மாதவி (2009 திரைப்படம்)
மாதவி | |
---|---|
இயக்கம் | முருகாஸ் |
தயாரிப்பு | எஸ். முருகன் |
கதை | முருகாஸ் |
இசை | இராஜேஷ் ராமலிங்கம் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கே. வி. சுரேஷ் |
படத்தொகுப்பு | கே. எம். கே. பழனிவேல் |
கலையகம் | ஜிமாஸ் கிரியேஷன் |
வெளியீடு | செப்டம்பர் 25, 2009 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாதவி (Madhavi) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் பரபரப்புத் திரைப்படம் ஆகும். முருகாஸ் இயக்கிய. இப்படத்தில் சஜித் ராஜ், புதுமுகம் மோகனா, ராம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிழல்கள் ரவி, ரேகா, வடிவுக்கரசி, மாறன், கவிதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். எஸ். முருகன் தயாரித்த இப்படத்திற்கு, ராஜேஷ் ராமலிங்கம் இசை அமைத்துள்ளார். படமானது 25 செப்டம்பர் 2009 அன்று வெளியானது. இந்த படம் தெலுங்கில் துரோகம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1][2]
நடிகர்கள்
- சஜித் ராஜ் நந்தாவாக
- மோகனா மாதவியாக
- ராம்ஜி மகேஷ்
- நிழல்கள் ரவி மகேசின் தந்தை நந்தனாக
- ரேகா மகேசின் தாயாக
- வடிவுக்கரசி பாலியல் பெண் தரகராக
- மாறன் மணியாக
- கவிதா சாவித்திரியாக
- லக்சாவாக
- மலேசியா லாவண்யா மதுமிதாவாக
- சிறீதர் மாதவியின் தந்தையாக
- சுந்தரி கமலாவாக
- நெல்லை சிவா இருசக்கர வாகனத்தில் செல்பவராக
- கோவை செந்தில் கிராமத்து மருத்துவராக
- சிவநாராயணமூர்த்தி திருமணத் தரகராக
- கோவை தேசிங்கு ரௌடியாக
- வெங்கல்ராவ்
- தேனி முருகன்
- முத்துராஜ் நந்தாவின் நண்பராக
தயாரிப்பு
முருகாஸ் இயக்குனர் பி. வாசுவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். ஜிமாஸ் கிரியேஷன் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட படமான மாதவி வழியாக இயக்குநராக அறிமுகமானார். இவர் பி. வாசுடன் இணைந்து மன்னன் (1992), சந்திரமுகி (2005) போன்ற படங்களில் பணியாற்றினார். மாதவி படத்தில் கதாநாயகனாக நடிக்க சஜித் ராஜ் தேர்வு செய்யப்பட்டார், புதுமுகம் மோகனா கதாநாயகியாக நடித்தார். ஒரு பெண் தன் காதலனுடன் ஓடிப்போன ஒரு காதல் கதையை அவர் இப்படத்தில் கையாண்டதாக இயக்குனர் கூறினார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதமுள்ள கதைப் பகுதியாகும். இந்த கதையின் முக்கிய அம்சமாக ஏமாற்றுவது உள்ளது. படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மலேசியாவில் படமாக்கப்பட்டது.[3][4][5]
இசை
திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் அமைத்தார். இப்படத்தின் இசைப் பதிவில் கபிலன், முருகாஸ் ஆகியோர் எழுதிய ஐந்து பாடல்கள் உள்ளன.[6][7]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "இளமையின் வாசனை முதல்" | அனுராதா ஸ்ரீராம், ரஞ்சித் | 6:12 | |||||||
2. | "ஓஹோ ஓஹோ அழகு பெண்கள்" | பெல்லிராஜ் | 4:56 | |||||||
3. | "பருவ பொண்ணு ஒண்ணு" | கிரேஸ் கருணாஸ் | 4:12 | |||||||
4. | "சொல்லாத காதல் ஒன்று" | பெல்லிராஜ் | 5:05 | |||||||
5. | "தழுவிடவா தழுவிடவா" | பிரபாகர், வைஷ்ணவி | 5:04 | |||||||
மொத்த நீளம்: |
25:29 |
குறிப்புகள்
- ↑ "Madhavi (2009)". nowrunning.com. https://www.nowrunning.com/movie/5111/tamil/madhavi/index.htm.
- ↑ "Madhavi (2009)". filmibeat.com. https://www.filmibeat.com/tamil/movies/madhavi.html.
- ↑ "Between husband and wife". ayngaran.com. http://www.ayngaran.com/frame.php?iframepath=moviedetails.php?movid=330.
- ↑ "P Vasu’s assistant tells all about deceiving". behindwoods.com. 3 July 2009. http://www.behindwoods.com/tamil-movie-news-1/july-09-01/p-vasu-03-07-09.html.
- ↑ "இளமை+அதிர்ச்சி= மாதவி" (in Tamil). filmibeat.com. 22 March 2008. https://tamil.filmibeat.com/specials/22-mohana-stars-in-madhavi.html.
- ↑ "Madhavi (2009) - Rajesh Ramalingam". mio.to இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190928114807/https://mio.to//album/Madhavi+%282009%29.
- ↑ "Madhavi Songs". mymazaa.com. https://mymazaa.com/tamil/audiosongs/movie/Madhavi.html.