயில்வான் ரங்கநாதன்
- முத்துக்காளை முத்துக்காளையாக
- சிவநாராயணமூர்த்தி உணவக உரிமையாளராக
- மாஸ்டர் பரத் நண்டுவாக
- விஜய் கணேஷ் வைத்தியநாதன்
- சபிதா ஆனந்த் மீனாட்சியாக
- சாந்தி ஆனந்த் மாமியாக
- டி. ஆர். லதா சூரியாவின் பாட்டியாக
- முத்து பிரகாஷ் மதனாக
- நிஜின் அமித்தாக
- அன்பரசன் அன்பாக
- லட்சுமிசிறீ பிரசாத் கமலாவாக
- சர்மிளா அம்பிகாவாக
- டி. ராஜா விருந்தினர் தோற்றறத்தில்
- லக்சா சிறப்புத் தோற்றத்தில்
- பாரதி சிறப்புத் தோற்றத்தில்
- வினுதா லால் சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
வேலு தேவர் பிலிம்ஸ் பதாகையின் கீழ் அறிமுக இயக்குநர் ஏ. சி. ராஜசேகரன் மதுரை பொண்ணு சென்னை பையன் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். எஸ். எஸ். ராஜேந்திரனின் பேரனான, எஸ். எஸ். ஆர். பங்கஜ் குமார், முன்னாள் நகைச்சுவை நடிகை பிந்துகோசின் பேத்தி தேஜமாய் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டனர்.[4][5][6]
இசை
திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் கண்மணி ராஜா அமைத்தார். இசைப்பதிவில் எட்டு பாடல்கள் உள்ளன.[7]
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஏ. சி. ராஜேந்திரன்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "செல்லமே" | தீபிகா | 5:30 | |||||||
2. | "கலிகாலம்" | முகேஷ், சிறீவர்தினி | 4:29 | |||||||
3. | "காதல் காதல்" | பிரசண்ணா ராவ் | 6:22 | |||||||
4. | "புன்னகை" | ஹரிஷ் ராகவேந்திரா | 4:28 | |||||||
5. | "சிங்கில் டீ" | எழும்பூர் ஆண்டனி | 5:31 | |||||||
6. | "திருப்பாச்சி" | மாணிக்க விநாயகம், உசா ராஜ் | 5:05 | |||||||
7. | "திருதிருண்ணுu" | புஷ்பவனம் குப்புசாமி, சிறீவர்தினி | 4:47 | |||||||
8. | "வச்சுக்க வச்சுக்க" | கண்மணி ராஜா, தீபிகா | 5:01 | |||||||
மொத்த நீளம்: |
41:13 |
குறிப்புகள்
- ↑ "Find Tamil Movie Madurai Ponnu Chennai Payyan". jointscene.com இம் மூலத்தில் இருந்து 31 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100131132426/http://www.jointscene.com/movies/Kollywood/Madurai_Ponnu_Chennai_Payyan/1396.
- ↑ "Madurai Ponnu Chennai Paiyan (2008) Tamil Movie". spicyonion.com. https://spicyonion.com/movie/madurai-ponu-chennai-paiyan/.
- ↑ "Madurai Ponnu Chennai Payyan (2008)". filmibeat.com. https://www.filmibeat.com/tamil/movies/madurai-ponnu-chennai-payyan.html.
- ↑ "Another Grandson on the row". kollywoodtoday.net. 18 April 2008 இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191031120652/http://www.kollywoodtoday.net/news/another-grandson-on-the-row/.
- ↑ "மலைப் பாம்பும், 'பிந்து' பேத்தியும்!" (in Tamil). filmibeat.com. 24 October 2007. https://tamil.filmibeat.com/shooting-spot/bondhugosh-grand-daughter-madurai-ponnu.html.
- ↑ "Madurai Ponnu Chennai Paiyan". chennaionline.com இம் மூலத்தில் இருந்து 24 May 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080524001749/http://www.chennaionline.com/Film/Onlocation/Nov07/11mpcp.asp.
- ↑ "Madurai Ponnu Chennai Payyan (2007) - Kanmaniraja". mio.to இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191031120650/https://mio.to/album/Madurai%2BPonnu%2BChennai%2BPayyan%2B(2007).