எம். ஜி. ஆர். திரை வரலாறு
ம. கோ. இராமச்சந்திரன் 1936 தொடங்கி 1987 வரை திரைப்பட உலகில் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். அவர் நடித்த, இயக்கிய திரைப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
உள்ளடக்கம் | ||||||
---|---|---|---|---|---|---|
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் | ||||||
1930–1939 | 1940–1949 | 1950–1959 | 1960–1969 | 1970–1978 | 1990–1991 |
நடித்த, இயக்கிய திரைப்படங்கள்
1930 களில்
வரிசை எண் |
ஆண்டு | திரைப்படம் | தயாரிப்பு நிறுவனம் |
கதாபாத்திரம் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
1 | 1936 | சதிலீலாவதி | மனோரமா பிலிம்ஸ் | ஆய்வாளர் ரெங்கைய நாயுடு | எல்லிஸ் ஆர். டங்கன் | முதல் திரைப்படம், சிறு வேடம். |
2 | 1936 | இரு சகோதரர்கள் | பரமேஸ்வரி சௌண்ட் பிக்சர்ஸ் | இளம் முஸ்லிம் இளைஞன் | எல்லிஸ் ஆர். டங்கன் | சிறு வேடம் |
3 | 1938 | தட்சயக்ஞம் | மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் | விஷ்ணு | ராஜா சந்திரசேகர் | புராணப்படம் |
4 | 1938 | வீர ஜெகதீஸ் | வி. எஸ். டாக்கீஸ் | பையன் | டி. பி. கைலாசம் ஆர். பிரகாஷ் |
|
5 | 1939 | மாயா மச்சீந்திரா | மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் | சூரியகேது | ராஜா சந்திரசேகர் | |
6 | 1939 | பிரகலாதா | சலீம் சங்கர் பிலிம்ஸ் | இந்திரன் | பி. என். ராவ் | புராணப்படம் |
1940 களில்
தொடர் வரிசை எண் |
ஆண்டு | திரைப்படம் | தயாரிப்பு நிறுவனம் |
கதாபாத்திரம் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
7 | 1941 | வேதவதி (சீதா ஜனனம்) | சியாமளா பிக்சர்ஸ் | இந்திரஜித் | டி. ஆர். ரகுநாத் | |
8 | 1941 | அசோக் குமார் | முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி | தளபதி மகேந்திரன் | ராஜா சந்திரசேகர் | எம். கே. தியாகராஜ பாகவதருடன் நடித்த முதல் படம் |
9 | 1942 | தமிழறியும் பெருமாள் | உமா பிக்சர்ஸ் | சந்தானம் | டி. ஆர். ரகுநாத் | |
10 | 1943 | தாசிப் பெண் (ஜோதிமலர்) | புவனேஸ்வரி பிக்சர்ஸ் | கௌரவ நடிகர் | எல்லிஸ் ஆர். டங்கன் | |
11 | 1944 | ஹரிச்சந்திரா | ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பெனி | ஒரு அமைச்சர் | கே. பி. நாகபூஷணம் | பி. யு. சின்னப்பாவுடன் நடித்த முதல் திரைப்படம் |
12 | 1945 | சாலிவாகனன் | பாஸ்கர் பிக்சர்ஸ் | விக்ரமாதித்யன் | பி. என். ராவ் | வில்லனாக நடித்தார் |
13 | 1945 | மீரா | சந்திரப்பிரபா சினிடோன் | தளபதி ஜெயமல் | எல்லிஸ் ஆர். டங்கன் | |
14 | 1946 | ஸ்ரீ முருகன் | ஜூபிடர் பிக்சர்ஸ் | பரமசிவன் | எம். சோமசுந்தரம் வி. எஸ். நாராயண் |
புராணப்படம். சிவ - பார்வதி நடனத்தில் சிவன் வேடத்தில் நடனமாடினார். ஜூபிடர் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம் |
15 | 1947 | ராஜகுமாரி | ஜூபிடர் பிக்சர்ஸ் | மோகன் | ஏ. எஸ். ஏ. சாமி | கதாநாயகனாக நடித்த முதல் படம் |
16 | 1947 | பைத்தியக்காரன் | என். எஸ். கே. பிலிம்ஸ் | மூர்த்தி | கிருஷ்ணன்-பஞ்சு | இரண்டாவது கதாநாயகன் |
17 | 1948 | அபிமன்யு | ஜூபிடர் பிக்சர்ஸ் | அர்ச்சுனன் | எம். சோமசுந்தரம் ஏ. காசிலிங்கம் |
|
18 | 1948 | ராஜ முக்தி | நரேந்திர பிக்சர்ஸ் | மகேந்திரவர்மன் | ராஜா சந்திரசேகர் | வி. என். ஜானகி, பி. பானுமதி இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஆனால் எம். ஜி. ஆருக்கு ஜோடியாக அல்லாமல் எம். கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடி சேர்ந்து நடித்தனர். |
