ஜூடோ. கே. கே. இரத்தினம்

ஜூடோ. கே. கே. இரத்தினம் (பிறப்பு கே. கே. இரத்தினம் ; 8 ஆகத்து 1930 - 26 சனவரி 2023) என்பவர் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றிய ஓர் இந்திய சண்டை பயிற்சியாளர் மற்றும் சண்டைக் காட்சி அமைப்பாளர் ஆவார். இவர் 1959 ஆம் ஆண்டு தாமரைக்குளம் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் 1966 ஆம் ஆண்டு வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் சண்டைப் பயிற்சியாளராக அறிமுகமானார். திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு நடிகராக 2006 இல் தலைநகரம் படத்தில் கடைசியாக தோன்றினார். விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், தளபதி தினேஷ், ஜாகுவார் தங்கம், ராம்போ ராஜ்குமார், பெப்சி விஜயன், பொன்னம்பலம், ஜூடோ கே. கே. இராமு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், ஆம்பூர். ஆர். எஸ். பாபு, எம். சாகுல் அமீது ஆகிய திரைப்பட சண்டை பயிற்சியாளர்கள், நடிகர்கள் இவரிடம் சண்டைக் காட்சிக் கலைஞர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றியவர்களாவர்.  இவரது மகன் ஜூடோ. கே. கே. இராமு ஒரு சண்டைப் பயிற்சியாளராகவும், இவருடைய பேரன்கள் ஜூடோ லெனின் மற்றும் ஜான் பிரின்ஸ் சண்டைக் காட்சி கலைஞர்களாகவும் உள்ளனர்.[1] 

ஜூடோ. கே. கே. இரத்தினம்
Judo. K. K. Rathnam
பிறப்புகே. கே. இரத்தினம்
(1930-08-08)8 ஆகத்து 1930
குடியாத்தம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு26 சனவரி 2023(2023-01-26) (அகவை 92)
குடியாத்தம், தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்கலைச்செல்வம், ருத்ரநாகம்
பணி
  • நடிகர்
  • சண்டைப் பயிற்சியாளர்
செயற்பாட்டுக்
காலம்
1959–2023

இரத்தினம் 2023 சனவரி 26 அன்று 92 தன் வயதில் குடியாத்தத்தில் இறந்தார்.[2][3]

திரைப்படவியல்

நடிகராக

தயாரிப்பாளராக

  • 1980 ஒத்தையடி பாதையிலே

விருதுகளும் கௌரவங்களும்

குறிப்புகள்

  1. "Judo. K. K. Rathnam Antru Kanda Mugam". Wordpress.com. 15 May 2015. https://antrukandamugam.wordpress.com/2015/05/15/judo-k-k-rathnam/. 
  2. "Legendary stunt choreographer Judo Rathnam passes away at 92". Cinema Express. 26 January 2023. https://www.cinemaexpress.com/tamil/news/2023/jan/26/legendary-stunt-choreographer-judo-rathnam-passes-away-at-92-39286.html. 
  3. "பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் காலமானார்" (in ta). https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/934511-south-indian-film-stunt-master-judo-rathinam-passes-away-death.html. 
  4. "Judo. K. K. Rathnam takes place in the Guinness Books of Records". Thina Boomi. 1 June 2013. http://www.thinaboomi.com/news/2014/05/25/21395.html. 
  5. "Appreciation Ceremony conducted for Judo. K. K. Rathnam who had won Sankaradas Swamigal Award". Dina Mani. 19 December 2016. https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2016/dec/19/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2617761.html. 
  6. "Kalaimamani awards after 8 years: 201 artistes get awards". Deccan Chronicle. 1 March 2019. https://www.deccanchronicle.com/nation/current-affairs/010319/kalaimamani-awards-after-8-years-201-artistes-get-awards.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜூடோ._கே._கே._இரத்தினம்&oldid=22201" இருந்து மீள்விக்கப்பட்டது