அழைப்பிதழ் (திரைப்படம்)
அழைப்பிதழ் என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். பி. கே. ராஜ்மோகன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்களான ரதீஷ், சோனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், எம். எசு. பாசுகர், பாலு ஆனந்த், பி. கே. ராஜ்மோகன், உமா கவுரி, எழில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிடேஷ் இசை அமைத்துள்ளார். படமானது 11 சூலை 2008 இல் வெளியானது. [1] [2] [3]
அழைப்பிதழ் | |
---|---|
இயக்கம் | பி. கே. ராஜ்மோகன் |
தயாரிப்பு | சிறீ வெங்கடாசலபதி பிலிம் |
கதை | பி. கே. ராஜ்மோகன் |
இசை | ஹிடேஷ் |
நடிப்பு | ரதீஷ் சோனா |
ஒளிப்பதிவு | கே. வெங்கட் |
படத்தொகுப்பு | எம். சங்கர் கே. இந்திரிஸ் |
கலையகம் | சிறீ வெங்கடாசலபதி பிலிம் |
வெளியீடு | சூலை 11, 2008 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ரத்தீஷ் சிவாவாக
- சோனா சௌந்தர்யாவாக
- எம். எசு. பாசுகர் திட்ட மேலாளராக
- பாலு ஆனந்த் முன்யாவாக
- பி. கே. இராஜ்மோகனாக
- உமா கௌரி
- எழில்
- விஜய் கண்ணன் சௌந்தர்யாவின் தாயாக
- ரம்பா சிவாவின் தாயாக
- சி. ஜெயபால்
- நண்டு
- வி. எஸ். நல்லக்காமு
- நெல்லை சிவா
- பாவா இலட்சுமணன் சிவாவின் உறவினராக
- கொட்டாச்சி காத்துவாக
- சிவநாராயணமூர்த்தி தேனீர் போடுபவராக
- என். ஜி. அல்லிமுத்து
- மீசை நாகராஜ்
- விஜயராஜ் விஜயாக
- ஈஸ்ர் ஈஸ்வராக
- பெரியார் பெரியாராக
- வெங்கட் கிருஷ்ணா வெங்கட் கிருஷ்ணாவாக
இசை
திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் ஹிடேஷ் அமைத்துள்ளார். இசைப்பதிவில் பழனி பாரதி, நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதிய ஐந்து பாடல்கள் உள்ளன.[4] [5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "பனித்துளி பனித்துளி" | பின்னி கிருஷ்ணகுமார், ரேஷ்மி | 5:47 | |||||||
2. | "நீதான்" | ஹரிஷ் ராகவேந்திரா | 5:02 | |||||||
3. | "மேளம் கொட்டி" | இரகுபதி, சுவர்ணலதா | 5:00 | |||||||
4. | "லே லே" | தேவன் ஏகாம்பரம் | 4:44 | |||||||
5. | "கிரேக்க நாட்டு" | இரகுபதி, அனுராதா ஸ்ரீராம் | 4:45 | |||||||
மொத்த நீளம்: |
25:18 |
வரவேற்பு
ஒரு விமர்சகர் 5 க்கு 1.75 என படத்துக்கு மதிப்பெண்ணிட்டு, "இசை சராசரிக்கும் குறைவானது, ஒளிப்பதிவோ நேர்த்தி இல்லை, படத் தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம், திரைக்கதை எளிமையாக உள்ளது" என்று முடித்தார். [6]
மேற்கோள்கள்
- ↑ "Azhaipithazh (2008) Tamil Movie". spicyonion.com. https://spicyonion.com/movie/azhaipithazh/.
- ↑ "Azhaipithazh (2008)". nowrunning.com. https://www.nowrunning.com/movie/5558/tamil/azhaipithazh/index.htm.
- ↑ "Azhaipithazh (2008)". filmibeat.com. https://www.filmibeat.com/tamil/movies/azhaipithazh.html.
- ↑ "Azhaipithazh (2008) - Hitesh". mio.to இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191031212715/https://mio.to/album/Azhaipithazh%2B(2008).
- ↑ "Azhaipithazh Songs". mymazaa.com. https://mymazaa.com/tamil/audiosongs/movie/Azhaipithazh.html.
- ↑ "AzhaipithazhTamil Movie Review". bharatstudent.com இம் மூலத்தில் இருந்து 1 நவம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191101112923/http://www.bharatstudent.com/cafebharat/movie_reviews_2-Tamil-Azhaipithazh-Movie-Review-3,394.php.