19 | 1948 | மோகினி | ஜூபிடர் பிக்சர்ஸ் | தளபதி விஜயகுமார் | லங்கா சத்தியம் | இரண்டாவது கதாநாயகன். வி. என். ஜானகியுடன் ஜோடியாக நடித்த முதல் படம். டி. எஸ். பாலையா பிரதான பாத்திரத்தில் மாதுரிதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். |
20 | 1949 | ரத்னகுமார் | முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி | பாலதேவன் | கிருஷ்ணன்-பஞ்சு | பி. பானுமதி கதாநாயகியாக நடித்த முதல் படம். ஆனால் அவர் கதாநாயகனாக நடித்த பி. யு..சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்தார். எம். ஜி. ஆர். துணை நடிகர். |
1950 களில்
தொடர் வரிசை எண் |
ஆண்டு | திரைப்படம் | தயாரிப்பு நிறுவனம் |
கதாபாத்திரம் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
21 | 1950 | மருதநாட்டு இளவரசி | ஜி. கோவிந்தன் அன் கோ. | காண்டீபன் | ஏ. காசிலிங்கம் | ராஜகுமாரிக்குப் பின்னர்.தனிக் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படம். |
22 | 1950 | மந்திரி குமாரி | மாடர்ன் தியேட்டர்ஸ் | தளபதி வீரமோகன் | எல்லிஸ் ஆர். டங்கன் | மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம். |
23 | 1951 | மர்மயோகி | ஜூபிடர் பிக்சர்ஸ் | இளவரசன் கரிகாலன் | கே. ராம்நாத் | |
24 | 1951 | ஏக்தா ராஜா | ஜூபிடர் பிக்சர்ஸ் | இளவரசன் கரிகாலன் | கே. ராம்நாத் | மர்மயோகி இந்திப் பதிப்பு |
25 | 1951 | சர்வாதிகாரி | மாடர்ன் தியேட்டர்ஸ் | பிரதாப் வீரன் | டி. ஆர். சுந்தரம் | |
26 | 1951 | சர்வாதிகாரி | மாடர்ன் தியேட்டர்ஸ் | பிரதாப் வீரன் | டி. ஆர். சுந்தரம் | சர்வாதிகாரி தெலுங்கு பதிப்பு |
27 | 1952 | அந்தமான் கைதி | ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் | நடராஜ் | வி. கிருஷ்ணன் | (இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பின்னணி) |
28 | 1952 | குமாரி | ஆர். பத்மநாபன்-ராஜேஸ்வரி | விஜயன் | ஆர். பத்மநாபன் | கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். திரைப்படம் |
29 | 1952 | என் தங்கை | அசோகா பிக்சர்ஸ் | ராஜேந்திரன் | சி. ஹெச் நாராயணமூர்த்தி | எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் முதல் திரைப்படம் |
30 | 1953 | நாம் | ஜூபிடர் மேகலா பிக்சர்ஸ் | குமரன் | ஏ. காசிலிங்கம் | எம் ஜி ஆர் எம் ஜி சக்ரபாணி, கருணாநிதி, பி எஸ் வீரப்பா கூட்டு தயாரிப்பு |
31 | 1953 | ஜெனோவா | சந்திரா பிக்சர்ஸ் | சிப்ரெக்கா | எஃப். நாகூர் | முதல் மலையாள திரைப்படம் |
32 | 1953 | ஜெனோவா | சந்திரா பிக்சர்ஸ் | சிப்ரெக்கா | எஃப். நாகூர் | மலையாளப் படத்தின் தமிழ் பதிப்பு |
33 | 1954 | பணக்காரி | உமா பிக்சர்ஸ் | ஆபீசர் சௌந்தர் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | |
34 | 1954 | மலைக்கள்ளன் | பட்சிராஜா ஸ்டூடியோஸ் | மலைக்கள்ளன் அப்துல் ரஹீம் குமாரதேவன் |
எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு | |
35 | 1954 | கூண்டுக்கிளி | ஆர். ஆர். பிக்சர்ஸ் | தங்கராஜ் | டி. ஆர். ராமண்ணா | சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரே திரைப்படம் |
36 | 1955 | குலேபகாவலி | ஆர். ஆர். பிக்சர்ஸ் | தாசன் | டி. ஆர். ராமண்ணா | விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம் |
