வாச்சாத்தி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வாச்சாத்தி
சுவரொட்டி
இயக்கம்இரவி தம்பி
தயாரிப்புஇரத்னா ரமேஷ்
கதைஇரவி தம்பி
இசைஜாக் ஸ்ரீவத்சன்
நடிப்புஇரத்னா ரமேஷ்
தருஷ்ணா
ஒளிப்பதிவுகுரு சிவா
படத்தொகுப்புஎஸ். பி. அகமது
கலையகம்Kumari Talkies & Rethna Films
வெளியீடு1 பெப்ரவரி 2012 (2012-02-01)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாச்சாத்தி (Vachathi) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இது வாச்சாத்தி வழக்கை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தை குமாரி டாக்கீஸ் மற்றும் ரத்னா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. ரவிதம்பி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ரத்னா ரமேஷ் நாயகனாகவும், தருஷணா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர் . ஒய். ஜி மகேந்திரன், பாண்டு, பாலு ஆனந்த், நெல்லை சிவா, குயிலி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். குருசிவா ஒளிப்பதிவு செய்ய, ஜாக் வத்சன் இசையமைத்துள்ளார். சி. புண்ணியா பாடல் வரிகளை எழுதியுள்ளார். எஸ். பி. அகமது படத் தொகுப்பைச் செய்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாச்சாதி வழக்கை அடிப்படையாகக் கொண்ட கதை இது. இந்த வழக்கில் நீதிக்காக போராடிய டி. எஸ். பி ஜெகநாதனும், மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகமும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை வட்டை இயக்குனர் அமீர் வெளியிட்டார், அதை இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் பெற்றார்.[1]

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கான இசையை ஜாக் ஸ்ரீவத்சன் அமைத்தார்.[2]

# பாடல்கலைஞர்(கள்) நீளம்
1. "மனிதரால்"  பிரபாகர் 03:36
2. "சிறு மல்லிகை"  சுர்முகி ராமன், கிருஷ்ணவேணி 03:24
3. "மச்சக் கன்னி"  சியாம் பி. கீர்த்தண் 04.15
4. "காலம் செய்த"  சியாம் பி. கீர்த்தண் 05:06
5. "உயிராசை"  செந்தில்தாஸ் 03:51

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வாச்சாத்தி_(திரைப்படம்)&oldid=37468" இருந்து மீள்விக்கப்பட்டது