37 | 1956 | அலிபாபாவும் நாற்பது திருடர்களும் | மாடர்ன் தியேட்டர்ஸ் | அலி பாபா | டி. ஆர். சுந்தரம் | முதல் முழுநீள தமிழ் வண்ணப் படம் (கேவா கலர்) |
38 | 1956 | மதுரை வீரன் | கிருஷ்ணா பிக்சர்ஸ் | வீரன் | டி. யோகானந்த் | எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் இரண்டாவது திரைப்படம் |
39 | 1956 | தாய்க்குப்பின் தாரம் | தேவர் பிலிம்ஸ் | முத்தையன் | எம். ஏ. திருமுகம் | தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம் |
40 | 1957 | சக்கரவர்த்தித் திருமகள் | உமா பிக்சர்ஸ் | உதயசூரியன் | ப. நீலகண்டன் | ப. நீலகண்டன் இயக்கத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம் |
41 | 1957 | ராஜ ராஜன் | நீலா புரொடக்சன்ஸ் | இளவரசன் ராஜராஜன் | டி. ஆர். சுந்தரம் | |
42 | 1957 | புதுமைப்பித்தன் | சிவகாமி பிக்சர்ஸ் | இளவரசன் ஜீவகன் | டி. ஆர். ராமண்ணா | |
43 | 1957 | மகாதேவி | ஸ்ரீ கணேஷ் மூவிடோன் | தளபதி வல்லபன் | சுந்தர் ராவ் நட்கர்ணி | |
44 | 1958 | நாடோடி மன்னன் | எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் | மார்த்தாண்டன் வீராங்கன் |
எம். ஜி. ராமச்சந்திரன் | தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம் பி. சரோஜாதேவியுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் |
45 | 1959 | தாய் மகளுக்குக் கட்டிய தாலி | கல்பனா கலா மந்திர் | கனகு | ஆர். ஆர். சந்திரன் | ஜமுனாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம். சி. என். அண்ணாதுரை கதை, வசனத்தில் நடித்த முதல் திரைப்படம். |
1960 களில்
தொடர் வரிசை எண் |
ஆண்டு | திரைப்படம் | தயாரிப்பு நிறுவனம் |
கதாபாத்திரம் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
46 | 1960 | பாக்தாத் திருடன் | சதர்ன் மூவீஸ் | அலி | டி. பி. சுந்தரம் | வைஜயந்திமாலாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம் |
47 | 1960 | ராஜா தேசிங்கு | கிருஷ்ணா பிக்சர்ஸ் | தேசிங்கு ராஜன் மொகமட்கான் |
டி. ஆர். ரகுநாத் | எஸ். எஸ். ராஜேந்திரனுடன் சேர்ந்து நடித்த முதல் திரைப்படம். எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் மூன்றாவது திரைப்படம் |
48 | 1960 | மன்னாதி மன்னன் | நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் | இளவரசன் மணிவண்ணன் | எம். நடேசன் | |
49 | 1961 | அரசிளங்குமரி | ஜூபிடர் பிக்சர்ஸ் | அறிவழகன் | ஏ. எஸ். ஏ. சாமி ஏ. காசிலிங்கம் |
நடித்த கடைசி ஜூபிடர் நிறுவன திரைப்படம் |
50 | 1961 | திருடாதே | ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ் | பாலு | ப. நீலகண்டன் | |
51 | 1961 | சபாஷ் மாப்பிளே | ராகவன் புரொடக்சன்ஸ் | வாசு | எஸ். ராகவன் | |
52 | 1961 | நல்லவன் வாழ்வான் | அரசு பிக்சர்ஸ் | முத்து | ப. நீலகண்டன் | சி. என். அண்ணாதுரை கதை, வசனம் எழுதினார் |
53 | 1961 | தாய் சொல்லைத் தட்டாதே | தேவர் பிலிம்ஸ் | போலீஸ் ஆஃபீசர் ராஜு | எம். ஏ. திருமுகம் | |
54 | 1962 | ராணி சம்யுக்தா | சரஸ்வதி பிக்சர்ஸ் | பிரிதிவிராஜன் | டி. யோகானந்த் | எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் நாலாவது திரைப்படம் |
55 | 1962 | மாடப்புறா | பி. வி. என். புரொடக்சன்ஸ் | ராமு | எஸ். ஏ. சுப்பாராமன் | |
56 | 1962 | தாயைக்காத்த தனயன் | தேவர் பிலிம்ஸ் | வேட்டைக்காரன் சேகர் | எம். ஏ. திருமுகம் | |
57 | 1962 | குடும்பத் தலைவன் | தேவர் பிலிம்ஸ் | வாசு | எம். ஏ. திருமுகம் | |
58 | 1962 | பாசம் | ஆர். ஆர். பிக்சர்ஸ் | கோபி | டி. ஆர். ராமண்ணா | எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் ஐந்தாவது திரைப்படம் |
59 | 1962 | விக்ரமாதித்தன் | பாரத் புரொடக்சன்ஸ் | ராஜா விக்ரமாதித்தன் | டி. ஆர். ரகுநாத் என். எஸ். ராமதாஸ் |
|
60 | 1963 | பணத்தோட்டம் | சரவணா பிலிம்ஸ் | செல்வம் | கே. சங்கர் | கே. சங்கர் இயக்கத்தில் நடித்த முதல் படம் சரவணா பிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடித்த முதல் படம். |
61 | 1963 | கொடுத்து வைத்தவள் | ஈ. வி. ஆர். பிக்சர்ஸ் | முருகன் கட்டிட ஒப்பந்தக்காரர் செல்வம் |
ப. நீலகண்டன் | |
62 | 1963 | தர்மம் தலைகாக்கும் | தேவர் பிலிம்ஸ் | டாக்டர் சந்திரன் | எம். ஏ. திருமுகம் | |
63 | 1963 | கலை அரசி | சரோடி பிரதர்ஸ் | மோகன் வேற்றுக்கோள் கோமாளி |
ஏ. காசிலிங்கம் | |
64 | 1963 | பெரிய இடத்துப் பெண் | ஆர். ஆர். பிக்சர்ஸ் | அழகப்பன்/முருகப்பன் | டி. ஆர். ராமண்ணா | |
65 | 1963 | ஆனந்த ஜோதி | ஹரிஹரன் பிலிம்ஸ் | பள்ளி ஆசிரியர் ஆனந்த் | வி. என். ரெட்டி | தேவிகாவுடன் நடித்த ஒரே திரைப்படம் |
66 | 1963 | நீதிக்குப்பின் பாசம் | தேவர் பிலிம்ஸ் | வழக்கறிஞர் கோபால் | எம். ஏ. திருமுகம் | |
67 | 1963 | காஞ்சித்தலைவன் | மேகலா பிக்சர்ஸ் | நரசிம்ம பல்லவன் | ஏ. காசிலிங்கம் | |
68 | 1963 | பரிசு | கௌரி பிக்சர்ஸ் | இரகசிய போலீஸ் வேணு | டி. யோகானந்த் | |
69 | 1964 | வேட்டைக்காரன் | தேவர் பிலிம்ஸ் | பாபு, வேட்டைக்காரன் | எம். ஏ. திருமுகம் | |
70 | 1964 | என் கடமை | நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் | போலீஸ் ஆபீசர் நாதன் | எம். நடேசன் | |
71 | 1964 | பணக்கார குடும்பம் | ஆர். ஆர். பிக்சர்ஸ் | நல்ல தம்பி | டி. ஆர். ராமண்ணா | |
72 | 1964 | தெய்வத்தாய் | சத்யா மூவீஸ் | சிபிஐ அதிகாரி மாறன் | பி. மாதவன் | |
73 | 1964 | தொழிலாளி | தேவர் பிலிம்ஸ் | தொழிலாளி ராஜு | எம். ஏ. திருமுகம் | |
74 | 1964 | படகோட்டி | சரவணா பிலிம்ஸ் | மீனவர் மாணிக்கம் | டி. பிரகாஷ் ராவ் | நடித்த முதல் ஈஸ்ட்மன் வண்ண திரைப்படம் |
75 | 1964 | தாயின் மடியில் | அன்னை பிலிம்ஸ் | ஜாக்கி ராஜா | ஏ. சுப்பா ராவ் | |
76 | 1965 | எங்க வீட்டுப் பிள்ளை | விஜயா கம்பைன்ஸ் | ராமு (ராமன்) இளங்கோ (லட்சுமணன்) |
சாணக்யா | இரட்டை வேடங்களில் |
77 | 1965 | பணம் படைத்தவன் | ஆர். ஆர். பிக்சர்ஸ் | ராஜா | டி. ஆர். ராமண்ணா | |
78 | 1965 | ஆயிரத்தில் ஒருவன் | பத்மினி பிக்சர்ஸ் | மணிமாறன் | பி. ஆர். பந்துலு | ஜெயலலிதாவுடன் சேர்ந்து நடித்த முதல் படம் |
79 | 1965 | கலங்கரை விளக்கம் | சரவணா பிலிம்ஸ் | வழக்கறிஞர் ரவி | கே. சங்கர் | |
80 | 1965 | கன்னித்தாய் | தேவர் பிலிம்ஸ் | கேப்டன் சரவணன் | எம். ஏ. திருமுகம் | |
81 | 1965 | தாழம்பூ | ஸ்ரீ பாலமுருகன் பிலிம்ஸ் | துரை (பட்டதாரி) | என். எஸ். ராமதாஸ் | |
82 | 1965 | ஆசை முகம் | மோகன் புரொடக்சன்ஸ் | மனோகர், வஜ்ரவேலு | பி. புல்லையா | |
83 | 1966 | அன்பே வா | ஏவி. எம். புரொடக்சன்ஸ் | பாலு/முதலாளி ஜே. பி. | ஏ. சி. திருலோகச்சந்தர் | |
84 | 1966 | நான் ஆணையிட்டால் | சத்யா மூவீஸ் | பாஷா அல்லது பாண்டியன் | சாணக்யா | |
85 | 1966 | முகராசி | தேவர் பிலிம்ஸ் | போலீஸ் அதிகாரி ராமு | எம். ஏ. திருமுகம் | ஜெமினி கணேசனோடு சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம் |
86 | 1966 | நாடோடி | பத்மினி பிக்சர்ஸ் | தியாகு | பி. ஆர். பந்துலு | |
87 | 1966 | சந்திரோதயம் | சரவணா பிலிம்ஸ் | பத்திரிகையாளர் சந்திரன் | கே. சங்கர் | |
88 | 1966 | தாலி பாக்கியம் | வரலட்சுமி பிக்சர்ஸ் | முருகன் | கே. பி. நாகபூஷணம் | |
89 | 1966 | தனிப் பிறவி | தேவர் பிலிம்ஸ் | இரும்புத்தொழிலாளி முத்தையா | எம். ஏ. திருமுகம் | |
90 | 1966 | பறக்கும் பாவை | ஆர். ஆர். பிக்சர்ஸ் | ஜீவா, டாக்சி ஓட்டுநர் | டி. ஆர். ராமண்ணா | |
91 | 1966 | பெற்றால்தான் பிள்ளையா | ஸ்ரீ முத்துக்குமரன் பிக்சர்ஸ் | ஆனந்தன் (அனாதை) | கிருஷ்ணன்-பஞ்சு | எம். ஆர். ராதாவுடன் சேர்ந்து நடித்த இருபத்தைந்தாவதும் இறுதியுமான திரைப்படம் |
92 | 1967 | தாய்க்குத் தலைமகன் | தேவர் பிலிம்ஸ் | மருது | எம். ஏ. திருமுகம் | இத்திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாள் (12. சனவரி 1967) எம். ஜி. ஆரை எம். ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினார். |
93 | 1967 | அரச கட்டளை | சத்தியராஜா பிக்சர்ஸ் | விஜயன் | எம். ஜி. சக்ரபாணி | எம். ஜி. ஆரோடு பி. சரோஜாதேவி நடித்த கடைசித் திரைப்படம் |
94 | 1967 | காவல்காரன் | சத்யா மூவீஸ் | மணி (ஓட்டுநர்) | ப. நீலகண்டன் | |
95 | 1967 | விவசாயி | தேவர் பிலிம்ஸ் | முத்தையா | எம். ஏ. திருமுகம் | |
96 | 1968 | ரகசிய போலீஸ் 115 | பத்மினி பிக்சர்ஸ் | ராமு, ரகசிய போலீஸ் 115 | பி. ஆர். பந்துலு | |
97 | 1968 | தேர்த் திருவிழா | தேவர் பிலிம்ஸ் | சரவணன் (ஒரு காட்சியில் எம். ஜி. ஆர்) |
எம். ஏ. திருமுகம் | |
98 | 1968 | குடியிருந்த கோயில் | சரவணா ஸ்க்ரீன்ஸ் | ஆனந்த் பாபு (சேகர்) |
கே. சங்கர் | |
99 | 1968 | கண்ணன் என் காதலன் | சத்யா மூவீஸ் | "பியானோ" கண்ணன் | ப. நீலகண்டன் | |
100 | 1968 | ஒளி விளக்கு | ஜெமினி ஸ்டூடியோஸ் | முத்து | சாணக்யா | ஜெமினி நிறுவனத்தில் நடித்த ஒரே திரைப்படம். இலங்கையில் வெள்ளி விழா கொண்டாடியது. |
101 | 1968 | கணவன் | வள்ளி பிலிம்ஸ் | வேலையா | ப. நீலகண்டன் | |
102 | 1968 | புதிய பூமி | ஜே. ஆர். மூவீஸ் | டாக்டர் கதிரவன் | சாணக்யா | |
103 | 1968 | காதல் வாகனம் | தேவர் பிலிம்ஸ் | சுந்தரம் | எம். ஏ. திருமுகம் | |
104 | 1969 | அடிமைப் பெண் | எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் | வேங்கைமலை அரசன் (தந்தை) இளவரசன் வேங்கையன் (மகன்) |
கே. சங்கர் | சொந்த தயாரிப்பு |
105 | 1969 | நம் நாடு (1969 திரைப்படம்) | விஜயா இன்டர்நேஷனல் | துரை | சி. பி. ஜம்புலிங்கம் |
1970 களில்
தொடர் வரிசை எண் |
ஆண்டு | திரைப்படம் | தயாரிப்பு நிறுவனம் |
கதாபாத்திரம் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
106 | 1970 | மாட்டுக்கார வேலன் | ஜெயந்தி பிலிம்ஸ் | வேலன் ரகுநாத் |
ப. நீலகண்டன் | இரட்டை வேடம் |
107 | 1970 | என் அண்ணன் | வீனஸ் பிக்சர்ஸ் | ரெங்கன் | ப. நீலகண்டன் | |
108 | 1970 | தலைவன் | தாமஸ் பிக்சர்ஸ் | இரகசிய போலீஸ் இளங்கோ | பி. ஏ. தாமஸ் சிங்கமுத்து |
|
109 | 1970 | தேடிவந்த மாப்பிள்ளை | பத்மினி பிக்சர்ஸ் | சங்கர் | பி. ஆர். பந்துலு | |
110 | 1970 | எங்கள் தங்கம் | மேகலா பிக்சர்ஸ் | தங்கம் | கிருஷ்ணன்-பஞ்சு | |
111 | 1971 | குமரிக்கோட்டம் | கே. சி. பிலிம்ஸ் | கோபால் | ப. நீலகண்டன் | |
112 | 1971 | ரிக்ஷாக்காரன் | சத்யா மூவீஸ் | செல்வம் | எம். கிருஷ்ணன் நாயர் | சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது |
113 | 1971 | நீரும் நெருப்பும் | நியூ மணி ஜே சினி புரொடக்சன்ஸ் | இளவரசன் மணிவண்ணன் இளவரசன் கரிகாலன் |
ப. நீலகண்டன் | இரட்டை வேடம் |
114 | 1971 | ஒரு தாய் மக்கள் | நாஞ்சில் புரொடக்சன்ஸ் | கண்ணன் | ப. நீலகண்டன் | |
115 | 1972 | சங்கே முழங்கு | வள்ளி பிலிம்ஸ் | முருகன் | ப. நீலகண்டன் | லட்சுமியுடன் ஜோடியாக நடித்த முதல் திரைப்படம் |
116 | 1972 | நல்ல நேரம் | தேவர் பிலிம்ஸ் | ராஜு | எம். ஏ. திருமுகம் | தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் நடித்த இறுதி திரைப்படம் |
117 | 1972 | ராமன் தேடிய சீதை | ஜெயந்தி பிலிம்ஸ் | கோடீஸ்வரர் எஸ். ஜே. ராமன் | ப. நீலகண்டன் | |
118 | 1972 | நான் ஏன் பிறந்தேன் | காமாட்சி ஏஜென்சீஸ் | கண்ணன் | எம். கிருஷ்ணன் நாயர் | |
119 | 1972 | அன்னமிட்ட கை | ராமச்சந்திரா புரொடக்சன்ஸ் | துரைராஜ் | எம். கிருஷ்ணன் நாயர் | நடித்த கடைசி கருப்பு-வெள்ளை திரைப்படம் |
120 | 1972 | இதய வீணை | உதயம் புரொடக்சன்ஸ் | சௌந்தரம் | கிருஷ்ணன்-பஞ்சு | திமுக உறுப்பினராக இறுதி திரைப்படம் |
121 | 1973 | உலகம் சுற்றும் வாலிபன் | எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் | முருகன் ராஜு |
எம். ஜி. ராமச்சந்திரன் | தயாரித்து இயக்கிய இரண்டாவது திரைப்படம் |
122 | 1973 | பட்டிக்காட்டு பொன்னையா | வசந்த் பிக்சர்ஸ் | பொன்னையா முத்தையா |
பி. எஸ். ரெங்கா | ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்த கடைசிப் படம் |
123 | 1974 | நேற்று இன்று நாளை | அமல்ராஜ் பிலிம்ஸ் | மாணிக்கம் என்ற ரத்தினம் குமார் |
ப. நீலகண்டன் | |
124 | 1974 | உரிமைக்குரல் | சித்ராலயா பிலிம்ஸ் | கோபிநாத் (கோபி) | சி. வி. ஸ்ரீதர் | ஸ்ரீதர் இயக்கத்தில் நடித்த முதல் திரைப்படம் |
125 | 1974 | சிரித்து வாழ வேண்டும் | உதயம் புரொடக்சன்ஸ் | இன்ஸ்பெக்டர் ராமு உஸ்தாத் அப்துல் ரஹ்மான் |
எஸ். எஸ். பாலன் | |
126 | 1975 | நினைத்ததை முடிப்பவன் | ஓரியன்டல் பிக்சர்ஸ் | சௌந்தரம் (பாடகன்) ரஞ்சித் குமார் (வியாபாரி) |
ப. நீலகண்டன் | எஸ். ஏ. அசோகனுடன் நடித்த 59 ஆவதும் இறுதியுமான திரைப்படம் |
127 | 1975 | நாளை நமதே | கஜேந்திரா பிலிம்ஸ் | சங்கர் விஜயகுமார் |
கே. எஸ். சேதுமாதவன் | |
128 | 1975 | இதயக்கனி | சத்யா மூவீஸ் | போலீஸ் அதிகாரி மோகன் | ஏ. ஜெகந்நாதன் | ராதா சலூஜாவுடன் நடித்த முதல் திரைப்படம் |
129 | 1975 | பல்லாண்டு வாழ்க | உதயம் புரொடக்சன்ஸ் | ராஜன் (சின்னையா - உதவி சிறை அதிகாரி) | கே. சங்கர் | |
130 | 1976 | நீதிக்குத் தலைவணங்கு | ஸ்ரீ உமையாம்பிகை புரொடக்சன்ஸ் | விஜே | ப. நீலகண்டன் | |
131 | 1976 | உழைக்கும் கரங்கள் | கே சீ பிலிம்ஸ் | ரெங்கன் | கே. சங்கர் | 30 வருடங்களுக்கு முன் ஸ்ரீ முருகன் திரைப்படத்தில் ஆடியபின் இத்திரைப்படத்தில் பரமசிவனாக நடனம் ஆடினார். |
132 | 1976 | ஊருக்கு உழைப்பவன் | வீனஸ் பிக்சர்ஸ் | போலீஸ் அதிகாரி செல்வம் தொழிலதிபர் ராஜா |
எம். கிருஷ்ணன் நாயர் | |
133 | 1977 | இன்றுபோல் என்றும் வாழ்க | சுப்பு புரொடக்சன்ஸ் | விவசாயி முருகன் | கே. சங்கர் | ராதா சலூஜாவுடன் நடித்த இரண்டாவதும் இறுதியுமான திரைப்படம் |
134 | 1977 | நவரத்தினம் | சி. என். வி. மூவீஸ் | கோடீஸ்வரர் தங்கம் | ஏ. பி. நாகராஜன் | 9 நடிகைகளுடன் நடித்தார். |
135 | 1977 | மீனவ நண்பன் | முத்து எண்டர்பிரைசஸ் | குமரன் | ஸ்ரீதர் | |
136 | 1978 | மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் | சோலேஸ்வர் கம்பைன்ஸ் | பைந்தழிழ் குமரன் அல்லது இளவரசன் சுந்தர பாண்டியன் |
எம். ஜி. ராமச்சந்திரன் கே. சங்கர் |
1990 களில்
தொடர் வரிசை எண் |
ஆண்டு | திரைப்படம் | தயாரிப்பு நிறுவனம் |
கதாபாத்திரம் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
137 | 1990 | அவசர போலீஸ் 100 | சுதா சினி மூவீஸ் | ராஜு | கே. பாக்யராஜ் | முடிக்கப்படாத அண்ணா நீ என் தெய்வம் என்ற எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம் இத் திரைப்படத்துடன் சேர்க்கப்பட்டது. எம். என். நம்பியாருடன் சேர்ந்து நடித்த கடைசி திரைப்படம் |
138 | 1991 | நல்லதை நாடு கேட்கும் | ஜேப்பியார் பிக்சர்ஸ் | ஜேப்பியார் எம். கர்ணன் |
இதே தலைப்பில் எம். ஜி. ஆர். நடித்து ஜே. ஆர். மூவீஸ் தயாரித்த திரைப்படம் இத்திரைப்படத்துடன் சேர்க்கப்பட்டது. |
முடிக்கப்படாத, வெளியிடப்படாத திரைப்படங்கள்
திரைப்படம் | குறிப்புகள் |
---|---|
சாயா | "முதல் கதாநாயகன்" - கதாநாயகி : டி. வி. குமுதினி – 1941 இல் வெளிவரவிருந்தது |
சிலம்புக் குகை | - 1956 இல் வெளிவரவிருந்தது |
மலை நாட்டு இளவரசன் | - 1956 இல் வெளிவரவிருந்தது |
குமாரதேவன் | - 1956 இல் வெளிவரவிருந்தது |
ஊமையன் கோட்டை | - 1956 இல் வெளிவரவிருந்தது |
ரங்கோன் ராதா | |
உத்தம புத்திரன் | - இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்த படம் வந்ததால் கைவிடப்பட்டது. பின்னர் நீரும் நெருப்பும் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. |
வாழப் பிறந்தவன் | - வித்துவான் வி. லட்சுமணன் தயாரித்து எஃப். நாகூர் இயக்கத்தில் 1957 இல் வெளிவரவிருந்தது |
பவானி | 1957 இல் வெளிவரவிருந்தது. கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுதி கூட்டு தயாரிப்பு
அஞ்சலி தேவி கதைநாயகி.படம் இருபதாயிரம் அடி வளந்த நிலையில் நின்றது. எம் ஜி ஆர் கவிஞர் பங்கை கொடுத்து அவருக்கு நஷ்டம் இல்லாமல்; அதை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் க்கு வாங்கி கொண்டார். |
ஏழைக்கு காவலன் | - 1957 இல் வெளிவரவிருந்தது |
அதிரூப அமராவதி | - 1958 இல் வெளிவரவிருந்தது |
காத்தவராயன் | - 1958 இல் வெளிவரவிருந்தது - பின்னர் சிவாஜியை வைத்து எடுக்கும்படி எம். ஜி. ஆர். இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவிடம் சொன்னார். |
அட்வகேட் அமரன் | - எம். ஜி. ஆர். நாடகக் குழுவின் ஒரு நாடகம் – 1959 இல் வெளிவரவிருந்தது |
காணி நிலம் | - 1959 இல் வெளிவரவிருந்தது |
கேள்வி பதில் | - 1959 இல் வெளிவரவிருந்தது |
நடிகன் குரல் | - 1959 இல் வெளிவரவிருந்தது |
நாடோடியின் மகன் | - நாடோடி மன்னன் இரண்டாம் பாகம் – 1959 இல் வெளிவரவிருந்தது |
பொன்னியின் செல்வன் | - கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவல் – 1959 இல் வெளிவரவிருந்தது |
தென்னரங்க கரைi | - 1959 இல் வெளிவரவிருந்தது |
தூங்காதே தம்பி தூங்காதே | - 1959 இல் வெளிவரவிருந்தது இத்திரைப்படம் பின்னர் ஏவி எம் தயாரிப்பில் கமல் ஹாசன் நடித்து 1983 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. அப்போது எம். ஜி. ஆர். தமிழ் நாடு முதலமைச்சராக இருந்தார். |
கேரள கன்னி | - 1960 இல் வெளிவரவிருந்தது |
பரமபிதா | - சரவணா பிலிம்ஸ் தயாரித்து கே. சங்கர் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவர இருந்தது. சரோஜாதேவி உடன் நடிப்பதாகவும் வண்ணப் படம் எனவும் அறிவிக்கப்பட்டது |
மாடி வீட்டு ஏழை | - 1961 ஆம் ஆண்டு நடிகர் ஜே. பி. சந்திரபாபு தயாரித்த திரைப்படம். கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது. பின் 1981 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியானது. |
இது சத்தியம் | - 1962 இல் வெளிவரவிருந்தது கே. சங்கர் இயக்கத்தில் பின் எஸ். ஏ. அசோகன் நடித்து ஆகஸ்ட் 30, 1962 வெளியானது |
அன்று சிந்திய ரத்தம் | - ஸ்ரீதர் இயக்கத்தில் 1963 இல் வெளிவரவிருந்தது 6 வருடங்களின் பின்னர் சிவாஜி கணேசன் நடித்து வெளியானது |
மகன் மகள் | - 1963 இல் வெளிவரவிருந்தது |
வேலுத்தேவன் | - 1964 இல் வெளிவரவிருந்தது |
இன்ப நிலா | - 1966 இல் வெளிவரவிருந்தது |
ஏழைக்குக் காவலன் | - 1966 இல் வெளிவரவிருந்தது |
மறு பிறவி |
- தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது |
தந்தையும் மகனும் | - தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது |
கங்கையிலிருந்து கிரெம்ளின் வரை | - 1969 இல் வெளிவரவிருந்தது |
இணைந்த கைகள் | - எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் 1969 இல் வெளிவரவிருந்தது |
யேசுநாதர் |
- 1969 இல் வெளியாக இருந்தது. இந்தப் படத்தைத் தயாரிக்கவிருந்த பி. ஏ. தாமஸ் இரண்டு வருடங்களின் பின் தலைவன்தலைவன் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். |
அணையா விளக்கு | - 1973 இல் வெளியாகவிருந்தது பின்னர் இதே அணையா விளக்கு என்ற பெயரில் மு. க. நடித்து வெளிவந்தது. |
கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு | - உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாவது பாகமாக எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் எம். ஜி. ஆருக்கு நேரமின்மை காரணமாக கைவிடப்பட்டது. |
மக்கள் என் பக்கம் | - 1974 இல் வெளியாகவிருந்தது. சத்யராஜ் நடித்து, பின்னர் வெளிவந்த மக்கள் என் பக்கம் இதனோடு தொடர்புடையதல்ல. |
சமூகமே நான் உனக்குச் சொந்தம் | - 1974 இல் வெளியாகவிருந்தது. லதா ஜோடியாக நடிக்கவிருந்தார். |
தியாகத்தின் வெற்றி | - 1974 இல் வெளியாகவிருந்தது |
நானும் ஒரு தொழிலாளி | - ஸ்ரீதர் இயக்கத்தில் 1975 இல் வெளியாகவிருந்தது. - இதே [[நானும் ஒரு தொழிலாளி தலைப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த திரைப்படம் 1986 இல் வெளியானது. |
அமைதி | - 1976 இல் வெளியாகவிருந்தது |
அண்ணா நீ என் தெய்வம் | - ஸ்ரீதர் இயக்கத்தில் 1976 இல் வெளியாகவிருந்தது முடிக்கப்படாத இத்திரைப்படத்தின் சில காட்சிகளை வைத்து எம். ஜி. ஆர். இறந்தபின் இயக்குநர் கே. பாக்யராஜ் அவசர போலீஸ் 100 என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரித்து வெளியிட்டார். |
புரட்சிப் பித்தன் | - 1976 இல் வெளியாகவிருந்தது |
நல்லதை நாடு கேட்கும் | - 1977 இல் வெளியாகவிருந்தது 5% படமாக்கப்பட்டிருந்தது. அதையும் சேர்த்து இதே பெயரில் ஜேப்பியார் 1991 ஆம் ஆண்டு இன்னொரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். |
அக்கரைப் பச்சை' | - 1978 இல் வெளியாகவிருந்தது |
கேப்டன் ராஜா | - 1978 இல் வெளியாகவிருந்தது |
இளைய தலைமுறை | - 1978 இல் வெளியாகவிருந்தது |
இதுதான் பதில் | - கே. சங்கர் இயக்கத்தில் 2 பாடல்கள் பதிவாயின – 1980 இல் வெளியாகவிருந்தது |
உன்னை விட மாட்டேன் | - 1980 இல் வெளியாகவிருந்தது |